பேச்சு:சிங்களம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்த கட்டுரை, தரப்படுத்தப்பட்ட, தகவற் செறிவுள்ள, பயன்படுத்த இலகுவான, மொழிகள் தொடர்பான வளங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட விக்கித் திட்டம் மொழிகள் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபற்ற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


சில கேள்விகள்[தொகு]

இக்கட்டுரையில் //சிங்கள எழுத்துக்கள், கிமு 3ம் நூற்றாண்டளவில் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட, பண்டைய வட இந்தியப் பிராமி வரிவடிவங்களிலிருந்து வளர்ச்சியடைந்ததாகும்.// என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை //கிமு 6ம் நூற்றாண்டில், பயன்பாட்டிலிருந்த சில எழுத்துக்கள் திராவிட எழுத்து முறைமையிலிருந்து பெறப்பட்ட எழுத்துக்களால் மாற்றீடு செய்யப்பட்டன.// என்றும் குறிக்கப்பட்டுள்ளது.

  • 1. அதாவது பண்டைய வட இந்திய பிராமி வரிவடிவங்களிற்கு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பே //கிமு 6ம் நூற்றாண்டில், பயன்பாட்டிலிருந்த சில எழுத்துக்கள்…// இலங்கையில் இருந்ததா? அது எது?
  • 2. அது //திராவிட எழுத்துக்களால் மாற்றீடு செய்யப்பட்டன// திராவிட எழுத்துக்கள் என்று எந்த எழுத்து வடிவங்களை இங்கே குறிப்பிடப்படுகின்றது?
  • 3. அது பண்டைய வட இந்தியப் பிராமி வரிவடிவங்களுக்கு முன்பே மாற்றீடு செய்யப் பட்டதா? அல்லது அதற்கு பின்பா?

முன்பு ஒரு காலத்தில் உலகம் தட்டையானது என சில அறிஞர்கள் பிழையாக விளங்கிக்கொண்டார்கள். ஆனால் உலகம் உருண்டையானது. இக்கூற்று இன்று எல்லோராலும் மறுப்புக்கின்றி ஏற்கக்கூடியதாக உள்ளது.

அதேப்போன்று //சில அறிஞர்கள் சிங்கள மொழி ஒரு திராவிட மொழி எனப் பிழையாக விளங்கிக் கொண்டார்கள்.// எனும் இக்கூற்று இன்றையக் காலக்கட்டத்தில் எல்லோராலும் மறுப்புக்கின்றி ஏற்கக்கூடியதாக இருக்கின்றதா? ஒரு சாரர் “பிழையாக விளங்கிக்கொண்டார்கள்” என்று சுட்டிக்காட்டப் படுமானால், அவற்றை சரியானதாக மறுப்புக்கின்றி ஏற்றுக்கொள்ளும் வகையில் விளக்கங்கள் கொடுக்கப்படுவதே பொருத்தமானது என்று கருதுகின்றேன்.

இதே கட்டுரையில் //கி.மு ஐந்தாம் நூற்றாண்டளவில் வட மேல் இந்தியாவில் இருந்து இலங்கையில் இளவரன் விஜயன் உட்பட்டவர்கள் குடியேறுகின்றனர். இவர்களுடன் இந்தோ ஆரிய மொழிகளும் இலங்கைக்கு வந்து சேர்கின்றது.// என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியானால் (நூறு ஆண்டுகளுக்கு முன்பு) கி.மு 6ம் நூற்றாண்டில் பயன்பாட்டில் இருந்ததாக நீங்கள் குறிப்பிடும் மொழி/ மொழி வடிவம் எது என்று அறிந்துக்கொள்ளலாமா? அது ஆரிய மொழி வடிவங்களின் ஒன்றா?

இளவரசன் விஜயன் இலங்கைக்கு வருவதற்கு முன்பே இலங்கையில் ஆரியர் இருந்தனரா?

இவைக் குறித்து மேலும் தெளிவுற விரும்புகின்றேன்.

