பேச்சு:காற்பந்தாட்டம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இணைப்பு முன்மொழிவு[தொகு]

காற்பந்தாட்டம் என்னும் இக்கட்டுரை இருக்கும்போது அசோசியேஷன் கால்பந்து என்னும் தலைப்பில் இன்னொரு கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது. எனவே அசோசியேஷன் கால்பந்து கட்டுரையை இக் கட்டுரையுடன் இணைக்க வேண்டும் என முன்மொழிகிறேன். இது குறித்துப் பயனர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கவும். மயூரநாதன் 11:57, 16 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]

ஆங்கிலப் பெயர்களில் சிறிது குழப்பம் உள்ளது. ஆங்கிலத்தில் soccer என்பது அசோசியேஷன் கால்பந்தை குறிக்கிறது. football என்பது அசோசியேஷன் கால்பந்து, அவுஸ்திரேலியக் காற்பந்தாட்டம், International rules football, ரக்பி கால்பந்து, Rugby Union, Rugby League மற்றும் அமெரிக்கக் காற்பந்தாட்டம் என்று பல காற்பந்தாட்ட வகைகளையும் குறிக்கும். தமிழில் நாம் soccer (அசோசியேஷன் கால்பந்து) என்பதை காற்பந்தாட்டம் எனவும் எனையவற்றை அந்தந்தப் பெயர்களிலும் அழைக்கலாமா?--Kanags \பேச்சு 12:14, 16 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]
செய்யலாம். கட்டுரைகளில் அவற்றின் உள்ளடக்கங்கள் தெளிவாக வரையறை செய்யப்படுமானால் வாசிப்பவர்களுக்கும் பயனுள்ளதாக அமையும். மேற்காட்டிய இரண்டு கட்டுரைகளும் ஒரே விடயம் பற்றியே கூறுவதாகத் தெரிகிறது. கட்டுரைகள் இரண்டுமே "அசோசியேஷன் கால்பந்து", "கால்பந்து", "சாக்கர்" எல்லாம் ஒரு பொருள் தருவன என்றே கூறுவதாகத் தெரிகிறது. மயூரநாதன் 13:06, 16 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:காற்பந்தாட்டம்&oldid=3607244" இலிருந்து மீள்விக்கப்பட்டது