பேச்சு:காப்பி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காப்பி என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

தலைப்பு மாற்ற வேண்டுகோள்[தொகு]

விக்சனரியில் காப்பிக்கான தமிழ்ச் சொல்லாகக் குளம்பி என்பது தரப்பட்டு, விளக்கமும் தரப்பட்டுள்ளது. குளம்பி எனுந்தலைப்புக்குக் கட்டுரையை நகர்த்தலாமே! --மதனாகரன் (பேச்சு) 04:38, 18 மே 2012 (UTC)[பதிலளி]

தேநீர் போல் குளம்பி என்பது அவ்வளவு பரவலான சொல் இல்லை. காப்பி என்ற தலைப்பிலேயே நீடிக்கலாம்--இரவி (பேச்சு) 05:47, 18 மே 2012 (UTC)[பதிலளி]

ஆயினும் தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்துவதே நன்று. --மதனாகரன் (பேச்சு) 05:56, 18 மே 2012 (UTC)[பதிலளி]

மதனாகரன், காப்பி என்பது இந்திய, இலங்கைத் தமிழரிடையே வழக்கூன்றி விட்ட ஒரு சொல். சட்டை(=shirt) என்பது போல். எனவே தற்போதைக்கு குளம்பி என்ற தலைப்பை வழிமாற்றாகவும் கட்டுரையிலும் குறிப்பிட்டால் போதுமானது.--சிவக்குமார் \பேச்சு 06:07, 18 மே 2012 (UTC)[பதிலளி]
மதன், சிலர் காப்பியை கொட்டை வடி நீர் என்றும் சொல்கிறார்கள். ஆனால், எந்த தமிழ் மொழிபெயர்ப்புமே பரவலாக இல்லை. பேச்சு:பாலம் போன்ற உரையாடலை ஒத்ததே இது. தமிழ் விக்கிப்பீடியாவில் இயன்ற அளவு நல்ல தமிழ் என்ற அடிப்படையில் தகுந்த இடங்களில் எல்லாம் புழக்கத்தில் உள்ள தமிழ்ச் சொற்கள், முன்பு வழக்கில் இருந்த சரியான தமிழ்ச் சொற்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறோம். புதிய கலைச்சொற்களை உருவாக்கவும் செய்கிறோம். எனினும், 100% தூய தமிழ்ச் சொற்கள் என்ற நிலையை எட்ட இயலாது. தகுந்த இடங்களில் தமிழ் இலக்கணம் ஒப்பும் திசைச் சொற்கள் என்னும் கொள்கையை ஏற்றுக் கொள்ளலாம். கண்டவாறு கலப்புத் தமிழில் எழுதி மொழியைச் சிதைத்துவிடக்கூடாது. அதே வேளை, மிகு தூய்மைவாதம் பேணி, சமூகப் பயன்பாட்டில் இருந்து புறக்கணிக்கப்பட்டு விடக்கூடிய நிலைக்கும் செல்லாமல் இருக்க வேண்டும். நன்றி--இரவி (பேச்சு) 06:40, 18 மே 2012 (UTC)[பதிலளி]

பயன்பாட்டில் இல்லாத சொற்கள் ஏற்கனவே விக்கிப்பீடியாவில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. காண்டாமிருகம் என்பதை விட மூக்குக் கொம்பன் என்ற சொல் பொருத்தமாக இருப்பதால் அச்சொல் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. வைரசு என்பதற்குத் தீ நுண்மம் எனுந்தமிழாக்கம் வழங்கப்பட்டிருக்கிறது. புரோட்டோசோவா என்பதற்கு மூத்தவிலங்கு என்று தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. எனவே, குளம்பி என்றோ கொட்டை வடிநீர் என்றோ தமிழாக்கம் செய்வது பொருத்தமாகவே தோன்றுகின்றது. --மதனாகரன் (பேச்சு) 10:21, 18 மே 2012 (UTC)[பதிலளி]