ஏனெனில் இலங்கைக்கு இளவரசன் விஜயன் வருவதற்கு முன்பு இயக்கர், நாகர் எனும் இனங்கள் இருந்ததாகவே நாம் கற்றோம். அவர்கள் திராவிடர்கள். எனவே இந்த சந்தேகங்களை மேலும் தெளிவுப்படுத்திக் கொள்ள விரும்புகின்றேன்.

கி.மு 5ம் நூற்றாண்டுகளின் விஜயன் இலங்கைக்கு வந்ததிலிருந்தே வரலாறுகள் இருப்பதால், விஜயனும் அவனுடன் வந்த 700 பேரும் ஆரியர்கள் என்று கூறிக்கொள்வதால் இலங்கை சிங்களவர்கள் எல்லோருமே எப்படி ஆரியர் ஆகினர்? (ஒருவேளை ஐரோப்பாவில் இருந்து 700 பேரும் ஒரு இளவரசனும் இலங்கைக்கு வந்திருந்தால் தம்மை ஐரோப்பியர் என்று சிங்களவர்கள் கூறிக்கொண்டிப்பரோ என்னவோ!)

விஜயன் இலங்கைக்கு வரும் முன் இலங்கையில் வாழ்ந்த மக்கள் யார்? ஆரியர்களா? திராவிடர்களா? இக்கட்டுரையில் கூறப்பட்டிருக்கும் கி.மு 6ம் நூற்றாண்டின் பயன்பாட்டிலிருந்தாகக் கூறும் மொழிக்கு உரியவர்கள் யார்?

தெளிவுறவே கேற்கின்றேன். நன்றி அருண் 18:58, 6 ஜனவரி 2009 (UTC)

இலங்கைச் சிங்களவர்கள் அனைவரும் ஆரியர் என்னும் கருத்து பிழையானதாகும். விஜயனும் அவனது தோழர்களும் இலங்கையை அடைந்தபோது இலங்கையில் இருந்த இயக்கர், நாகர் ஆகிய கோத்திரத்தவர்கள் திராவிடர்கள் எனச் சிலரால் கருதப்பட்ட போதிலும் அக்கோத்திரத்தவர்களின் நேரடி வழித்தோன்றல்களாகக் கருதப்படும் வேடுவர்களின் மொழியானது திராவிட மொழியொன்றாகக் கருதப்படுவதில்லை என்றே அறிகிறேன். மேலும், விஜயனும் அவனுடன் வந்தவர்களும் இயக்கர், நாகர் கோத்திரத்தவர்களுடனான திருமண உறவைக் கொண்டிருந்ததாகவும் அவர்களின் வழித்தோன்றல்களே சிங்களவர்கள் என்றும் மகாவம்சம் கூறுகிறது. பலாங்கொடை மனிதன் முதலான வரலாற்றுக்கு முந்திய படிமங்களை ஆதாரம் காட்டி, சிங்களவர்கள் ஆரியர்களோ திராவிடர்களோ அல்லாமல் தனியானதொரு இனம் எனும் கருத்து இப்போது தென்னிலங்கையில் வலுப்பெற்று வருகிறது.

மேலும், இங்கு உதாரணமாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் சிங்கள மொழிச் சொற்களிலும் அவற்றின் தமிழ் வரிவடிவத்திலும் பல்வேறு பிழைகள் காணப்படுகின்றன. பல்வேறு சிங்கள உயிர் ஒலிப்புக்களைச் சரிவரத் தமிழ் எழுத்துக்களில் எழுதுவது கடினம் என்பதால் அவற்றை நீக்கிவிடுவது அல்லது அவற்றுக்கான சிங்களச் சொற்களைச் சிங்கள எழுத்துக்களில் அடைப்புக்குறிக்குள் தருவது பொருத்தம் என நினைக்கிறேன்.--பாஹிம் 00:53, 4 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]

