பேச்சு:ஓட்டன் சமவெளி தேசிய வனம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓட்டன் சமவெளி தேசிய வனம் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

ஓட்டன் சமவெளியில் CDMA தொலைபேசி வேலைசெய்யுமா?. திருகோணமலையில் நான் அவதானித்தது என்னவென்றால் கந்தளாயில் இருக்கும் சண்டெல் தொலைபேசிக்கோபுரம் ஏறத்தாழ 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சேருவிலவில் பிரதேசத்தில் கூடவேலைசெய்கின்றது. தூரயா போன்ற தொலைபேசிகளை மலையேறுபவர்கள் பாவிப்பது வழக்கம் எடுத்துக்காட்டாக எவரெஸ்ட் போன்ற மலைச்சிகரங்களில் ஏறுபவர்கள் பயன்படுத்துகின்றார்கள். ஓட்டனில் நிலவரம் எப்படி?--Umapathy 16:32, 2 மே 2007 (UTC)[பதிலளி]

உமாபதி மலைப்பாங்கான பகுதிகளில் அவ்வளவு தூரம் வேலை செய்வதில்லை. தூரயா செய்மதியின் மூலம் வேலை செய்வதால் பிரச்சினயில்லை ஆனாலும் பொதுவில் அது பாவனையில் இல்லைத்தானே. டி.வி. எண்டனா மாதிரி ஒரு பெரிய எண்டாவைப் பொருத்தி ஒரு சேவையை டெலிகொம் தருகிறது. ஆனால் செல்லிடத் தொலைபேசிகள் வேலை செய்வதில்லை.--டெரன்ஸ் \பேச்சு 16:57, 2 மே 2007 (UTC)[பதிலளி]

பாராட்டுக்கள்[தொகு]

நல்ல நிறைவான கட்டுரை. பாராட்டுக்கள் டெரென்ஸ். -- Sundar \பேச்சு 05:50, 3 மே 2007 (UTC)[பதிலளி]

உரைகளை திருத்தி உதவியமைக்கு நன்றி சுந்தர். இன்னமும் பல தகவல்கள் இணைக்கப் படவுள்ளது.--டெரன்ஸ் \பேச்சு 07:38, 3 மே 2007 (UTC)[பதிலளி]

அயன மண்டல மலைக் காடுகளா/ மழைக்காடுகளா?- 202.184.206.126

//இச்சமவெளி அயனமண்டல மலைக்காடுகளாலும் ஈரபத்தனைப் புல் நிலங்களாலும் ஆனாது.// இது "இச்சமவெளி அயனமண்டல மழைக்காடுகளாலும் ஈரபதனப் புல் நிலங்களாலும் ஆனது" என்று இருக்க வேண்டும்.--Kanags \பேச்சு 07:58, 1 பெப்ரவரி 2008 (UTC)

இங்குள்ள காடுகள் tropical montane forests இது அயனமண்டல மலைக்காடுகளாகும். மேலும் wet patana grasslands ஈர பத்தனைப் புல்நிலன்ங்களாகும். கட்டுரையில் மாற்றங்கள் தேவையற்றவை.--Terrance \பேச்சு 05:12, 7 பெப்ரவரி 2008 (UTC)
நன்றி டெரென்ஸ். montane forests என்பது மலைக்காடுகள் என்றழைக்கலாம். wet Patana என்ற சொல்லை எங்கிருந்து எடுத்தீர்கள்? அறிய ஆவல்.--Kanags \பேச்சு 08:10, 7 பெப்ரவரி 2008 (UTC)

ஹட்டன் சமவெளி[தொகு]

ஹட்டன் சமவெளி அல்லது அட்டன் சமவெளி என்று அமைய வேண்டும். ஓட்டன் என்று இலங்கையில் அழைப்பதில்லை. --A-wiki-guest-user (பேச்சு) 07:29, 26 சூன் 2019 (UTC)[பதிலளி]

நீங்கள் சொல்வது போல் எதுவும் கிடையாது. ஓட்டன் சமவெளி என்றே அழைக்கப்படுகிறது.--பாஹிம் (பேச்சு) 08:04, 26 சூன் 2019 (UTC)[பதிலளி]

ஆதாரம் 1, 2, 3.--பாஹிம் (பேச்சு) 08:08, 26 சூன் 2019 (UTC)[பதிலளி]

@Fahimrazick: wet patana என்பதில் உள்ள patana என்பது சிங்களச் சொல். patana என்றால் Sinhalese for "montane grasslands" என ஆங்கிலக் கட்டுரையில் தரப்பட்டுள்ளது. இது சரியா தெரியவில்லை. patana இதற்கு ஒப்பான தமிழ்ச்சொல் உள்ளதா?--Kanags \உரையாடுக 09:44, 26 சூன் 2019 (UTC)[பதிலளி]
ஆதாரம் எனத் தரப்பட்டதில் "ஹோட்டன்" என்றும் "ஹோர்ட்டன்" என்றும்தானே உள்ளது. ஓட்டன் என்று இல்லையே? --A-wiki-guest-user (பேச்சு) 11:10, 26 சூன் 2019 (UTC)[பதிலளி]
ஆங்கிலத்தில் ஹோ(ர்)ட்டன் என்பது சரியான பலுக்கல் (ர் ஒலிப்பதில்லை). ஆனால் தமிழில் ஓட்டன் என எழுதுவது சரி. Hatton என்ற நகரை அட்டன் எனத் தமிழில் எழுதுகிறோம்.--Kanags \உரையாடுக 11:56, 26 சூன் 2019 (UTC)[பதிலளி]
@Kanags: Grassland என்பது புன்னிலம். Patana என்பது பத்தனை என்றே தமிழிலும் வழங்கப்படுவது வழமை, ஆயினும் அதில் சிங்களம் அப்படியே ஒலிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆயினும் மலைப் புன்னிலம் என்பதே சரியான தமிழாக்கம். Steppe உம் அதே சொல்லாலேயே அழைக்கப்படுகிறது.--பாஹிம் (பேச்சு) 17:25, 26 சூன் 2019 (UTC)[பதிலளி]