பேச்சு:காற்றுமெத்தை உந்து

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செல்வா, hovercarft இன் தமிழாக்கம் அது எப்படி இயங்குகிறது என்பதின் விவரணயாக உள்ளது. என் எண்ணத்தில் அதனால் பெயர் நீளமாகியுள்ளது. இதை நான் மாற்றியிருந்தால் சுலவூர்தி என்றிருப்பேன் ; ஏனெனில் சுலவு என்றால் hover about என்ற பொருளுண்டு.

செ.ப.த. அகராதிப் படி

சுலவு-தல் (p. 1534) [ culavu-tal ] 5 v. intr culavu. To revolve, move round, hover about; சுழலுதல். சுலவுற் றெதிர்போகிய தூவியனம் (நைடத. அன்னத். 45).--tr. 1. To whirl; சுழலச்செய்தல். (J.) 2. To coil round, as a cord; to surround; சுற்றுதல். அர வூறு சுலாய்மலை தேய்க்கும் (திவ். திருவாய். 7, 4, 2).--விஜயராகவன் 09:27, 14 பெப்ரவரி 2007 (UTC)


இரண்டாம் எண்ணத்தில் சுலவி என்பது சுலவூர்தியை விட கவர்ச்சியாக உள்ளது. சுலவு என்பது தமிழில் மட்டுமல்லாது, மற்ற தென்னிந்திய மொழிகளிலும் இருக்கலாம்.'திராவிட வே÷îசொல் அகராதி'யை பார்க்க.

1. 2693 Ta. ulavu (ulavi-), ulavu (ulavi-/ulay-): (page 234)

ride for recreation, take a jaunt, stroll or ramble, go in procession; ula procession; ulattu (ulatti-) to ride about, pass in procession; take out for a walk as a child, lead about as a horse; n. walking up and down for amusement, display or exercise, moving to and fro; culavu (culavi-) to revolve, move round, hover about; lantu to walk about, wander about; lattu to walk about, ride about; take out for a walk. Ma. ulavuka, ilavuka to take a walk; ulattuka to take for a walk (children, etc.). Pa. cul- to go

சுலவு என்பது உலாவு என்ற வேரிலிருந்து வருகிறது.--விஜயராகவன் 09:40, 14 பெப்ரவரி 2007 (UTC)

நன்றி விஜயராகவன்.உல் -> உலவு<->சுலவு பற்றி தேவநேயப்பாவாணர் மிக அழகாக விரித்து எழுதியுள்ளார். பெயர் நீளமாக உள்ளது உண்மைதான், ஆனால் பல சுருக்கமான பெயர்கள் சட்டென பொருள் விள்க்காமல் இருப்பதால் விடுத்தேன். சுலவி, சுலவூர்தி நல்ல ஆக்கங்கள் ஆனால் எல்லா ஊர்திகளும் ஒருவகையில் சுலவூர்திகள்தான். காற்றைக் கீழுந்தி ஊரும் ஓர் ஊர்தி என்பது கருவாக இருக்க வேண்டும் என எண்ணினேன். வளிக்கால் ஊர்தி, வளிமெத்தை ஊர்தி, காலுந்து (கால் = காற்று), காலூர்தி, கால்மிதவி என பல சொல்லாக்கங்களைக் கருதலாம். அதாவது ஒரு சொல்லைப் படித்த உடனே, முழுப்பொருள் உணர வேண்டும் என்பதில்லை, ஒரு சிறு குறிப்பு இருந்தாலே போதும். வழக்கத்தில் அது என்ன என உணரப்படும். ஆகவே சுலவி, சுலவூர்தி ஆகியவையும் பொருந்தும். ஆனால் மிகவும் பொதுவாக சுழலுவதைக் குறிப்பதால் சற்று தயங்குகிறேன். Helicopter க்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். எனவே helicopter க்கு உலங்கு, உலங்கூர்தி என்பதுடன் சுலவி, சுலவூர்தி ஆகிய சொற்களையும் பயன் படுத்தலாம் எனப் பரிந்துரைக்கிறேன். --செல்வா 12:30, 14 பெப்ரவரி 2007 (UTC)

HOVERCRAFTக்கு தமிழில் சுருக்கமாக "மெத்தூர்தி" எனலாமோ? -ராஜ்