நிச்சயமாக இக்கட்டுரையில் உள்ள பல தகவல்கள் சர்ச்சைக்கு இடமானவை அல்லது பிழையானவை. சிங்களவர்களின் பார்வையில் எழுதப்பட்டிருக்கும் ஆங்கில விக்கிக் கட்டுரையில் இருந்து தகவல்கள் பெறப்பட்டதால் இவ்வாறு ஆகியிருக்கக்கூடும். சிங்கள மொழி பற்றிய ஆங்கிலக் கட்டுரையிலேயே முன்னுக்குப் பின் முரணான பல தகவல்கள் உள்ளன. இக் கட்டுரை முறையான, நம்பத்தகுந்த சான்றுகளுடன் கவனமாக, நடு நிலைமையுடன் திருத்தி எழுதப்பட வேண்டும். ஆங்கிலக் கட்டுரையில் கிமு ஆறாம் நூற்றாண்டினதாகக் குறிக்கப்பட்டிருக்கும் மட்பாண்ட எழுத்துக்கள் குறித்துச் சான்று தரப்பட்டுள்ளது. ஆனால் அச் சான்று அது சிங்கள எழுத்து என்று கூறவில்லை. அது பிராமியை ஒத்த வரிவடிவில் எழுதப்பட்டுள்ளதாம். அதுவும் ஒரு பெயர் மட்டுமே. மகாவம்சப்படி அக்காலத்தில் விஜயனே இலங்கைக்கு வந்திருக்கவில்லை.
தொடக்ககாலத்தில் வடகிழக்கு இந்தியாவில் இருந்து பெருமளவு குடியேற்றங்கள் இடம்பெற்றன என்ற ஆங்கிலக் கட்டுரையிலுள்ள கூற்றுக்குச் சான்றாகத் தரப்பட்டிருப்பவை ஊகத்தில் பேரில் எழுதப்பட்ட கட்டுரைகளே. இதற்கு இலக்கிய, தொல்லியல் சான்றுகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. --மயூரநாதன் 13:50, 4 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]

நீங்கள் சொல்வது சரியே. இலங்கையில் விஜயனின் வருகைக்கு முன்னர் வட இந்தியாவிலிருந்து குடியேற்றங்கள் ஏற்பட்டதற்கான உறுதியான சான்றுகள் எதுவும் இல்லை. விஜயனும் அவனுடைய தோழர்களும் ஆரியர்கள் என்பதாலும் அவர்கள் இலங்கையிலிருந்த இயக்கர், நாகர் கோத்திரத்தவர்களை வெற்றி கொண்டு ஆட்சியமைத்ததாலுமே சிங்கள மொழியில் வடமொழிச் செல்வாக்கு ஏற்பட்டது. மாறாக, சிங்களவர்கள் ஆரியர் எனும் வாதம் அபத்தமானதும் ஆதாரமற்றதும் ஆகும். விஜயன் குவேனியையும் அவனுடைய தோழர்கள் இயக்கர்,நாகர் குலங்களிலிருந்து வேறு பெண்களையும் மணந்து கொண்டனர். பிற்காலத்தில் அவர்கள் தென்னிந்தியப் பெண்களை மணந்து கொண்டனர் என மகாவம்சம் கூறுகிறது. அவ்வாறு வந்தவர்களுடைய குடும்பங்களும் இங்கு தங்கிவிட்டிருக்க முடியும். மேலும், இன்றைய சிங்களவர்களின் சாலிய குலத்தவர்களின் முன்னோர்கள் அனைவரும் தென்னிந்தியாவிலிருந்து பிற்காலத்தில் இடம்பெயர்ந்த தமிழர்களே என்பதற்கு ஏராளமான சான்றுகள் காணப்படுகின்றன. அவர்களின் வருகைக்கு வழி செய்தவர் இலங்கையில் அப்போது பிரபலமாயிருந்த ஒரு முஸ்லிம் வர்த்தகரே.

விஜயனையும் அவனுடைய தோழர்களையும் சிங்களவர்களென்று யாரும் அழைப்பதில்லை. சிங்கள மொழி அதற்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர்தான் வளர்ச்சி பெற்றது. மேலும், விஜயனின் வருகைக்கு முற்பட்ட காலத்தில் உரோம, அரேபிய, சீனக் கடலோடிகள் தங்களது வணிகப் பாதையின் இடைத் தங்கலுக்கான இடமாக இலங்கையைக் கொண்டிருந்ததற்கான சான்றுகள் காணப்படுகின்றன. அவர்கள் பயன்படுத்திய பொருட்களாகவே மேற்படி மட்பாண்டங்கள் இருக்க முடியும்.

