பேச்சு:குடிமைப்பட்ட கால இந்தியா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மணியன், colonial என்பது குடியாக்குத்தல், குடிப்படுத்துதல், குடியுட்படுத்துதல், குடிமைப்படுத்தல் என்பது போன்ற பொருள் உடையதல்லவா? குடியேற்றம் என்பது ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டில் குடியாகச் சென்று சேர்தல். --செல்வா 18:10, 24 பெப்ரவரி 2012 (UTC)

செல்வா, ஏற்கெனவே த.வியில் குடியேற்றவாதம் கட்டுரை மற்றும் விக்சனரி இவற்றைக் கொண்டே இவ்வாறு பெயரிட்டேன். நீங்கள் ஓர் பொருத்தமான பெயருக்கு தலைப்பை மாற்றுவதில் எனக்கு மறுப்பில்லை.--மணியன் 18:31, 24 பெப்ரவரி 2012 (UTC)
Colonialism பொதுவாக "குடியேற்றவாதம்" என்று அழைக்கப்படுவதுண்டு. ஆனால் Colonial India என்பதை "குடியேற்றவாத இந்தியா" என்பது பொருந்தாது. மாறாக, பிரித்தானியர்கள் இந்தியாவைத் தம் ஆதிக்கத்துள் கொண்டுவந்தபோது இந்தியா அவர்களுக்கு "குடியேற்ற நாடாக" மாறியது. இந்தியாவோ "குடியேற்ற ஆதிக்கத்துக்கு உட்படுத்தப்பட்டது" (colonized). தவிர, civil, citizen, citizenship ஆகிய சொற்கள் குறிக்கும் கருத்துகளை வெளிப்படுத்தவும் "குடி", "குடிமை", "குடிமையுரிமை", "குடிமக்கள்" போன்ற சொற்களைத் தமிழில் பயன்படுத்திவருகிறோம். மற்றொரு கருத்து immigration. ஓரிடத்திலிருந்து (நாட்டிலிருந்து) மற்றோர் இடம்/நாடு சென்று "குடியேறுதல்". மேற்கூறிய அனைத்தையும் கருத்தில் கொண்டு தமிழ்ச் சொல்லாக்கம் நிகழ வேண்டும். செல்வா, மணியன் கருத்துகளை ஒட்டி, பரவலாகக் கருத்துப் பரிமாற்றம் தேவைப்படும் என நினைக்கிறேன்.--பவுல்-Paul 19:00, 24 பெப்ரவரி 2012 (UTC)
நன்றி மணியன், பவுல். *civil = குடிசார் *citizen = குடி (குடிமகன், குடமகள், குடிமக்கள்) *citizenship = குடியுரிமை, குடிமை *colony = (1) குடியிருப்பு, சேர்ந்துவாழுமிடம், (2) குடிமைப்படுத்தப்பட்ட நாடு, குடியான நாடு/மக்கள் *colonize குடிமைப்படுத்து, குடியாக்கு, (colonization = குடிமைப்படுத்துகை) *colonial = குடிமைப்படுத்திய (colonial India = குடிமைப்பட்ட இந்தியா) *emigration/immigration = குடிபெயர்தல்/குடியேறுதல் மாற்றுக்கருத்துகள் இருந்தால், கலந்து பேசலாம். தெளிவுபெற்றபின் சிறந்ததைத் தேர்ந்தெடுக்கலாம். --செல்வா 20:11, 24 பெப்ரவரி 2012 (UTC)
குடியேற்றவாத இந்தியா என்றால் இந்தியா குடியேற்றவாதக் கொள்கை கொண்டிருந்தது போல் ஒரு பொருள் வருகிறது தான். சங்க காலம், நவீன காலம் என்பது போல் குடியேற்றக்கால இந்தியா எனலாமா? (இரவி - கையொப்பம்)
செல்வா மேலே கொடுத்துள்ள சொல்லாக்கம் நன்றாக உள்ளது. ஒருசில சிந்தனைகள்: - வரலாற்றில் colonization அமைதியான முறையிலும் வன்முறையிலும் நிகழ்ந்துவந்துள்ளது. வன்முறையில் நிகழ்ந்த "அதிகாரத் திணிப்பு" சொல்லாக்கத்தில் வெளிப்பட வேண்டும் என்றால் "இங்கிலாந்து இந்தியாவில் "குடியேற்ற ஆதிக்கத்தை" ஏற்படுத்தியது எனலாம். மாறாக, ஆசிரியர்/ஊழியர் "குடியிருப்பு" ஏற்படுத்தப்பட்டது எனலாம்.