மதன், நீங்கள் குறிப்பிட்டுள்ள எடுத்துக்காட்டுகள் அனைத்தும் காரணப்பெயர்கள். மூல மொழி காரணப்பெயராக இருக்கும் போது, அதனைத் தமிழாக்குவதால் அதன் பொருளும் புரிதலும் இன்னும் சிறக்கும் என்றால், பெரும்பாலும் அதைத் தமிழாக்கிப் பயன்படுத்த முனைகிறோம். சில வேளைகளில் மூல மொழிக் காரணப்பெயரை அப்படியே ஏற்பதும் உண்டு. சில வேளை, மூல மொழிக் காரணப்பெயரில் இருந்து மாறுபட்டுத் தமிழாக்குவதும் உண்டு. எடுத்துக்காட்டு: புகைப்படம், நிழற்படம், கணினி mouseஐக் குறிக்கும் சொடுக்கி ஆகிய சொற்கள். மூல மொழி இடுகுறிப்பெயராக இருந்தால் நாமும் அப்படியே ஏற்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை. நம்முடைய பயன்பாட்டுச் சூழலுக்கு ஏற்ப தமிழாக்குவதும் உண்டு. நிற்க :)
ஒரு பொருளுக்குப் பல வகையான பண்புகள் இருக்கும் போது அவற்றில் ஒன்றை மட்டும் கவனித்துப் பெயர் வைப்பதும் ஒரு வழக்கம் தான். ஆனால், அப்பொருளின் மற்ற பண்புகள், பயன்பாடுகளுக்கும் தொடர்புடைய சொல்லாக இருந்தால் நன்றாக இருக்கும். நாம் குடிக்கும் காப்பியை மட்டும் நினைத்து சொல் உருவாக்க முனைகிறோம். ஆனால், அதோடு தொடர்புடைய செடி, தொழில் துறைக்கும் சொல் தேவை. இந்த நோக்கில் கொட்டைச் செடி, கொட்டை தொழில் துறை என்று அழைக்க முடியாது என்பதால் அச்சொல்லை விட்டு விட்டுவோம். இந்தக் கொட்டை குளம்பு போல் உள்ளதால் குளம்பி என்று அழைக்க எண்ணலாம். ஆனால், காப்பி என்னும் சொல் இடுகுறிப்பெயரா காரணப்பெயரா என்று தெளிவில்லை. ஆங்கில விக்கிப்பீடியா, ஆங்கில விக்சனரி, Dictionary.com போன்ற தளங்கள் சொல் மூலப் பகுதியில் குளம்பி என்னும் பொருளைத் தரவில்லை. வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு காலகட்டங்களில் இருந்த சொல்வடிவங்களைத் தருகிறது. தமிழ் விக்சனரி மட்டும் குளம்பி என்னும் பொருளைத் தருகிறது. அதற்கு உசாத்துணையாக தேவநேயப்பாவாணரையும் பிரேசில் நாட்டவரின் மொழியையும் குறிப்பிடுகிறது. தமிழ் விக்சனரியின் அடிப்படையில் மட்டும் காப்பி என்பதற்கு குளம்பி என்பது தான் பொருள் என்ற முடிவுக்கு வர முடியவில்லை. உலகின் அனைத்து மொழிகளிலும் காப்பி அல்லது அதற்கு ஒத்த சொல் வழங்கி வருகிறது. Pizza போன்ற உணவுகளுக்கும் இது பொருந்தும். தேநீரில் உள்ள தே என்ற சொல் கூட பல மொழிகளில் வழங்குவது தான். நாம் மொழிபெயர்க்கவில்லை. எனவே, காப்பி என்ற சொல்லை ஏற்றுக் கொள்ளலாம் எனக் கருதுகிறேன். நன்றி--இரவி (பேச்சு) 19:02, 18 மே 2012 (UTC)[பதிலளி]

நன்றிகள்! மிகப் பொருத்தமான தனித் தமிழ்ச் சொல் இது வரை கிடைக்காத காரணத்தினால் தலைப்பு மாற்ற வேண்டுகோள் தற்போதைக்குக் கைவிடப்படுகிறது. --மதனாகரன் (பேச்சு) 15:58, 19 மே 2012 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:காப்பி&oldid=2290889" இலிருந்து மீள்விக்கப்பட்டது