சிங்கள இனத்தின் தோற்றம் குறித்து மகாவம்சம் கூறும் கதை இப்போதைய சிங்களவர்களாலேயே மறுக்கப்படுகிறது. சிறிது காலத்துக்கு முன் இலங்கையின் ஆங்கில நாளிதழொன்றில் அதற்கெதிரான விஞ்ஞானபூர்வமான வாதங்களை முன்வைத்து எழுதியிருந்தார்கள். மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆரம்பகால நிகழ்வுகள் குறித்த செய்திகள் கூட அவ்வளவு நம்பிக்குரியனவல்ல. ஏனெனில், மகாவம்சம் எழுதத் தொடங்கப்பட்டது விஜயனின் வருகைக்குப் பின்னர் பல நூற்றாண்டுகள் கழித்தேயாகும். அதனை எழுதத் தொடங்கிய பௌத்த பிக்குகள் தங்களுக்குச் சார்பான கருத்துக்களையே பல்வேறு இடங்களிலும் கூறியுள்ளனர். அதனாலேயே,பௌத்தத்துக்கு ஆதரவளிக்காத அரசர்களை மிகத் தாழ்த்தியும் அதற்கு ஆதரவளித்தவர்களை மிகப் புகழ்ந்தும் எழுதியுள்ளார்கள்.--பாஹிம் 06:19, 5 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]

இலங்கை வரலாறும் மனப்பிம்பங்களும்[தொகு]

- பாஹிம்

  • //இன்றைய சிங்களவர்களின் சாலிய குலத்தவர்களின் முன்னோர்கள் அனைவரும் தென்னிந்தியாவிலிருந்து பிற்காலத்தில் இடம்பெயர்ந்த தமிழர்களே என்பதற்கு ஏராளமான சான்றுகள் காணப்படுகின்றன. அவர்களின் வருகைக்கு வழி செய்தவர் இலங்கையில் அப்போது பிரபலமாயிருந்த ஒரு முஸ்லிம் வர்த்தகரே.// யாரவர்? பெயர் என்ன? அதற்கான ஆதாரம் என்ன?
  • //விஜயனின் வருகைக்கு முற்பட்ட காலத்தில் உரோம, அரேபிய, சீனக் கடலோடிகள் தங்களது வணிகப் பாதையின் இடைத் தங்கலுக்கான இடமாக இலங்கையைக் கொண்டிருந்ததற்கான சான்றுகள் காணப்படுகின்றன. அவர்கள் பயன்படுத்திய பொருட்களாகவே மேற்படி மட்பாண்டங்கள் இருக்க முடியும்.//

இதற்கான ஆதாரம் அல்லது ஏதாவது சான்று இருந்தால் தரவும்.

எவ்விதச் சான்றும் இல்லாத வெற்றுக் கூற்றுகள், அநேகமாக மத அடிப்படையிலான பிதற்றல்களாகவே இருக்கின்றன; அவை வெறும் மனப்பிம்பங்கள் மட்டுமே! மனப்பிம்பங்கள் வரலாறு ஆகாது. −முன்நிற்கும் கருத்து 219.78.91.69 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

