பேச்சு:ஒருங்குறி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

any suggestions for categorisation? how about கணிணி? எழுத்துருக்கள்? தகவல் தொழில்நுட்பம்?--ரவி (பேச்சு) 06:09, 30 ஏப் 2005 (UTC)

இக்கட்டுரையில் தொழிநுட்பரீதியான தவறுகள் நிறைய காணப்படுகின்றன. திருத்தப்படவேண்டும்.. "கணினி இயல்" என்ற பகுப்பினுள் இதனை அடக்கலாம்

யூனிகோடு, யுனிகோடு, யுனிக்கோடு, யுனிக்கோட் இன்னும் பலவிதமாக அழைப்பதை விட ஒருங்குறி என சுத்த தமிழில் அழைப்பது மேல் என நினைக்கின்றேன். மற்றவர்களிற்கு ஆட்சேபனை இல்லை என்றால ஒருங்குறிக்கு யுனிக்கோட் கட்டுரையை வழிமாற்றம் செய்து விடலாம். பின்னர் இதிலிருக்கும் கருத்துக்களையும் ஒருங்குறிக் கட்டுரையில் சேர்த்து விட்டு யுனிகோடுவை மீள் வழிநடத்திவிடலாம். பேச்சு:யுனிக்கோட் இல் தரப்பட்ட கருத்துக்களையும் பார்க்க --உமாபதி 04:34, 31 மார்ச் 2006 (UTC)

Cut/Pasted from யுனிக்கோட்:

வரலாற்றுப் பின்னணி[தொகு]

ஆரம்பகாலத்தில் தமிழ் தட்டச்சுக் கருவியை தழுவி பாமினி என்கின்ற எழுத்துரு அறிமுகம் ஆனது. இது ஆங்கிலச் சொற்களுக்குப் பதிலாக தமிழை உட்புகுத்தியது. எனினும் காலப்போக்கில் இணையத்தின் (Internet) வரவால் நடைமுறைச்சிக்கல்களை உருவாக்கியது. இதே காலப் பகுதியில் வேறு பல நியமங்களும் உருவாகத் தொடங்கின. இதனால் கோப்புக்களை (File) பரிமாறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டன. இது மாத்திரம் இன்றி பல தரவுத் தளங்களில் (Database) ஒரு எழுத்துருவை மாத்திரமே ஏற்று கொள்வதால் தமிழையும் ஆங்கிலத்தையும் ஒன்று சேற்க இயலாமல் போனது. எனவே இவற்றைக் கருத்திற் கொண்டு தகவற் பரிமாற்றத்திற்கான தமிழ் நியமக் குறியீட்டு முறை (i.e. TSCII Tamil Standard Code for Information Interchange) உருவாகியது. இதில் முதல் 0-127 எழுத்துக்கள் தகவல் பரிமாற்றத்திற்கான அமெரிக்க முறையை (i.e. ASCII - American Standard Code for Information Interchange) ஒத்தது. மிகுதியான 128-155 இல் தமிழ் எழுத்துக்கள் நிரப்பப் பட்டன. இதைத்தொடர்ந்து தமிழ் நாட்டில் நடைபெற்ற தமிழ் இனைய மகாநாட்டில் தமிழ் 99 விசைப் பலகை பரிந்துரைக்கப்பட்டது. விண்டோஸ் 3.1, 95, 98 மற்றும் Me பதிப்புக்களில் TSCII பெரும்பாலும் பயன் படுத்தப் படுகிறது. யுனிக்கோடானது ஒவ்வொரு மொழிக்கும் ஓரிடம் என்று உலகின் பிரதான மொழிகளை ஒன்றினைத்து 16 பிற்றில் (TSCII 8 பிற்) அறிமுகம் ஆனது. விண்டோஸ் 2000/XP/2003 தமிழ் யுனிகோட் வசதியும் அப்பிள் வகைக் கணினியில் Mac OS 10.4 இலும் தமிழ் யுனிக்கோட் வசதியுள்ளது. இன்று அநேகமாக உலகில் உள்ள தேடுபொறிகள் (Search Engines) கூகிள் கூகிள் தேடுபொறி மற்றும் யாகூ யுனிக்கோட்டில் தேடல்கள் செய்ய வல்லன. உலகில் உள்ள பல மொழிகளையும் ஆதரிக்கும் இக்குறியீட்டு முறை இன்று மிகவும் பிரபலமடைந்து வருகின்றது. இது மாத்திரம் அன்றி மைக்குறோசொவ்ற்றானதுயுனிக்கோட்டின் ஊடாக தமிழ் விண்டோஸ் மொழி இடைமுகப் பதிப்பை Office 2003 மற்றும் Windows XP இற்கு அறிமுகம் செய்து.

