பேச்சு:ஒய்யாரம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒய்யாரம் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

ஒய்யாரம் என்பது Fashion என்று பொருள்படுமா? ஒய்யாரம் என்பது ஆடம்பரம் என்ற பொருள் தரும் என்றே நினைக்கிறேன். Fashion என்பதற்கு a prevailing custom or style of dress, etiquette, socializing எனப் பொருள் கொள்ளப்படுகிறது. ஒய்யாரம் இப்பொருள் தருவதாகத் தெரியவில்லையே. மயூரநாதன் 20:11, 1 ஜூன் 2008 (UTC)

தமிழில் ஒய்யாரம், ஒயில், எடுப்பு, மிடுக்கு, பிலுக்கு, மினுக்கு போன்ற சொற்கள் முற்போக்கான அழகு, ஒப்பனை முதலியவற்றையும், சில இடங்களில் இவற்றுள் சில பொய்யான "தோற்றங்களையும்" சுட்டும் சொற்கள். "ஒய்யாரக் கொண்டையாம் தாழம் பூவாம், உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்" என்பது ஒரு பழைய பழமொழி அல்லது சொலவடை. இன்றும் கூறுவார்கள் ஊர்புறங்களிலே. ஒய்யாரம் என்பது ஆடம்பரம் என்பது ஒரு சில இடங்களில் பொருந்தும், ஆனால் ஒய்யாரம் என்றால் பொதுவாக முற்போக்கான, எழிலான, அழகு நயம் நிறைந்த தன்மையைச் சுட்டும். சென்னை லெக்சிகனும், "Gracefulness of movement, elegant bearing" என்றும், ஒயில் என்னும் சொல்லின் பொருளாக, "Grace of from, posture or movement; ஒய்யாரம்." என்று பொருள் தருகின்றது. ஆடம்பரம் என்னும் சொல் பெரும்பாலான இடங்களில் (எல்லா இடத்திலும் அல்ல) செல்வச் செருக்கு, வெற்றுத்தனம், வீண் டாம்பீகம் முதலிய பொருள்களைச் சுட்டும். ஆனால் ஒய்யாரம் என்னும் சொல் அழகுச் செறிவை, முதன்மையான அழகுணர்ச்சியையும் சுட்டும். ஆங்கிலத்திலே style, high fashion என்றும், சில இடங்களில் avant-garde என்றும் கூறப்படும் பொருள் கொள்ளும். ஒய்யாரம் என்னும் சொல்லின் வேர் ஒய் = உயர்ச்சி என்பது. ஒய்யாரம், ஒயில் என்னும் சொற்கள் அழகு உயர்ச்சியை தெளிவாகச் சுட்டும் சொற்கள். அழகுக் கலைகளில் எப்பொழுதும் புதுமை, முற்போக்கு, முன்மை என்னும் கருத்துக்கள் இயல்பாகவே இருப்பதால் ஒய்யாரம் என்பது முற்போக்கான அழகுநுட்பம் கொண்ட முன்பாடு என்பது இயல்பாகத் தோன்றும். தமிழ் லெக்சிகன் ஒய்யாரநடை என்று வேறு குறிப்பிடுகிறது. ஒய்யாரநடை, பிலுக்குநடை என்கிறது. லெக்சிகன்: "Graceful gait; அலங்கார நடை." என்கிறது. எனவே கட்டாயம் ஒய்யாரம் என்றால் high fashion" என்று பொருள்படும் (ஆனால் பொதுவாக உயர் கலைநயம் என்பது தூக்கலான பொருளில் வருவது).--செல்வா 22:36, 1 ஜூன் 2008 (UTC)

fashion?[தொகு]

fashion, fashion technology போன்றவற்றை தமிழில் எப்படிச் சொல்வது?--Ravidreams 13:38, 5 மார்ச் 2007 (UTC)

fashion = ஒய்யாரம், ஒய்யெழில், ஒப்பனை ; fashion technology = ஒய்யாரநுட்பம் ஒய்யாரக்கலை, ஒய்யெழில் நுட்பம், ஒய்யெழிற்கலை, ஒப்பனை நுட்பம், ஒப்பனைக் கலை.--செல்வா 14:40, 5 மார்ச் 2007 (UTC)

நன்றி, செல்வா. இது தவிர, இப்ப இது தான் fashion என்று சொல்வதை எப்படி தமிழில் சொல்வது?--Ravidreams 14:57, 5 மார்ச் 2007 (UTC)

புத்தெழில் என்று சொல்லலாமில்லையா? புத்தெழில் கண்காட்சி, புத்தெழில் நுட்பம், இப்போது இதுதான் புத்தெழில். அப்படி. புதுமை+ எழில் --மு.மயூரன் 15:30, 5 மார்ச் 2007 (UTC)

புத்தெழில் என்று சொல்லலாம், பொருந்தும்தான், ஆனால் அது மிகப்பொதுவாக உள்ளது. பேச்சு வழக்கில் "இப்ப இதுதான் பாஷன்" என்பதை "இப்ப இதுதான் புது ஒய்யாரம்", "இப்ப இதுதான் புத்தொய்யாரம்", "இப்ப இதுதான் ஒய்யாரப் புத்தெழில்", "இப்ப இதுதான் தூக்கலான ஒப்பனை", "இப்ப இதுதான் முன்னிலை ஒப்பனை", "இன்னிக்கி இதாண்டா புத்தொப்பனை" என்று பலவாறு சொல்லலாம். --செல்வா 15:47, 5 மார்ச் 2007 (UTC)

