பேச்சு:சமணர் கழுவேற்றம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சமணர் கழுவேற்றம் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


எண்ணாயிரம் சமணர் என்பது 8000 பேர் என்று ஆகாது. பாண்டி நாட்டு வணிகக் குழுக்களில் திசை ஐயாயிரத்து ஐநூற்றுவர் என்று ஒரு பிரிவுண்டு. அதனால் 5500 பேர் என்று எடுத்துக்கொள்ளக்கூடாது. அதே போல் எண்ணாயிரம் என்பது ஒரு குழுப்பெயரே. இதை ஆய்வு மூலம் ஒருவர் நிறுவியுள்ளார் விரைவில் அதற்கான மேற்கோளை செர்க்கிறேன். போலி வரலாற்று பகுப்பில் இருந்து இதை நீக்கவும் செய்கிறேன். இது போலி வ்ரலாறு அல்ல தவறாக புரிந்து கொள்ளப்பட்ட வரலாறு.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:29, 21 சனவரி 2013 (UTC)[பதிலளி]

தென்காசியார் கருத்துக்கு நானும் உடன்படுகிறேன். சமணர்களும், சைவர்களும் வாதத்தில் யார் தோற்கின்றனரோ அவர்களை கழுவேற்றாம் என்ற ஒப்பந்தப்படியே வாதத்தினை தொடங்கினார்கள். சமணர்கள் வாதத்தில் தோற்றதால் கழுவேற்றப்பட்டார்கள் என்று கேள்வியுற்றிருக்கிறேன். கழுவேற்றல் பல காலங்களாக பாரதத்தி்ல் இருந்த தண்டனை முறை என்பதையும் இங்கு பதிவு செய்கிறேன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:20, 7 மே 2013 (UTC)[பதிலளி]

"போலி வரலாறு" என்று இதைப் புறந்தள்ள இயலாது. இரு தரப்பு சான்றுகள் எவை, அவை எதைப் பற்றி பேசுகின்றன என்பதைத் தெளிவாகச் சொல்ல வேண்டும். கட்டுரையை விரிவு படுத்தி நடுநிலை நோக்கோடு மாற்ற முயன்றுள்ளேன். இந்தப் பகுப்பில் இருப்பது சரியானதே. கட்டுரை தெளிவாக இரு தரப்பு விடயங்களையும் சொல்கிறது எனவே பகுப்பில் இருந்தால் அது உண்மையாகிவிடும் என்று அஞ்சத் தேவையில்லை.--சோடாபாட்டில்உரையாடுக 07:41, 8 மே 2013 (UTC)[பதிலளி]

மேலும் காண்க - பகுப்பு பேச்சு:இந்து சமயமும் வன்முறையும்--சோடாபாட்டில்உரையாடுக 08:01, 8 மே 2013 (UTC)[பதிலளி]

இன்னும் சர்ச்சை நீடித்து கொண்டிருக்கையில் இது படுகொலை, 8000 சமணர் கொல்லப்பட்டனர், கட்டாய மதமாற்றம் என்று வார்ப்புரு இடுவது முறையாகாது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:29, 8 மே 2013 (UTC)[பதிலளி]

உடன்படுகிறேன். நீக்கியிருக்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 18:04, 8 மே 2013 (UTC)[பதிலளி]

தாய் மதம் சைவம்[தொகு]

இதில் தாய் மதமான சைவம் என்பது சர்ச்சைக்கூறிய வார்த்தை. மதம் என்று குரிப்பிட்டாலே போதுமானது என நினைக்கிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 05:04, 5 சூன் 2013 (UTC)[பதிலளி]

கிருபானந்த வாரியர் முதல் பலரும் தாய்மதம் என்ற சொல்லை கையாண்டுள்ளனர். சமணர்கள் வடக்கிலிருந்து வரும் முன்பே இங்கு சைவம் தளைத்திருந்தது என்பது அறிந்ததே. ஆதாரம் இணைத்தால் ஏற்றுக்கொள்வீர்களா?. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:12, 28 சூன் 2013 (UTC)[பதிலளி]

கிருபானந்த வாரியார் எழுத்துக்களுக்கு ஏற்றார் போல் விக்கிப்பீடியாவில் எழுதக் கூடாது. விக்கிப்பீடியா மத நூலல்லவே. அவர் ஒரு சமயத்தைச் சேர்ந்தவர். அதனால் அதை அவர் தாய் மதம் என்றே சொல்வார். நாம் நடுநிலையான மூன்றாம் நிலை மூலம் ஒன்றை அமைத்துக் கொண்டிருக்கிறோம். தொல்லியல் சான்றுகள் படி பாண்டியர் கி.மு. 600களில் இருந்து தமிழகத்தை ஆட்சி செய்கின்றனர். பாண்டியர் பற்றிய சமணப் பிராமிக் கல்வெட்டுகளே தமிழகத்தின் மன்னர்கள் பற்றிய முதன்மை தொல்லியல் சான்றுகள். அதுமட்டும் இல்லாமல் தமிழர் ஒவ்வொரு திணைக்கும் ஒவ்வொரு கடவுள் என்று வைத்து வழிபட்டனர். கவுரியர் என்ற பெயர் பாண்டியருக்கு இருப்பதால் அவர்கள் பெண் தெய்வ வழிபாட்ட்டை ஆதியில் உடையோர் எனக் கூறுவர். மற்றொரு பிரிவு தமிழர் இந்து சமண மதத்திற்கு முன்னர் இயற்கை வழிபாட்டையே பின்பற்றினர் எனக் கூறுவர். இத்தனை விடயங்கள் இருக்கையில் தாய் மதம் சைவம் என்ற சொற்பிரயோகம் தமிழகத்தின் ஒட்டு மொத்த மதமும் சங்ககாலத்துக்கு முன்னரே சைவமாக இருந்தது என்ற தவறான பின்பத்தை ஏற்படுத்தும். வேறு எந்த தமிழ் விக்கி கட்டுரையிலும் இப்படி எழுதப்படவில்லை.

குமரிக்கண்டத்தின் மதமே கவுரியைச் சார்ந்தது என்று நான் நம்புவேன். ஆனால் அதை விக்கிப்பீடியாவில் தாய்மதம் என்று எப்போதும் எழுதப் போவதில்லை.

\\ஆதாரம் இணைத்தால் ஏற்றுக்கொள்வீர்களா?.\\

சங்ககாலம் வரலாற்றாய்வாளர்கள் கருத்துப்படி கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் இருந்து தொடங்குகிறது. மாங்குளம் கல்வெட்டு சமண ஆதரவை சுட்டுகிறது. சமணர் கழுவேற்றம், கிருபானந்தனார் இவை எல்லாம் கி.பி. 600க்கு பிந்தியவை. நீங்கள் ஒருவேளை கி.மு. 300க்கு முற்பட்ட சிவன்-பாண்டியர் தொடர்பான ஆதாரங்களை கொண்டு வந்தாலும் அதை கிருபானந்தனார் கூறுவது போல் கூறுவது கலைக்களஞ்சியத்த்துக்கு பொருந்தாது.

சுருக்கமாக சொன்னால் நம்பிக்கை வேறு. மூன்றாம் நிலை மூலம் ஒன்றில் வரலாற்றை எழுதுவது வேறு.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 19:35, 28 சூன் 2013 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சமணர்_கழுவேற்றம்&oldid=1447234" இலிருந்து மீள்விக்கப்பட்டது