பேச்சு:கணக்காய்வு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கணக்காய்வு என்றால் Examination of accounts என்று பொருள். இது Auditingஇல் ஒரு பகுதி மட்டுமே. எனவே Audit என்னும் சொல்லின் முழுப்பொருளையும் வெளிப்படுத்தவில்லை. தமிழ்நாட்டில் இச்சொல்லைக் குறிக்க தணிக்கை என்னும் சொல் பயன்படுத்தப்படுகிறது. --பொன்னிலவன் (பேச்சு) 09:13, 30 சூலை 2012 (UTC)[பதிலளி]

தணிக்கை நல்ல சொல்லாகத் தெரியவில்லை. censor என்பதும் தணிக்கை தானே. இரண்டையும் வேறுபடுத்த புதுச் சொல் ஒன்றை தமிழகத் தமிழறிஞர்கள் முயலவில்லை என்பது வருத்தத்துக்குரியது. தணிக்கையிலும் விட இலங்கையில் பயன்படுத்தப்படும் கணக்காய்வே சிறந்தது எனப்படுகிறது.--Kanags \உரையாடுக 09:19, 30 சூலை 2012 (UTC)[பதிலளி]
Audit என்ற ஆங்கிலச் சொல்லின் வீச்சு கணக்குகளையும் கடந்து முறைமைகளை ஆய்வதை உள்ளடக்கியது. இது வரவு செலவுகளைத் தவிர பிற துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. எனவே முறைமை ஆய்வு போன்ற சொல்லாக்கம் பொருத்தமாக இருக்கும். கணக்காயர்கள் கூட கணக்குகளின் கூட்டல் கழித்தலை விட வரையறுக்கப்பட்ட முறைமைகளை சரியாகப் பேணி உள்ளார்களா என்றே ஆய்கின்றனர். தங்களது கணக்காயர் குறிப்புகளிலும் இதனையே வெளிப்படுத்துகின்றனர். இருப்பினும் இக்கட்டுரையின் உள்ளடக்கத்திற்கு கணக்காய்வு பொருந்துவதாகவே உள்ளது. --மணியன் (பேச்சு) 13:51, 30 சூலை 2012 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கணக்காய்வு&oldid=1177832" இலிருந்து மீள்விக்கப்பட்டது