இங்கு என்னிடம் ஆதாரம் வேண்டியும் பிதற்றல் எனக் கூறியும் என்னுடைய பேச்சுப் பக்கத்தில் என்னைத் தூற்றியும் உள்ள கோழையே! நீங்கள்தான் பிதற்றியிருக்கிறீர்கள். மதத்தையும் வம்புக்கு இழுக்கிறீர்கள். உண்மையைச் சொன்னால் உங்களைப் போன்ற குறுகிய மனப்பான்மை கொண்டவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஹிட்லரைப் போன்ற நாசிசவாதிகள் மற்ற இனங்கள் பற்றிய உண்மைகளைப் புரிந்துகொள்வதை வேண்டுமென்றே மறுக்கின்றனர். வலகம்பா மன்னன் பன்னிரண்டாயிரம் தமிழர்களைத் தென்னிந்தியாவிலிருந்து கொண்டுவந்து இலங்கையின் வடபகுதியில் குடியேற்றினான் என்ற வரலாற்றுச் செய்தியும் உங்களுக்குக் கசப்பானதாகவே இருக்கும். இச்செய்தி இலங்கைப் பாடசாலைகளில் வரலாற்றுப் பாடத்தில் கற்பிக்கப்படுகிறது. பாண்டிய மன்னனொருவன் தன்னுடைய மணிமுடியைச் சோழர்களிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள, இலங்கைச் சிங்கள மன்னனொருவனிடம்தான் ஒளித்து வைத்தான் என்பதை நாவலாசிரியர் சாண்டில்யன் அவர்கள் தன்னுடைய நாவலொன்றின் முகவுரையில் குறிப்பிட்டுள்ளார். கண்டியை ஆண்ட கடைசி மன்னர்கள் அறுவர் தமிழர்கள். அவர்களின் குடும்பத்தவர்களில் அநேகர் தற்காலச் சிங்களவர்களுடன் ஒன்றிப்போய், அவர்கள் யாரென்பதையே அறிய முடியாத அளவுக்கு ஆகிவிட்டுள்ளனர். அதற்கு முன்னிருந்த சிங்கள மன்னர்கள் பலரும் தென்னிந்தியாவிலிருந்து அழைத்துவரப்பட்ட தமிழ்ப் பெண்களையே திருமணம் செய்திருந்தனர். இதற்கெல்லாம் ஆதாரம் வேண்டினால், இலங்கைப் பாடசாலைகளில் கற்பிக்கப்படும் வரலாற்றுப் பாட நூல்களே போதும். அக்கால குடிபெயர்தல்கள் அரசியல் மற்றும் பொருளாதாரக் காரணங்களுக்காகவே அதிகமாக ஏற்பட்டுள்ளன. சிங்களவர்களின் சாலிய குலத்தவர்கள் தமிழர்களே என்பதற்கும் அவர்களை இலங்கைக்கு வரவழைத்தவர்கள் யாரென்பதற்கும் ஆதாரம்:

  • Ahmed Lebbe's ancestors landed in Ceylon in 1016 and the rulers recognising their services to the country gave them the following charter - "Periya Mudaliyar Marikar and his descedants are hereby exempted from punishment of either imprisonment or death and His Majesty being highly pleased with their services to his Government they shall at all times protected them from all troubles and difficulties. They shall be free to follow their own regligion and build mosques and seek places of worship on any land they choose. It shall be allowed them to also build ships and trade thereby with other countries".

(Sgd.) Bukman (Raja Weera Bukman)

For this special favour:

(1) Periya mudaly Marikar brought from Shaly mongalam in South India: seven men to carry the Royal Palanquin, the names of these men were 1. Waly Arashen 2. Walymuni 3. Waly Arunam 4. Waly Sulman 5. Wally Arashen 6. Para Mutti 7. Wallian.

(2) Periya Mudali Marikar looked after the post of Beruwala, and increased the population by bringing in new colonists from other parts.

Along with these seven men from South India many others, who are useful to the country came. Some were tailors and weavers and others were carpenters and traders. The King having been greatly pleased gave them all facilities to settle down in the land. They are the ancestors of the Salagama or Chaliya community.

Effendi, MSHI, Personages of the Past, MICH Inc., Colombo: 1982, pp 5-6.

மேற்குறிப்பிட்ட ஆதாரம் சிங்களவர்களின் சாலிய குலத்தவர்கள் தமிழர்களே என்பதைத் தெளிவாக நிரூபிப்பதுடன் அவர்களைத் தென்னிந்தியாவின் சாலி மங்கலம் பகுதியிலிருந்து இலங்கைக்குக் கொண்டுவந்தவர் பேருவளையில் வசித்த பெரிய முதலி மரிக்கார் என்பவர் என்பதையும் நிரூபிக்கிறது. விஜயனின் வருகைக்கு முன்னர் உரோம, அரேபிய, சீனக் கடலோடிகள் தங்கள் வணிகப் பாதையில் இடைத் தங்கலுக்கான இடமாக இலங்கையைக் கொண்டிருந்தமைக்குரிய ஆதாரங்களை வேறு சந்தர்ப்பத்தில் தருவேன்.--பாஹிம் 03:01, 17 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

