பேச்சு:கருமுட்டை தூண்டும் இயக்குநீர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கருமுட்டை தூண்டும் இயக்குநீர் உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

கருமுட்டை தூண்டும் இயக்குநீர்[தொகு]

இத்தலைப்பைவிட "Graafian follicle or ovarian follicle" (இலங்கை வழக்கு: கிராபியன் புடைப்புக் கலங்கள்) என்பதைத் தூண்டும் இயக்குநீர் என்பதுவே ஆங்கிலப் பெயரைத் தழுவி அமையகூடிய சொல்லாக்கமாக அமையும் எனக் கருதுகின்றேன். follicle என்பது இங்கு குழிப்பை என அழைக்கலாம். ஆனால் ஆண், பெண் இருபாலாரிடமும் தொழிற்படுவதாலும் இருவரிடையே germ cell உருவாக்கத்தைத் தூண்டுவதாலும் பொதுவான பெயராக மூலவுயிரணுத் தூண்டும் இயக்குநீர் எனலாம் என்பது எனது பரிந்துரை.

"கருமுட்டை தூண்டும் இயக்குநீர்" என்பது LH hormone இற்கே பொருத்தமாக அமைகின்றது. எனினும் corpus luteum - மஞ்சள் உடலம் (இலங்கை: மஞ்சட் சடலம்) உருவாக்கத்தால் Luteinizing hormone எனப்பெயர் வந்ததால் "மஞ்சள் உடலமாக்கு இயக்குநீர்" எனலாம்.--சி.செந்தி (உரையாடுக) 02:01, 21 மார்ச் 2018 (UTC)