பேச்சு:கவரிமா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கவரிமா என்ற இக்கட்டுரை, விக்கித் திட்டம் இந்தியத்துணைக்கண்டப் பாலூட்டிகள் என்னும் திட்டத்துள் அடங்கியதாகும்.

இத்திட்டக் கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடையவர், இத்திட்டத்தில் உறுப்பினராகலாம். இத்திட்டத்தில் பங்களிக்க விரும்புவர், இத்திட்டப் பக்கத்திற்குச் சென்றால், அங்கு நிறைவேற்ற வேண்டியப் பணிகளின், பட்டியலைக் காணலாம்.

நகர்த்துதல்[தொகு]

யாக் என்றிருந்த ஆங்கிலத் தலைப்பினைக் கவரிமா என்ற தலைப்புக்கு நகர்த்தியுள்ளேன். இவ்விலங்கையே திருவள்ளுவர் 969ஆவது குறளில்
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்
என்று குறிப்பிட்டுள்ளார் (கவரிமான் அல்ல... கவரிமா என்பதே சரியானது). --மதனாஹரன் (பேச்சு) 13:58, 9 ஏப்ரல் 2012 (UTC)

வள்ளுவர் குறிப்பிட்டுள்ளது இவ்விலங்கைத் தான் என்பதை நான் தகுந்த சான்றுகளுடன் கட்டுரையில் இணைக்க வேண்டும். --சிவக்குமார் \பேச்சு 20:59, 9 ஏப்ரல் 2012 (UTC)
கவரிமான், கவரிமா இரண்டும் வேறு வேறா.--Kanags \உரையாடுக 23:57, 9 ஏப்ரல் 2012 (UTC)

கவரிமான் எனத் தவறாகவே பலுக்கப்படுகின்றது. அது மான் இனம் அல்ல. கவரிமா என்று திருவள்ளுவர் குறிப்பிட்டதே தவறாகப் பலுக்கப்பட்டுள்ளது. விளக்கத்தை இங்கே பார்க்கலாம். இங்கே உள்ள கருத்தையும் பாருங்கள். கவரிமா என்பது Yak எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. Musk deer என்பதைக் கத்தூரி மான் என்று குறிப்பிடுவதே சரியாக அமையும். --மதனாஹரன் (பேச்சு) 02:52, 10 ஏப்ரல் 2012 (UTC)

இயற்கை ஆர்வலர் ச. முகமது அலியின் “இயற்கை: செய்திகள், சிந்தனைகள்” நூலில் பின்வரும் குறிப்பு பக். 104-இல் உள்ளது.

கவரி மா(டு) (Yak) அழிந்து வரும் கால்நடை விலங்குகளில் ஒன்று... இவ்விலங்கு பிழையாக கவரிமான் எனத் திரிந்து உள்ளது. இது மான் இனமல்ல மாட்டு இனம். (கவரி - மயிர் + மா - விலங்கு) வள்ளுவர் ’மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா’ என்றதை பகுத்தறிவியல் புரியா இலக்கியவாதிகள் மான் ஆக்கி அதை மானம் மரியாதையுடன் சேர்த்து குழப்பி விட்டனர்.

பூவுலகு இணைப்பிலும் இந்தக் குறிப்பையே சுட்டியுள்ளனர். மேலும், musk deer = கஸ்தூரி மான் (அ) கத்தூரி மான் என்பது வேறு. --பரிதிமதி (பேச்சு) 05:36, 13 ஏப்ரல் 2012 (UTC)

கத்தூரி மான் என்பதற்கு நானமா என்ற தமிழாக்கம் (கத்தூரி = நானம்) வழங்கப்படுகிறது. அத்தலைப்புக்குக் கட்டுரையை நகர்த்தியுள்ளேன். --மதனாகரன் (பேச்சு) 14:24, 9 மே 2012 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கவரிமா&oldid=1111143" இலிருந்து மீள்விக்கப்பட்டது