தனிநபர் தாக்குதல்களை தவிர்க்கவும். ஆரோக்கியமாக, ஆதராபூர்வமாக கருத்தாடுதலே பண்பாகும். --Natkeeran 03:28, 17 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
பாஹிம், அவர் உங்களை வசைபாடினால், நீங்களும் அவரைத் தாக்க வேண்டாம் (அவர் தான் ஆரம்பித்துவைத்தார் என்றாலும்). அவரது கருத்துக்கு மட்டும் எதிர்வினையாற்றுங்கள். வசைச் சொற்களைப் புறந்தள்ளி விடுங்கள். எச்சரிக்கை செய்துள்ளோம். அதனைக் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து வசைபாடுவாரெனின் அவரை தடை செய்யலாம். --சோடாபாட்டில் 04:36, 17 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

நற்கீரன் மற்றும் சோடாபாட்டில் ஆகியோருக்கு நன்றி. உங்களுடைய அறிவுரையை ஏற்றுக்கொள்கிறேன்.--பாஹிம் 05:07, 17 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]


விஜயனின் வருகைக்கு முன்னர் உரோம, அரேபிய, சீனக் கடலோடிகள் இலங்கைக்கு வந்தமை பற்றி என்னிடம் ஆதாரம் கேட்கப்பட்டது. அதனை கீழே வழங்குகிறேன்.

The biological anthropology of Early Iron Age man in Sri Lanka is distinct from that of Balangoda Man, although the evidence from the only Megalithic site to have been assayed, Pomparippu (undated), suggests a certain degree of miscegenation. This could have occurred considerably prior to 500 BC (and after Bellan-bandi Palassa at 4500 BC) (ibid.: 736; Kennedy in Begley et al. 1981). What attracted these people who intruded on the scene at this early date? It is probable that the agricultural potential of Sri Lanka, notably its abundant supplies of water, with iron technology to subjugate the dense equatorial rainforest and heavy soils, was a major factor. Other attractions could have been the pearl banks in the northwest of the island (for Early Historic v. Mahroof 1992: 110), the major copper ore source at Seruvila, and the island's location as an entrepot for long-distance trade between Southeast Asia and West Asia (note that black pepper in pharaonic Egypt of the 2nd millennium BC could only have come from Kerala, Sri Lanka or Southeast Asia). Thereafter, Sri Lanka's attraction for settlers from further afield than South India appears to have gained rapidly. This swell coincided with the so-called Second Urbanisation of the Indo-Gangetic Plain (v. Allchin 1995). As mentioned earlier, Anuradhapura was at least 10 ha in extent by ca. 900 BC (perhaps much more). By then prehistoric stone tool technology had been completely superseded by that of iron at this site, other advanced traits being the manufacture of copper-alloy artefacts, high-quality pottery (notably Black and Red Ware), the breeding of cattle and horses, and the cultivation of rice. By 700-500 BC, Anuradhapura exceeded 50 ha. The phenomenon of the Indian Second Urbanisation would appear to have manifested itself unexpectedly early in Sri Lanka, either through rapid stimulus diffusion, or convergent evolution due to a stimulus from further afield such as long-distance trade, or (more likely) a combination of both. SU Deraniyagala, Director General of Archeology, Sri Lankan in "PRE- AND PROTOHISTORIC SETTLEMENT IN SRI LANKA".

இலங்கையில் குதிரைகள் இல்லை. ஆனால், கி.மு. 700-500 காலப் பகுதியில் இங்கு குதிரைகள் வளர்க்கப்பட்டன வெனின், அவை எங்கிருந்து வந்தன? கி.மு. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இலங்கையிலிருந்து அரேபியாவை அண்டிய எகிப்துக்கு மிளகு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இச்செய்திகளை மேற்படி கட்டுரையில் காணலாம்.--பாஹிம் 07:47, 14 ஏப்ரல் 2011 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சிங்களம்&oldid=742618" இலிருந்து மீள்விக்கப்பட்டது