பேச்சு:கணிதம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரை ஒரு விரிந்த அறிமுக கட்டுரையாக எழுதப்படவேண்டு. ஆனால், நேரடி மொழிபெயர்பை தவிர்ப்பது நன்று. மேலும், கணிதம் தமிழ் மரபில் ஆயப்பட்ட துறை, எனவே தமிழ் மரபில் தோன்றிய கணித கணக்குகள், கோட்பாடுகள் ஆகியவற்றை கோடிட்டு காண்பிப்பது நன்று. --Natkeeran 19:45, 12 ஜனவரி 2006 (UTC)

ஆம், பல கட்டுரைகளில் இதுபோல் நேரடி மொழிபெயர்ப்பைத் தவிர்க்க வேண்டும். மாறாக, ஆங்கில விக்கியில் உள்ள தகவல்களையும் உள்ளத்தில் பதிந்து கொண்டு, பிற மூலங்களையும் படித்துவிட்டு கட்டுரைகளை எழுதலாம். -- Sundar \பேச்சு 04:22, 13 ஜனவரி 2006 (UTC)

கணிதம் தமிழ் மரபில் ஆயப்பட்ட துறை என்று நற்கீரன் குறிப்பிட்டுள்ளார். இது பற்றிச் சற்று விளக்கமாக எழுதினால் பயனுள்ளதாக இருக்கும். வேதகாலக் கணிதம் தொடர்பாக இருக்கும் அக்கறைபோலத் தமிழ் மரபுக் கணிதம் பற்றி ஆய்வுகள் அதிகம் நடத்தப்பட்டிருப்பதுபோல் தெரியவில்லை. இக்கட்டுரை தற்போது ஒரு பட்டியலாகத்தான் இருக்கிறது. இத்துடன் கணிதம் பற்றிய அறிமுகமும் சேர்த்துக் கொள்ளப்படவேண்டியது அவசியமே. அதில் வேதகாலக் கணிதம், தமிழ் மரபுக் கணிதம், மற்றும் இருக்கக்கூடிய பலவகைக் கணிதங்கள் பற்றியும் குறிப்பிடலாம். தற்காலத்தில் இந்தியா, இலங்கை உட்பட உலகெங்கிலும் பரவலாக வழக்கிலுள்ள கணிதம் மேலைநாட்டு முறையைத் தழுவியது. பாடத்திட்டங்களிலும் இது ஒரு நியமமாகவே இன்று உள்ளது. எனவே அத்தகைய தலைப்புக்களில் கட்டுரைகள் வேண்டும்போது ஆங்கில விக்கிபீடியாவிலிருந்து மொழிபெயர்ப்பதில் தவறு இல்லை என்பது எனது கருத்து. இது விரைவானதும் இலகுவானதுமாகும். ஏற்கெனவே பலரால் பார்க்கப்பட்டிருப்பதால் பிழைகள் குறைவாக இருக்கவும் வாய்ப்பு உண்டு. தவிர மொழிபெயர்க்கப்பட்ட பின்னரும், மொழிபெயர்த்தவரும், ஏனைய பங்களிப்பாளர்களும், வேறு கருத்துக்களைச் சேர்க்கவோ, பொருத்தம் இல்லாதவற்றை நீக்கவோ முடியும். முதலிலேயே பல கட்டுரைகளை வாசித்து நாங்களாகவே கட்டுரைகளை எழுதுவது சந்தேகத்துக்கு இடமின்றி நல்லமுறைதான். ஆனால் இதற்கு அதிக வளங்களும் நேரமும் தேவை. எல்லோராலும் முடியாது. Mayooranathan 07:27, 13 ஜனவரி 2006 (UTC)

முற்றிலும் உண்மை. தமிழ் மரபில் கணிதம் பற்றி அறிய ஆவல். -- Sundar \பேச்சு 08:25, 13 ஜனவரி 2006 (UTC)


தற்கால கணிதம் மேற்குலக கணிதம் என்பதை முற்றிலும் மறுக்கின்றேன். குறிப்பாக எண்கள், பூச்சியம், குறுக்கணக்கு ஆகியவை இந்திய கணித முறைகள் அரேபியர்கள் மூலம் ஐரோப்பாவில் ஏழு அல்லது எட்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் வேர் ஊன்றியது. கணித வரலாற்று பதிவுகளில் அது ஒரு முக்கிய நிகழ்வாக பதியப்படுகின்றது. மேலும், தற்கால கணிதம் சீன, அரேபிய கணித்தல் முறைகளகளையும் உள்வாங்கிய ஒரு துறைதான். குறிப்பாக சீனாவில் புத்த பிக்குகள் வடிவியல் துறையை விரிவாக ஆய்ந்து உள்ளது தெளிவாகின்றது. எனினும் தற்கால கணிதத்தில் மேற்குலக பங்களிப்பே கணிதத்தை விரிவாக்கி ஒருமைப்படுத்தியது. நுண்கணிதம் மற்றும் நவீன கணித கண்டுபிடிப்புகள் பெரும்பாலும் மேற்குலகையே சாரும். குறிப்பாக பிரான்ஸ் நாட்டவர், ஆங்கிலேயேர், அமெரிக்கர் ஆகியவர்களே கணித்தலின் ஆராச்சி முன்னையில் செயல்படுகின்றார்கள்.


