பேச்சு:ஒளிமின் விளைவு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒளிமின் விளைவு எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

Work function என்பதை ஒளிமின் வெளியேறு ஆற்றல் என்று எழுதியுள்ளீர்கள். அதில் ஒளிமின் என்னும் முன்னொட்டு தேவை இல்லை என்று நினைக்கிறேன். மாழைகளில் (உலோகங்களில்) இவ்வாற்றலை அளக்க ஒளியலைகள் அல்லது புற ஊதாக்கதிர்களைப் பல நேரங்களில் பயன்படுத்துகிறோம். ஆனால் அம் முன்னொட்டு தேவை இல்லை. எவ்வளவு ஆற்றல் தந்தால், வெ'ர்மி ஆற்றல் மட்டத்தில் இருக்கும் எதிர்மின்னிகள் விடுபட்டு பொருளில் இருந்து குதித்து வெளியேறும் என்பதே முக்கியம். எனவே விடுபடும் ஆற்றல், வீடாற்றல் எனலாம். அல்லது சுருக்கமாக வெளியேறாற்றல் எனலாம். வொர்க் வ'ங்க்ச^ன் என்பதை விட எளிதாகப் புரியும் சொற்கள்தாம் இவை :)--செல்வா 18:14, 24 ஜூன் 2009 (UTC)

வெளியேறாற்றல் சரி. ஒளிமின் வெளியேறு ஆற்றல் என்பது தமிழ்நாட்டு பாடநூலில் உள்ள சொல். ஃபெருமியைப் பற்றி நினைவூட்டியதற்கு நன்றி. ஒரு கட்டுரை தயாரிக்க வேண்டும்.-- பரிதிமதி 18:30, 24 சூன் 2009
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஒளிமின்_விளைவு&oldid=825165" இலிருந்து மீள்விக்கப்பட்டது