பேச்சு:ஒரு துவக்கும் ஒரு மோதிரமும்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் ஒரு துவக்கும் ஒரு மோதிரமும் எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

துவக்கும் என்றால், துப்பாக்கி எனப் பொருள்படுமா?--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:47, 29 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

ஆம் செல்வசிவகுருநாதன், துவக்கு என்பது துப்பாக்கியேதான்--நந்தகுமார் (பேச்சு) 19:00, 29 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

ஒரு துப்பாக்கியும் மோதிரமும்[தொகு]

"ஒரு துப்பாக்கியும் மோதிரமும்" என்பதே பரவலாக அறியப்பட்ட பெயராக உள்ளது. --பழ.இராஜ்குமார் (பேச்சு) 19:47, 29 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

ஒரு துப்பாக்கியும் மோதிரமும் என எழுதுவது இலக்கணப் பிழை. பரவலாக எழுதுவதை நாம் இவ்விடத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு துப்பாக்கியும் ஒரு மோதிரமும் என எழுதுவதே சரி. ஆனாலும், இது தமிழில் ஒரு துவக்கும் ஒரு மோதிரமும் என்றே வெளிவந்துள்ளது. அதுவே தலைப்பாக இருப்பது நல்லது.--Kanags \உரையாடுக 19:52, 29 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
ஒரு துப்பாக்கியும் ஒரு மோதிரமும் என்றே நான் பரிந்துரைக்க முயற்சித்தேன். விமர்சனம் பகுதியில் வலைப்பூக்களின் விமர்சனங்களை சேர்த்தல் நன்றன்று. தேசிய ஊடகங்களின் விமர்சனங்களை மட்டும் சேர்த்தால் நன்று. --பழ.இராஜ்குமார் (பேச்சு) 20:05, 29 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]