பேச்சு:ஒய்-ஃபை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இத்தலைப்பை மாற்ற விழைகிறேன். ஒய்-ஃவை என்றோ ஒய்-ஃபை என்றோ மாற்ற விரும்புகிறேன். மறுப்பு/எதிர்ப்பு இருந்தால் தெரிவிக்கவும். --செல்வா 14:39, 12 ஆகஸ்ட் 2009 (UTC)

நன்றாக தொகுத்தீர்கள். செல்வா. நன்றி !!!
ஒய்-ஃபை என மாற்றப் பரிந்துரைக்கிறேன்.--Kanags \பேச்சு 21:15, 12 ஆகஸ்ட் 2009 (UTC)
நீங்கள் பரிந்துரைத்தவாறு மாற்றியிருக்கின்றேன், ஆனால் இன்னும் கட்டுரையின் உள்ளே திருத்த வில்லை. ஃப என்னும் முறை தவறானது. ஃவ என்பதும் தவறானதே, ஆனால் ஃப என்பதை விடச் சரியானது. "பொது" வழக்கம், "பரவலான" பயன்பாடு என்பதை முன்வைப்பது இது போன்றவற்றுக்கு சரியா என எண்ணிப்பார்க்க வேண்டும். மேலும் மேலும் தவறுகளைப் பெருக்கிக்கொண்டே போக வழி வகுக்கின்றது. ஃப என்பது hba என்னும் இயலொலி கொண்டது. ஃவ = hva ஆகும். இது fa என்பதற்கு நெருக்கமான ஒலிப்பு (நேரான ஒலிப்பு அல்ல). "முயற்சிக்கிறேன்" என்று இன்னும் விடாது படித்தவர்களே எழுதிக்கொண்டிருக்கிறார்கள்! தவறான வழக்குகளைத் துணிந்து விலக்கி எழுதவேண்டும். fa என்பதை வ' என்றோ, வ` என்றோ, வʽ என்றோ, வ° என்றோ, வகரத்துடன் ஏதோ ஒரு குறியீடு இட்டு எழுதுவதே சரியான முறை (சரியான தமிழ் முறையாகிய தமிழ்ப்படுத்தி எழுதும் முறைக்கு அடுத்ததாக). ஒய்-இஃவை (oy-ihvai) என்று கூறுவது ஏற்புடையதா? --செல்வா 21:46, 12 ஆகஸ்ட் 2009 (UTC) ஒய்-இஃகுவை என்றும்கூடக் கூறலாம். --செல்வா 21:47, 12 ஆகஸ்ட் 2009 (UTC)
Wi-Fi என்பது Wireless Fidelity என்பதன் சுருக்கமாக இருப்பதால் அதன் நேரடித் தமிழாக்கமான அலைத் தெளிவு என்பதிலிருந்து தெளிவலை என பெயரிடலாமா ? தெளிவலைக் கருவிகள் என்று Wi-Fi equipmentsஐக் குறிப்பிடலாம்.--மணியன் 06:33, 1 பெப்ரவரி 2010 (UTC)
Wi-Fi என்பது Wi-Fi Alliance நிறுவனத்தின் வர்த்தகக் குறியீடு. அதனால் மொழியாக்கம் செய்வது எனக்குச் சரியாகப் படவில்லை. ஒய்-ஃபை என்பதே சரி. --மாதவன் இளங்கோ
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஒய்-ஃபை&oldid=1457347" இலிருந்து மீள்விக்கப்பட்டது