  1. வின்டோஸ் மொழி இடைமுகப் பொதி
  2. Office மொழி இடைமுகப் பொதி

உள்ளீட்டு முறை[தொகு]

உலாவிகள் ஊடாக[தொகு]


வின்டோஸ் இயங்குதளத்திற்கானவை[தொகு]

நீக்கப்பட்ட வரிகள்[தொகு]

கட்டுரைக்கு சம்பந்தமில்லாத பின்வரும் வரியினை நீக்கியுள்ளேன்

இதைத்தொடர்ந்து தமிழ் நாட்டில் நடைபெற்ற தமிழ் இனைய மகாநாட்டில் தமிழ் 99 விசைப் பலகை பரிந்துரைக்கப்பட்டது.

--மு.மயூரன் 21:21, 27 செப்டெம்பர் 2006 (UTC)--மு.மயூரன் 21:21, 27 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்[தொகு]

தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!

--TrengarasuBOT 01:09, 14 மே 2007 (UTC)[பதிலளி]

நன்றி டெரனஸ் இணைப்பைத் திருத்தியுள்ளேன்.--உமாபதி \பேச்சு 14:51, 12 ஜனவரி 2008 (UTC)

ஆங்கிலத்தில் இருந்து தமிழில் பெயர்க்கும் முன்னால்,சில ஆண்டுகளுக்காவது,பிறை அடைப்புக்குள் ஆங்கிலச் சொல்லையும் மறவாது எழுதியே ஆகவேண்டும்.அவரவர்கள் மொழிப்பெயர்ப்பு விருப்பம் போல அமைந்து விளங்காமல் செய்துவிடுகிறது. எந்தச்சொல்லும்,பொருளை நுணுக்கமாகப் புலப்படுத்தும் மொழிபெயர்பே தக்கதாகும்.சொல்லுக்குச் சொல் மொழிபெயர்ப்பதைப்,பல இடங்களில் தவிர்த்துவிடலாம்.சான்றாக,Editing என்பதைப் பதிப்பு என்று நினைக்கிறோம்.Compiling என்பதைத் தொகுப்பு என்கிறோம்.Unicode என்பதை உலகளாவிய நிலையில் அனைவரும்,ஒத்திசைந்து ஏற்றுக்கொண்ட குறியீட்டு முறை என்ற பொருளில்,"ஒத்தீடு","ஒருமியம்" என்று கூறிப் பதின்மருக்கு விளங்குகிறதா என்று வினவலாம். −முன்நிற்கும் கருத்து Tharagai (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

தாரகி இது ஒருகுறியீட்டுமுறை என்பதால் ஒத்திடு ஒருமியம் என்பவை அவ்வளவு பொருத்தமாகத் தென்படவில்லை. ஒருங்குறி ஓரளவு பயன்பாட்டில் உள்ளது. வேண்டுமானால் பொருள் விளங்கும் வண்ணம் ஒப்பற்றகுறி (ஒப்பிட முடியாத குறியீட்டுமுறை அதாவது Unique Code) என்றவாறு கட்டுரையில் சேர்த்துக் கொள்ளலாம். --உமாபதி \பேச்சு 00:59, 12 ஜனவரி 2008 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஒருங்குறி&oldid=1806138" இலிருந்து மீள்விக்கப்பட்டது