பேச்சு:கின்டர்கார்ட்டின்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இதற்கு தமிழ்ப் பெயர் இல்லையா ??

இது ஒரு குறிப்பிட்ட கல்விமுறையின் அடையாளப் பெயராதலால் தமிழ் (ஆங்கிலத்தில் கூட) பெயர் கிடையாது.--மணியன் (பேச்சு) 05:06, 2 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]
பொதுவாக ஐரோப்பிய மூல மொழிச் சொற்களை ஆங்கிலத்தில் பெயர்த்து எழுதுவதில்லை. அதற்காக நாம் தமிழிலும் அதே பெயரைப் பயன்படுத்த வேண்டும் என்பதும் தவறு. உருசிய மொழியில் மழலைகளின் தோட்டம் எனவே தலைப்பிட்டிருக்கிறார்கள். அவ்வாறே அங்கு அழைக்கப்படுகிறது. மழலைகள் பள்ளி எனத் தலைப்பிடலாம்.--Kanags \உரையாடுக 13:05, 2 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]
எனக்கு ஒப்புமை இல்லை. மழலைகள் பள்ளி என்பது பொதுப்பெயர். நர்சரி பள்ளிகள், மான்டிசோரி பள்ளிகள் என பலதரப்பட்ட வகைகளை உள்ளடக்கி இருக்கலாம். தமிழில்தான் இருக்க வேண்டுமென்றால் நேரடியான மொழிபெயர்ப்பையாவது பயன்படுத்துங்கள். ஆங்கில வழக்கில் ஒருசொல் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு அதுவே பிராண்டடாக விடுகிறது. ஆனால் நம் சூழலில் இல்லை. இன்று நீங்கள் மழலைகள் பள்ளி என்கிறீர்கள், வேறொருவர் சிறார் பள்ளி எனக் குறிப்பார். நாளையே இது பச்சிளம் பாலர் பள்ளி என்று வேறொருவர் கூறுவார். எது எதனைச் சுட்டுகின்றது என்ற குழப்பம்தான் மிஞ்சும். --மணியன் (பேச்சு) 02:46, 3 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]
மணியனின் கருத்து சிந்திக்கத்தக்கது. LKG, UKG என்று எல்லா இடங்களிலும் இருந்தாலும் அதற்கும் செருமானிய கிண்டர் கார்டன் முறைக்கும் முற்றிலும் தொடர்பு இல்லாமல் இருக்கிறது. மழலையர் பள்ளி என்பதும் பொதுவான பள்ளியையே குறிக்கிறது. நேரடியாகத் தமிழ் பெயரை ஏற்கலாம் என்றால் மழலையர் தோட்டம் எனப் பெயரிடலாம்--இரவி (பேச்சு) 09:31, 3 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]