பேச்சு:ஒளிப்படக்கருவி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒளிப்படக்கருவி உள்ளடக்கதோடு சேர்க்கவா ? --Natkeeran 17:04, 15 மார்ச் 2008 (UTC)

படம்பிடி[தொகு]

வெறுமனே படம்பிடி என்பது சரியாக இருக்குமா? இயன்றவரை சுருக்கமாகவும் கருவி என்ற பின்னொட்டு இல்லாமலும் இருப்பது சொற்கள் புழக்கத்துக்கு வர உதவும்--ரவி 22:26, 19 ஆகஸ்ட் 2008 (UTC)

  • “படம்” என்பது கையால் வரைந்த ஓவியம் மற்றும் சித்திரம் போன்றவற்றையும் குறிக்கிறது. காட்சிகளை பதியவைக்கும் கருவியினால் (camera) காட்சிப்படுத்தப்பட்டு எம்மால் பார்க்கப்படுபவற்றையும் குறிக்கிறது. எனவே காட்சிகளை பதிவைக்கும் கருவியை “காட்சிப்பதிவி” எனக்கூறலாம். --HK Arun 02:40, 18 ஜனவரி 2009 (UTC)
தவி யில் தேடிவிட்டு ஆவி-யில் camera சென்று வழிமாற்று மூலம் இப்பக்கத்தை அடைந்தேன். புகைப்படக்கருவி எனலாமா? வழி மாற்றாவது நாம் வைக்க வேண்டும்--குறும்பன் 20:26, 29 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]

ஒளிவாங்கி[தொகு]

ஒளி பதிவு , பிடிப்பு என்பதற்கு பதிலாக வாங்குதல் என்று சொன்னால் என்ன ! . இருதான ஒளிவாங்கி என்று சொல்லலாமே ! -- இராஜ்குமார் 13:30 ( ரியாத்) சனவரி 3 2009 .

ஏன் நிழற்பட ஒளிவாங்கி என்று இவ்வளவு நீளமான பெயர்? வேண்டுமானல் "நிழற்படக் கருவி" என்றே சொல்லலாமே. "ஒளிவாங்கி" என்பது சரியான பொருளைத்தருவதாகத் தெரியவில்லை. "படம்பிடி கருவி" என்பது எளிமையாகவும் புரியும் படியும் இருக்கிறது என்பது எனது கருத்து. கட்டுரைத் தலைப்புக்களை மாற்றுமுன்னர் உரையாடல் பக்கத்தில் கலந்துரையாடிவிட்டு மாற்றுவது நல்லது. மயூரநாதன் 16:26, 3 ஜனவரி 2010 (UTC)

நன்றி . த . வி மரபை பின்பற்றுவதாக உறுதி அளிக்கிறேன் . நான் படம் பிடி கருவி என்று மாற்றிவிட்டு எனது உரையாடலை தொடங்குகிறேன் . -- இராஜ்குமார் 20.18 ( ரியாத்) சனவரி 3 2009 .

படம்பிடி கருவி என்பது புரியும் படி இருக்கிறது . நான் நினைப்பது எல்லாம் digital camera , camera phone , camera (process) , camera ( device ) என்று எல்லா வெற்றிக்கும் ஒரு பொதுவான , பொருந்தும் படியான சொல்லை தேடலாம் என்பதுதான் . -- இராஜ்குமார் 20.27 ( ரியாத்) சனவரி 3 2009 .
இராஜ்குமார், உங்களுடைய எண்ணம் சரிதான். என்னுடைய கருத்தும் அதுதான். எல்லோருமாகச் சேர்ந்து நல்ல சொற்களைக் கண்டுபிடிக்கலாம். மயூரநாதன் 17:55, 3 ஜனவரி 2010 (UTC)

--

ஒளிப்படக்கருவி[தொகு]

ஒளிப்படக்கருவி என பெயர் மாற்றுவது பொருத்தமாக இருக்குமா? பார்க்க ஆலமரத்தடி - சொற்கள் சீர்தரப்படுத்தல் அறிவிப்பு --Anton (பேச்சு) 02:08, 20 சூன் 2012 (UTC)[பதிலளி]

ஒளிப்படக்கருவி என்பது மிக நீண்ட பெயர் அதற்கு செல்வா அவர்கள் படமி என்பதை பரிந்துரைத்திருந்தார்இங்கே நல்ல அழகான பெயர். இவ்வாறான சொற்கள் இலகுவாக மனதில் பதிந்துவிடும்.--Sank (பேச்சு) 13:58, 6 சூலை 2012 (UTC)[பதிலளி]
படமி என்ற தலைப்புக்கு எனது ஆதரவு. --இராச்குமார் (பேச்சு) 13:29, 7 சூலை 2012 (UTC)[பதிலளி]

படமி என்பது அழகான, சுருக்கமான சொற்தான். ஆனால் தேடுபொறிகளும் தேடுவோரும் புகைப்படக் கருவி, நிழற்படக் கருவி ஆகிய சொற்களிலேயே தங்கியிருக்க ஒளிப்படக்கருவி அவற்றுக்கு சற்று அன்மித்துக் காணப்படுகின்றது. படமியோ இவற்றையெல்லாம் கடந்தே காணப்படுகின்றது. அத்துடன், ஒளிப்படவியல், ஒளிப்படம், ஒளிப்படக்கருவி எனும் சொற்களில் ஒன்றுமை காணப்பட படமி தூரத்தில் இருப்பதாகப்படுகின்றது. அத்தோடு, இத்துறையில் தொழிலளவிலும், ஆர்வத்திலும் உள்ளவர்கள் படமி என்ற சொல்லை அறிந்திருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. --Anton (பேச்சு) 17:28, 7 சூலை 2012 (UTC)[பதிலளி]

ஏதேனும் ஒரு தலைப்பில் இருந்து வழிமாற்று தந்தால் போதும். மற்ற சொற்களை உள்ளடக்கத்தில் சேர்கலாம். --இராச்குமார் (பேச்சு) 19:12, 7 சூலை 2012 (UTC)[பதிலளி]
ஒளிப்படம், ஒளிப்படவியல் , படமி சொற்களில் ஒற்றுமையை இவ்வாறும் நோக்கலாம்.--Sank (பேச்சு) 19:28, 7 சூலை 2012 (UTC)[பதிலளி]

படமி[தொகு]

படமி என்ற சொல் அருமையான சொல்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஒளிப்படக்கருவி&oldid=2431225" இலிருந்து மீள்விக்கப்பட்டது