பேச்சு:குவாண்டம் நேரடுக்குமை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Superposition என்பதற்கு மீநிலை என்பது பொருந்தாது. Super என்பது பல இடங்களில் அளவுக்கு மீறிய, மிக மிக அதிகமான என்னும் பொருளில் வரும். எடுத்துக்காட்டாக மீகடத்தியம் (மீகடத்துமை), மீபாய்மியம் (super fluidity) அல்லது மீபாய்மையம். ஆனால் இங்குள்ள சூப்பர்பொசிசன் என்னும் சொல்லில் உள்ள சொல்லின் பொருள் ஒன்றம் மீது ஒன்றை அடுக்குவதை, ஒன்றோடு ஒன்றைக் கூட்டுவதை மட்டுமே குறிக்கின்றது. எனவே. இது குவாண்டம் நேரடுக்குமை எனலாம். --செல்வா 14:10, 21 ஜூன் 2008 (UTC)

நேரடுக்குமை என்பதில் நேர் என்பதன் பொருள் என்ன? இச் சொல்லில் வரும் Super, Superimposition இல் வரும் Super இன் பொருளை ஒத்தது என எண்ணுகிறேன். Superimposition என்பதற்கு மணவை முஸ்தாபாவின் அறிவியல் அகராதியில் மேற்சுமத்தீடு என்னும் சொல் தரப்பட்டுள்ளது. மயூரநாதன் 18:42, 21 ஜூன் 2008 (UTC)
Superposition என்பது நேர்க்கோட்டுத்தன்மையம் கொண்ட அமைப்புக்கே பொருந்தும். ஆதலால் இரட்டை வலுவாக நேரடுக்கு என்றேன்.Superposition என்பது ஒன்றன் மீது ஒன்று இடுவது. இதன் உட்கருத்து ஒன்றின் (தூண்டு) விளைவால் வேறொன்று (சார்பு) ஒரு குறிப்பிட்ட அளவு மாறும் எனில், பின்னர் பிறிதொரு (தூண்டு) விளைவால் அதே சார்பு பின்னொரு குறிப்பிட்ட அளவு மாறும் என்று கொள்வோம். இப்பொழுது அவ்விரு (தூண்டு) விளைவாலும் சார்பு இரண்டு தனித்தனி விளைவுகளின் நேரான கூட்டாக அமையும். இதனை கணிதக் குறியீடு வழி எளிதாகக் காட்டலாம்.
.
Superposition என்பது Linear superposition என்று நுட்பமாக உணரப்படுவது. எனவே நேரடுக்கு.
--செல்வா 22:35, 21 ஜூன் 2008 (UTC)
நன்றி செல்வா, நேரடுக்குமை என்றே மாற்றிவிடலாம். மயூரநாதன் 02:26, 22 ஜூன் 2008 (UTC)