பேச்சு:எவரெசுட்டு சிகரம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எவரெசுட்டு சிகரம் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

மலை வேறு சிகரம் வேறா? --Natkeeran 21:55, 26 மே 2006 (UTC)[பதிலளி]

மலை is mountain. சிகரம் is peak. There can be many peaks in a mountain :)--ரவி 15:22, 27 மே 2006 (UTC)[பதிலளி]

நற்கீரன், சிகரம், முகடு, கோடு ,கொடுமுடி முதலியன கூராக, மேலே செல்லச் செல்ல குறுகிச் செல்லும் மலையமைப்பைச் சிறப்பாகக் குறிப்பன. அத்தகு அமைப்புகள் கொண்டு இருப்பதால் பொதுவாக மலையையும் சுட்டும். மலை முகடு, மலைச் சிகரம் என்னும் வழக்குகளைக் கண்டால் மலை அமைப்புகளின் ஒன்றை சுட்டுவது அறியலாம். மலை வேறு, அடுக்கடுக்காக இருக்கும் மலைத்தொடர் வேறு, குன்று வேறு. இவை தவிர வெற்பு, கல், என்று பற்பல பெயர்கள் உள்ளன. --C.R.Selvakumar 15:35, 27 மே 2006 (UTC)செல்வா[பதிலளி]

ரவி, செல்வா தகவல்களுக்கு நன்றி. --Natkeeran 16:32, 27 மே 2006 (UTC)[பதிலளி]

இமய மலை என்றுதானே தமிழில் சொல்வார்கள்?[தொகு]

--Natkeeran 13:28, 19 அக்டோபர் 2008 (UTC)[பதிலளி]

எவரெஸ்ட் என்பது இலமயமலையில் (இமயமலைத்தொடரில்) உள்ள ஒரு கொடுமுடி (சிகரம்). இமயமலை என்பது பொதுவாக எவரெஸ்ட் உட்பட பல சிகரங்களை, கொடுமுடிகளைக் கொண்ட பெருமலை. --செல்வா 16:41, 19 அக்டோபர் 2008 (UTC)[பதிலளி]