ஆடை, அழகு சார்ந்த துறைகளுக்கு ஒய்யாரச் சொற்கள் பொருந்துகிறது செல்வா. ஆனால், "தமிங்கிலம் பேசுறது இப்ப fashio, குத்துப் பாட்டு வைச்சு படம் எடுக்கிறது இப்ப fashion" என்று சொல்கிறோமே? அதை எப்படி சொல்வது?--Ravidreams 16:15, 5 மார்ச் 2007 (UTC)

தமிழில் வழங்கும் பல ஆங்கிலச் சொற்கள் தமிழ்வழியே பொருள் கொள்ளும் தமிழ்ச்சொற்கள் தான். கடன் பெற்று இருந்தாலும், பொருள், பொருள் மரபு, சொல்லாட்சிகள் எல்லாம் தமிழ்தான் - ஆங்கிலத்தில் அதற்கிணையான சொல்லாட்சி்கள், பொருள்கள் இல்லை. எடுத்துக்காட்டாக, லேட் (late) என்னும் சொல்லை எடுத்துக்கொள்ளுங்கள். தமிழில், "இவன் லேட்டாக்கி லேட்டாக்கியே கழுத்தறுப்பான்", "அவள் வந்தது லேட்டுன்னு சொல்ல முடியாது, இருந்தாலும் கொஞ்சம் லேட்டுதான்", "லேட்டு கீட்டு ஆக்கினியோ, கொன்னுடுவான், பார்த்துக்கோ", "இன்னிக்கி லேட்டு, நேத்து லேட்டு, என்னிக்கித்தான் நீ லேட்டு இல்லே?"

"லேட்டானாலும், பரவாயில்லே, நீங்க கட்டாயம் வாங்கோ" என்னும் சொல்லாட்சிகளை ஆங்கிலத்தில் சொல்லியோ எழுதியோ பாருங்கள். இதே போலத்தான் டென்ஷன், அட்ஜஸ்ட் முதலான சொற்களும். இப்போ, பாஷனுக்கு வருவோம். நீங்கள் கூறிய இடங்களில் "புதுப்போக்கு", "புதுத்தூக்கு" "புத்தோச்சு", புத்தோச்சம், புத்தோச்சல் என்று சொல்லலாம். (ஓச்சு, ஓச்சல் = உயர்ச்சி, உயர்வான் எழுச்சி தருதல்)--செல்வா 18:15, 5 மார்ச் 2007 (UTC)

புதுப்பாணி அல்லது புதுப்பாங்கு ?[தொகு]

@Ravidreams: Fashion என்பதற்கு புதுப்பாங்கு அல்லது புதுப்பாணி என்ற சொற்கள் பொருத்தமானதாக இருக்குமெனக் கருதுகிறேன். இங்கு ஒய்யாரம் என்பது அழகு, ஆடம்பரம் தொடர்புடைய குறுகிய வட்டத்திற்கான பொருளை வெளிப்படுத்துகிறது. ஆனால் Fashion என்ற சொல் விரிவாக பல தளங்களிலும் (கட்டிடக்கலை, ஆடை வடிவமைப்பு, பழக்கவழக்கம், ஒப்பணை, இசை , ஓவியம், உணவு உட்பட) பயன்படுத்தப்படுவதால் புதுப்பாணி அல்லது புதுப்பாங்கு என்ற சொற்கள் ஒய்யாரத்தை காட்டிலும் சாலப் பொருந்தும் என கருதுகிறேன். உதாரணமாக Fashion Designer என்பதை புதுப்பாணி வடிவமைப்பாளர் என்றும் Fashion Designing என்பதை புதுப்பாணி வடிவமைப்பு என்றும் Fashion Technology புதுப்பாணி தொழிநுட்பம் என்றும் Fashion Show என்பதை புதுப்பாணி ஒப்பனை அணிவகுப்பு என்றும் அழைக்க ஏதுவாகிறது. மேலும் எளிதாக பல இடங்களிலும் கையாளக்கூடிய பொருளையும் வெளிப்படுத்துகிறது. பரிசீலிக்கவும் நன்றி! --- ThIyAGU 12:16, 13 சூன் 2017 (UTC)

@Thiyagu Ganesh: உங்கள் பரிந்துரை நன்றாக உள்ளது. Fashion என்பது எப்பொழுதும் புதிய ஒன்றைக் குறித்து நிற்கின்றதா? சில சந்தர்ப்பங்களில் பழைய விடயம் ஒன்றும் மீண்டும் Fashion ஆக வருவதுண்டு. --Natkeeran (பேச்சு) 13:07, 13 சூன் 2017 (UTC)[பதிலளி]

@Natkeeran: சிக்கல் ஏதுமில்லை. Old Fashion என்பதை பழம் புதுப்பாணி என்றும் New Fashion என்பதை புத்தம் புதுப்பாணி என எளிதாக கூறலாமல்லவா? --- ThIyAGU 16:15, 15 சூன் 2017 (UTC)

@Natkeeran:@Ravidreams: கவனிக்கவும் நன்றி! --- ThIyAGU 14:42, 26 சூன் 2017 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஒய்யாரம்&oldid=3402060" இலிருந்து மீள்விக்கப்பட்டது