கணிதம் அனைத்து சமூகங்களிலும் எதோ ஒரு விதத்தில் இருந்திருக்கும். தமிழ் மரபில் வர்த்தகம், கட்டிடக்கலை, பஞ்சாங்கம் (நாட்காட்டி) குறித்தல் போன்றவற்றிக்கு கணிதம் பயன்பட்டிருந்ததை அறியமுடியும். ஒரு சில பழைய தமிழ் கணித ஓலை சுவடிகளை ஆசிய ஆராய்சி தமிழ் துறை நிறுவனம் ஆய்ந்து பதிப்பித்துள்ளது.


அவற்றின் உள்ளடக்கம் எனக்கு தெரியாது. தமிழ் மரபில் கணிதம் ஆயப்பட்டுள்ளது என்பது மட்டும்தான் உறுதி. அக்கணிதத்தின் நுணுக்கம் எனக்கு தெரியாது. இந்தியாவில் கணிதம் நன்கு நுணுக்கமாக வளர்ச்சி பெற்று இருந்தது என்று எண்ணும் பொழுது, தமிழ் மரபில் தோன்றிய கணிததின் பங்கும் குறிப்படத்தக்கதாக அமையலாம் என்பது எனது கருத்து. (அதற்காக சில "இந்துவாதிகள்" எல்லாம் வேதத்தில் இருந்தே வந்தது (புஸ்பக விமானம் உட்பட) என்று கூற முற்படவில்லை.)


மயூரநாதன், மீளாய்வில் கட்டுரைகளை மொழிபெயர்ப்பதில் பொதுவாக எனக்கு எந்த ஆட்சோபனையும் இல்லை. குறிப்பாக தமிழ் நடை நன்றாக அமையும் பொழுது மொழிபெயர்ப்பு என்றே தெரியாது. மொழிபெயர்பு இலகுவல்ல.


ஆனால் சில சந்தர்ப்பங்களில், குறிப்பாக வரலாறு சம்பந்தப்பட்ட விடயங்களில் மொழிபெயர்ப்பு எந்தளவுக்கு சிறந்தது எனபது நோக்கி எனக்கு சில தயக்கங்கள் உண்டு. ஆங்கில விக்கிபீடியாவில் ஐரோப்ப மைய பார்வை அல்லது அமெரிக்க மைய பார்வை உண்டு. அது ஏன் என்பதை விளங்கி கொள்ளலாம் ஆனால் ஏற்றுக்கொள்ள முடியாது. --Natkeeran 14:40, 13 ஜனவரி 2006 (UTC)

துறைசார் அறிஞர்களின் பங்களிப்பு தேவை[தொகு]

இத்துறையின் பல முனைகள் எனக்கும் பலருக்கும் பரிச்சியமானவைதான். ஆயினும் இந்தக் கட்டுரையை ஒரு பூரணமான அணுகுமுறையில் கட்டியெழுப்பப்பட வேண்டும். அதற்கு கணிதத் துறையில் அனுபவமுள்ள கணிதவியாளர்களின் பங்களிப்பு வேண்டும்.

ஆங்கிலக் கட்டுரையில் உள்ளதைப் பேன்று அப்படியே பிரதிபலிப்பது அவ்வளவு பொருத்தமில்லை. இன்னொரு விதமாக சொன்னால் ஆங்கிலக் கட்டுரையிடன் என்னால் அவ்வளவு ஒத்துப்போக முடியவில்லை. அதேவேளை அதை கவனத்தில் எடுக்காமல் நம்முடைய போக்கில் எழுதவும் முடியவில்லை.

இந்தக் கட்டுரையை எப்படி தொடர்ந்து துல்லியமாகவும் (detail) விரிவாகவும் (comprehensive) எழுதலாம் என்று பிறரின் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

--Natkeeran 01:16, 25 டிசம்பர் 2006 (UTC)

தமிழ்நாட்டு பாடப்புத்தக தலைப்புகள்[தொகு]

ஆண்டு 10[தொகு]

1 எண்ணியல்[தொகு]

2 அளவியல்[தொகு]

3 கணங்களும் சார்புகளும்[தொகு]

  • கணம் - Set
  • வெற்றுக்கணம் - Empty Set
  • கணச்செயல்கள் - Set Operations
  • இணைப்பற்ற கணங்கள்
  • கணத்தின் நிரப்பி
  • வெற்றுக்கணம்
  • இணைப்பகன்ற கணம்

--Natkeeran 00:46, 5 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கணிதம்&oldid=170951" இலிருந்து மீள்விக்கப்பட்டது