பேச்சு:ஐஇஇஇ 802.11

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்த IEEE என்பதை ஐஇஇஇ என்று மாற்றலாமா ?

மாற்றலாம். ஒருசிலவற்றை அப்படியே இலத்தீன எழுத்துகளிலேயே இடுகின்றேன். எடுத்துக்காட்டாக CAS எண் என்பதைப் பாருங்கள். அதைக்கூட சி.ஏ.எசு எண் என்றோ, அ.சு.சே எண் (அமெரிக்கச் சுருக்கவுரைச் சேவை எண் = Chemical Abstracts Service (CAS))என்றோ எழுதலாம். நாம் பயன்படுத்துவதிலும் எடுத்தாள்வதில் உள்ளது ஒன்றின் பயன். ஐஇஇஇ அல்லது ஐ.இ.இ.இ என்று பயன்படுத்தலாம். மின்னியல், மின்மியியல் பொறியாளர் நிறுவனம் (மி.மி.பொ.நி) என்றும் கூறலாம். --செல்வா 20:38, 12 ஆகஸ்ட் 2009 (UTC)


ஐ.இ.இ.இ அல்லது ஐஇஇஇ அல்லது மின்னியல் இலத்திரனியல் பொறியியாளர் நிறுவனம் என்று கூறலாம். IEEE என்று விடுவது நல்லதல்ல. அப்படியே பொருத்தமாக சி.ஏ.எசு எண்யையும் மாற்றி எழுதலாம். கிரந்தம் பற்றி இவ்வளவு கூற்ம் நாம், ஆங்கிலத்தை இலகுவில் இப்படி விடுவது நல்லதல்ல. --Natkeeran 23:13, 12 ஆகஸ்ட் 2009 (UTC)

தமிழ் எழுத்தில் எழுதுவதில் தவறில்லை. சி.ஏ.சு எண் என்றோ அ.சு.சே எண் என்றோ எழுதலாம். பிறைக்குறிகளுக்கு இடையே சிறிய எழுத்துகளில் CAS No. என்றும் குறிக்கலாம். ஆனால் ஒருசிலவற்றை GaAs, H2O என்று எழுதுவது போல நினைத்து எழுதலாமா என்றும் தோன்றுகின்றது. ஐஇஇஇ என்று கட்டாயம் எழுதலாம். மிமிபொநி (அல்லது மிஇபொநி) என்று எழுதுவதா ஐஇஇஇ என்று எழுதுவதா என்றும் நினைக்க வேண்டியிருக்கின்றது. ஏதாவது ஒரு முறையைத் தேர்ந்தெடுத்தால், கூடியமட்டிலும் சீராக அதனைப் பின்பற்றுவது நல்லது.--செல்வா 04:17, 13 ஆகஸ்ட் 2009 (UTC)

ஐமுவ்வி அல்லது அய்முவ்வி என்று எழுதலாமா ? - இராஜ்குமார்

ஐ டிரிப்பிள் இ என்பதை ஐ மூவீ என்று எழுதுவது வேடிக்கையாக இருக்கும். ஐ மூவீ என்றால் iMovie என்பது போல புரிந்துகொள்ளவும் வாய்ப்புள்ளது. ஐஇஇஇ அல்லது மிமிபொநி (அல்லது மிஇபொநி) என்று தமிழில் எழுதலாம் அல்லது IEEE என்று இலத்தீன எழுத்திலேயே எழுதலாம். இது ஒரு முத்திரை/இலச்சினை போன்றதும் கூட. --செல்வா 04:42, 13 ஆகஸ்ட் 2009 (UTC)
இப்பொழுது ஆங்கிலத்தில் ஐ டிரிப்பிள் இ என்றுதான் சொல்கிறார்கள் . இது ஒரு நிறுவனத்தின் பெயர் என்பதால் இதன் தலைப்பை IEEE என்று ஆங்கிலத்திலேயே வைத்து விட்டு உள்தொகுப்பில் IEEE ( ஐடிரிப்பிள்இ ) என்று எழுதலாம் என்பது என் கருத்து .இராஜ்குமார்


Wireless பரிந்துரைகள்[தொகு]

கம்பியில்லா தொடர்பு - wireless connection . கம்பியற்ற தொடர்பு என்று பரிந்துரைக்கிறேன் .
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஐஇஇஇ_802.11&oldid=494375" இலிருந்து மீள்விக்கப்பட்டது