பேச்சு:கோளவுரு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நீளுண்டை[தொகு]

வணக்கம். பருநடு நீளுருண்டை, இளைநடு நீளுருண்டை கட்டுரைகள் குறித்த உரையாடல் இது. நீளுருண்டையின் சிறப்பு வகையான, spheroid-கோளவுரு எனவும் அதில் prolate spheroid-நெட்டைக் கோளவுரு; oblate spheroid-தட்டை நீளுருண்டை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கட்டுரையைத் தொடங்கியது நான்தான். இரு கட்டுரைகளும் இருவிதமாகப் பெயர்கள் தருகின்றன. ஒன்றாக மாற்றலாமா, (அவ்வாறு மாற்றினால் இரண்டில் எதைப் பொருத்தமானதாகக் கொள்வது) அல்லது மாற்றுப் பெயராகத் தரலாமா என்பது குறித்து உங்களது கருத்தைத் தெரிவிக்கவும்.நன்றி.--Booradleyp (பேச்சு) 16:13, 19 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

ஓ! நன்றி. நான் கோளவுரு கட்டுரையைப் பார்க்கவில்லை! நீளுருண்டை அல்லது நீளுண்டை என்பது பெயரில் ஒரு பகுதியாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கின்றேன். தட்டை நீளுண்டை, நெட்டை நீளுண்டை (அல்லது தட்டை நீளுருண்டை, நெட்டை நீளுருண்டை) என்று சொல்லலாம், எனக்கு மறுப்பு இல்லை. ஆனால் இந்த equitorial என்னும் சொல்லின் பயன்பாடு பல இடங்களில் தேவையாக இருப்பதாலேயே பருநடு, இளைநடு (மெலிநடு) என்னும் சொல்லாட்சியைத் தேர்ந்தேன், ஆனால் தட்டை, நெட்டை என்பன மிக அருமையான எளிய சொற்கள். அவற்றை முதன்மைப்படுத்துவதே நல்லது. ஆனால் கோளவுரு (கோளுரு) என்பதைவிட நீளுண்டை/நீளுருண்டை என்று இருப்பது நல்லது என்பது என் தனிக்கருத்து. --செல்வா (பேச்சு) 16:42, 19 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

ஆனால் மூன்று அச்சுகளில் இரண்டு சமமாக இருக்கும் நீளுருண்டை spheroid என்ற பெயரில் அழைக்கப்படுகிறதே. எனக்கும் spheroid -கோளவுரு என்ற பெயரில் இணக்கம் இல்லை. ஏனென்றால் அது கோளத்துக்கும் கோளவுருக்கும் இடையே குழப்பம் ஏற்படுத்துகிறது. spheroid என்பதற்கு கோளவுரு என்றில்லாமல் நீளுருண்டை எனச் சேர்ந்து வருமாறு பொருத்தமான தமிழ்ச் சொல்லைத் தேர்வு செய்யலாம் என நினைக்கிறேன். உங்கள் கருத்து? நன்றி.--Booradleyp (பேச்சு) 16:55, 19 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

சுழலுரு நீளுண்டை எனலாமா? (சற்று நீளமாக உள்ளது) (அதாவது நீள்வட்டத்தின் ஏதேனும் ஒரு முக்கிய அச்சைக் கொண்டு சுழன்றுருவாகும் நீளுண்டை)--செல்வா (பேச்சு) 17:01, 19 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

--செல்வா (பேச்சு) 18:30, 21 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

  • ellipsoid: நீள்வட்டவுரு, நீள்வட்டச் சுழலுரு, நீள்வட்டத்திண்மம்
  • spheroid: கோளவுரு, நீளுருண்டை,
  • prolate spheroid: நெட்டைக் கோளவுரு, இளைநடு நீளுருண்டை, நெட்டை நீளுருண்டை
  • oblate spheroid: தட்டைக் கோளவுரு, பருநடு நீளுருண்டை, தட்டை நீளுருண்டை

இவ்வாறு அழைப்பது பொருத்தமாக இருக்கும் எனத் தோன்றுகிறது. இக்கருத்து ஏற்கப்படுமானால், நீளுருண்டைக் கட்டுரையின் தலைப்பினை நீள்வட்டவுரு அல்லது நீள்வட்டச் சுழலுரு என மாற்ற வேண்டும். பயனர்களின் கருத்தளிப்புக்குப் பின் செயல்படலாம் என நினைக்கிறேன்.--Booradleyp (பேச்சு) 04:35, 1 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

Ellipsoid என்பது இரண்டு செங்குத்தான வெட்டுதளங்களிலும் நீள்வட்ட வடிவம் தரும் பொதுவான ஒரு திண்ம வடிவம், சுழலுருக்கள் (ஓர் அச்சைக் கொண்டு சீராகச் சுழல்வதால் உருவாகக்கூடிய திண்ம வடிவம்) அச்சுக்குச் செங்குத்தான திசையில் வட்ட வடிவான வெட்டுமுகங்களே தரும் (அச்சின் இடத்தைப் பொருத்து வெவ்வேறு விட்டங்கள் இருந்தாலும் அவை வட்டங்களே). எனவே சுழலுரு என்பதோ அல்லது வெறும் உரு என்பதோ பொருந்தாது என்று கருதுகின்றேன் (உரு என்பது கோடு போன்ற சமதளம் போன்ற வடிவங்களுக்கும் பொதுவான சொல். பரும உருவுக்கு மட்டும் இல்லை என்பதால்). ellipsoid என்பதை நீங்கள் சுட்டிய வண்ணமே நீள்வட்டத் திண்மம் என்று கூறுவது பொருந்தும் என்று நினைக்கின்றேன். prolate spheroid என்பதற்கு நெட்டை நீளுருண்டை என்றும் oblate spheroid என்பதைத் தட்டை நீளுருண்டை என்றும் சொல்லலாம் என்பது என் கருத்து. (என் கருத்துரைப்பதில் ஏற்பட்ட காலத் தாழ்ச்சிக்கு பொருத்தருள்க! நன்றி). சுழலுருவான நீளுருண்டைகளுக்கு இளைநடு, பருநடு என்னும் முன்னொட்டுகள் தந்தாலும் எனக்கு ஏற்பே. இள என்பதை விட இளை என்பது பொருந்தும். இளைத்திருப்பது வேறு இளமையாக இருப்பது வேறு என்பதால் இப்படிக் கூறுகின்றேன்.--செல்வா (பேச்சு) 18:12, 11 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

சரியான விளக்கம் அளித்தமைக்கு நன்றி செல்வா. இதன்படி நான் மேலே தந்த பெயர்களில் இப்பொழுது திருத்தியுள்ளதைப் பாருங்கள். அதன்படி மாற்றங்களைச் செய்து விடுகிறேன். ஏதாவது மாற்றம் தேவைப்படின் கூறவும்.--Booradleyp (பேச்சு) 13:50, 12 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கோளவுரு&oldid=1231810" இலிருந்து மீள்விக்கப்பட்டது