பேச்சு:ஏர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏர் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

டிராக்டர் தமிழ்ப்பதம் என்ன? --சிவகுமார் 15:06, 23 ஜூன் 2006 (UTC)

ஆங்கிலச்சொல்லின் பொருள் இழுத்துச் செல்வது என்பதுதான். இதற்கு தமிழில் (உழுவத்ற்கு பயன் பட்டால்) உழுவுந்து, ஏருந்து என்றோ உழுவூர்தி, ஏரூர்தி என்றோ பயன்படுத்தலாம். Backhoe போன்ற எந்திரங்களுக்கு,

அகழுந்தி, மண்ணள்ளி என்று தேவைகேற்றார்போல ஆக்கிகொள்ளலாம். --C.R.Selvakumar 15:14, 23 ஜூன் 2006 (UTC)செல்வா

நன்றி செல்வா. --சிவகுமார் 15:19, 23 ஜூன் 2006 (UTC)

தமிழிணையப் பல்கலைக்கழகத் தரவில் "இயந்திரக் கலப்பை", "இழுவை இயந்திரம்", "இழுவைப்பொறி" போன்ற பரிந்துரைகளும் உள்ளன. இருப்பினும் "இயந்திரம்" (வடமொழி என்பது ஒருபுறமிருக்க) என்பது எனக்குப் பொருத்தமாகப் படவில்லை. தானுந்துக் கலப்பை என்பது உழுவுந்து என்பதைக் காட்டிலும் பொருத்தமா? -- Sundar \பேச்சு 09:07, 25 ஜூலை 2006 (UTC)

சுந்தர், உழப் பயன்படும் ஒருவகை உந்து உழுவுந்து. தானுந்து என்னும் பொருளிலேயே சுருக்கமாக உந்து என்பதுள்ளது, கலப்பை என்பது உழுவதற்குப் பயன்படும் கருவிதானே. உழுபடை என்றால் கலப்பை. எனவே நீங்கள் விரும்பும் இரு பொருளும் சுருக்கமாய் உழுவுந்து என்பதில் உள்ளது. மேலும் தானுந்துக் கலப்பை எனில், தானியங்கி போல், யாரும் செலுத்தாமல் உழும் கலப்பை என்பது போன்ற பொருளும் தரலாம். எனவே அவ்வளவாகப் பொருந்தாது. உந்து என்பது எளிமையான சொல்லும் வளமாக பிறசொற்களுடன் இணைந்து பொருள் பெருக்கக்கூடிய சொல். சுமையுந்து, தொடருந்து, அகழுந்து, மகிழுந்து, களியுந்து (களியுலா உந்து =RV), நீருந்து, பீய்ச்சுந்து (jet propelled) என்று பல சொற்கள் ஆக்கப் பயன் படும் சொல்.--C.R.Selvakumar 13:27, 25 ஜூலை 2006 (UTC)செல்வா
நன்றி செல்வா. இங்கு பயன்படுத்துவதற்காகவே கேட்டேன். -- Sundar \பேச்சு 13:35, 25 ஜூலை 2006 (UTC)
நீங்கள் குறிப்பிட்ட இடத்தில், உழவுந்தைக் காட்டிலும் தானுந்துக் கலப்பை என்பதுதான் பொருந்தும். உழவுந்து என்பது tractor and its kind. நீங்கள் சொல்வது புதிய கருத்தான தானே நிலத்தை உழும் தானியங்கியுந்து, அதாவது தானியங்கிக்கலப்பை அல்லது தானியங்கிஉழுவுந்து. நன்றாக எழுதியுள்ளீர்கள் :) அண்மையில் சேர்ந்த என்னையும் குறிப்பிட்டதற்கு நன்றி. உரம் கூட்டுகிறேனா, சினம் கூட்டுகிறேனா என்று தெரியவில்லை :)--C.R.Selvakumar 15:18, 25 ஜூலை 2006 (UTC)செல்வா
இப்போது தானியங்கிக் கலப்பை என்று பயன்படுத்தியுள்ளேன். பாராட்டுக்களுக்கு நன்றி. நீங்கள் கண்டிப்பாக உரமிடத்தான் செய்கிறீர்கள். பின்னூட்டம் தருவது சினம் கூட்டுவது அல்ல, அது நம் வளார்ச்சிக்கு மிகத் தேவையான ஒன்று. :) -- Sundar \பேச்சு 06:44, 26 ஜூலை 2006 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஏர்&oldid=2308001" இலிருந்து மீள்விக்கப்பட்டது