- வன்முறைக்கு உட்பட்டு, குடியேற்ற நாடாக மாற்றப்பட்ட நாடு "குடிமைப்பட்ட நாடு" என்பதைவிட, "குடியேற்றத் திணிப்புற்ற நாடு" எனலாம். எனவே colonial India என்பது "குடியேற்றத் திணிப்புற்ற இந்தியா" என்று வரலாமோ!--பவுல்-Paul 23:40, 24 பெப்ரவரி 2012 (UTC)

கருத்துக்களுக்கு நன்றி செல்வா, ரவி மற்றும் பவுல். மேற்காணும் உரையாடல்களில் ரவியின் குடியேற்றக்கால இந்தியாதலைப்பு கட்டுரையின் உள்ளடக்கத்திற்கு பொருத்தமாக இருக்கும். மொழிபெயர்ப்பு அளவில் செல்வாவின் பரிந்துரைகள் தெளிவாக உள்ளன. இவற்றை விக்சனரியிலும் போட்டு வைக்கலாம். என்னைப் போன்றவர்கள் அங்குதான் முதலில் தேடுகிறோம். வழமையான கலைச்சொற்களே எனக்கு சட்டென்று நினைவிற்கு வருவதில்லை. :*பவுல். குடியேற்றத் திணிப்புற்ற இந்தியா என்பது கருதுகோள் அளவில் சரியெனினும் விக்கியில் இந்தியச் சார்பு பார்வையாக கருதப்படலாம். :எனவே இணக்கமேற்பட்டால் குடியேற்றக்கால இந்தியா என மாற்றலாம்.--மணியன் 03:28, 25 பெப்ரவரி 2012 (UTC)
பவுல், அப்படிச் சொல்ல வேண்டாம் என நினைக்கின்றேன். (குடியேற்றத் திணிப்புற்ற). அடிமைப்பட்ட என்பது போல குடிமைப்பட்ட என்றாலே போதும். மணியன், குடியேற்றக்கால இந்தியா என்றாலும் பொருள் சரியன்று. குடிமைப்பட்ட கால இந்தியா அல்லது பிரித்தானியக் குடிமைக்குட்பட்ட இந்தியா என்றால் சரியாக இருக்கும் என்று நினைக்கின்றேன். --செல்வா 03:56, 25 பெப்ரவரி 2012 (UTC)
சரி, இங்கு பிரித்தானியா தவிர பிற நாடுகளின் குடிமைப்படுத்துதல்களுக்கும் பொதுவாக குடிமைப்பட்ட இந்தியா என்று மாற்றலாம். --மணியன் 04:31, 25 பெப்ரவரி 2012 (UTC)
தொகுக்க முனைந்த போது ஏதோ முரண்பாடு ஏற்பட்டு, இந்த உரையாடலைக் குழப்பிவிட்டது. மன்னிக்கவும். மணியன், "குடிமைப்பட்ட இந்தியா"வை விட "குடிமைப்பட்ட கால இந்தியா" அதிகப் பொருத்தம் என்று நினைக்கிறேன்.--பவுல்-Paul 04:58, 25 பெப்ரவரி 2012 (UTC)
மணியன் நன்றி. இப்பொழுது சரியான பொருள் தருவதாக உள்ளது.--செல்வா 15:02, 25 பெப்ரவரி 2012 (UTC)