பேச்சு:ஏ-9 நெடுஞ்சாலை (இலங்கை)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யாழ்ப்பாணம் - கண்டி வீதி என்ற தலைப்பு நல்ல தமிழ்ப் பெயர் தானே, ஏ-9 என்பது பிரிட்டிஷ்காரன் வைத்த வழித்தட எண். அது பெயராகாது. தலைப்பு மாற்றம் அவசியமற்றது என்பது என் கருத்து. A-9 is a legacy of Imperialism. - Uksharma3 (பேச்சு) 02:35, 28 மார்ச் 2014 (UTC)

நெடுஞ்சாலைகள், மற்றும் அதிவேக நெடுஞ்சாலைகள் எண்கள் மூலமே அடையாளம் காணப்படுகின்றன.--Kanags \உரையாடுக 06:10, 28 மார்ச் 2014 (UTC)

அடையாளம் காண்பதற்கு குறியீடு பயன்படுத்தப்படுவது சரி. ஆனால் கட்டுரை தலைப்பு பெயராக இருப்பதே நல்லது.

Google Maps இல் பார்த்தேன். சாலை குறியீடு எண் கட்டத்துக்குள் போட்டு சாலை பெயர் Kandy Jaffna Highway என்றுதான் யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி வரை போட்டிருக்கிறது.

யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலை என்பது எனக்கு அழகான தமிழ் பெயராகத் தெரிகிறது. சட்டென்று புரிந்து கொள்ள முடிகிறது.

நான் எழுதுவதானால்:
யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலை
யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலை (சாலை எண்: ஏ-9) இலங்கையில் இரு பெரும் நகரங்களான யாழ்ப்பாணத்தையும் கண்டியையும் இணைக்கும் நெடுஞ்சாலையாகும். இது ...

இங்கே தமிழ்நாட்டில் "கிழக்கு கடற்கரை சாலை" "கொல்கத்தா சாலை" "ஜிஎஸ்டி சாலை (Grand Southern Trunk Road)" என்று தான் சொல்கிறார்கள்- - Uksharma3 (பேச்சு) 11:35, 28 மார்ச் 2014 (UTC)

யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலை 👍 விருப்பம்--✍mohamed ijazz © (பேச்சு) 11:43, 28 மார்ச் 2014 (UTC)

என்னவிருந்தாலும், விக்கிப்பீடியாவுக்கு என்றும் சில வரைமுறைகள் உள்ளன தானே. அவற்றையும் நாம் பின்பற்ற வேண்டும். அதிகாரபூர்வமாக ஏ9 என்றே அழைக்கப்படுகிறது. மேலும் இது கண்டி வீதி என்று தானே கூறுகிறார்கள்.--Kanags \உரையாடுக 12:02, 28 மார்ச் 2014 (UTC)

தமிழ்ப் பெயராக இருக்கட்டுமே என்று தான் நினைத்தேன். அதிகாரப்பூர்வமாக தமிழ்ப் பெயர்கள் அகற்றப்படுவதாகச் சொல்லப்படுவது சரிதான். - Uksharma3 (பேச்சு) 13:21, 28 மார்ச் 2014 (UTC)