பேச்சு:கட்டில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மஞ்சம் - கட்டிலை குறிக்குமா இல்லா மெத்தையை குறிக்குமா? இல்லை இரண்டையுமா?கட்டில் தமிழ்ச்சொல்லா?--Ravidreams 20:05, 4 மார்ச் 2007 (UTC)

படுக்கை என்பது கட்டிலைக் குறிக்குமா? இல்லை கட்டில் சார்ந்த பிறவற்றை குறிக்குமா? படுக்கை, படுக்கை விரிப்பு, படுத்த படுக்கை (bed-ridden), படுக்கையறை (bed room) போன்றவை பெரிதும் புழக்கத்தில் உள்ள தமிழ்ச் சொற்கள். படுக்கை என்பதை முதன்மைப்படுத்தலாமா?--Ravidreams 21:11, 4 மார்ச் 2007 (UTC)

படுக்கப் பயன்படுவது படுக்கை. பாயும் படுக்கைதான். கட்டில் என்பது தமிழகத்தில் விளங்கிக் கொள்ள முடியாதது என்றால் மட்டும் மாற்றலாம். --கோபி 13:44, 5 மார்ச் 2007 (UTC)

பாயும் படுக்கை தான் என்ற குழப்பம் இருக்கிறது தான். ஒரு வேளை கட்டில், பாய், தொட்டில் போன்ற கட்டுரைகளை பகுப்பு:படுக்கைகள் என்ற பகுப்பில் அடக்கலாமா? தமிழ்நாட்டில் கட்டில் நன்றாகவே புரியும்.--Ravidreams 13:54, 5 மார்ச் 2007 (UTC)

கட்டில், மெத்தை, பாய், தலையணை அனைத்தையும் படுக்கைகள் என்ற பகுப்பில் அடக்கலாம். ஆனால் படுக்கைகள் பகுப்பைத் தளபாடங்கள் என்பதுள் அடக்குவது சரியா? --கோபி 13:58, 5 மார்ச் 2007 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கட்டில்&oldid=110004" இலிருந்து மீள்விக்கப்பட்டது