பேச்சு:எலும்பு மச்சை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எலும்பு மச்சை உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

என்பு ஊன் என்ற பயன்பாட்டை எங்கோ படித்துள்ள நினைவு. இறைச்சிக் கடைகளில் சூப்பி என்றும் குறிப்பிடுவதுண்டு -- இது வெறும் பேச்சு வழக்காக இருக்கலாம். மச்சை வடமொழி என்றெண்ணுகிறேன். -- Sundar \பேச்சு 06:39, 9 ஜூலை 2007 (UTC)

சுந்தர், உட்கூழ், உட்சுரம், வெண்ணஞ்சு என்னும் சொற்களைப் பயன்படுத்தலாம். என்பு ஊன், சூப்பி என்னும் சொர்களையும் பயன்படுத்தலாம். மச்சை என்பது மஜ்ஜை என்னும் சொல்லில் இருந்து பெற்றதாகும். மஞ்சு = மென்மை, பஞ்சு போன்றது, மேகம் போன்றது, புசுபுசுப்பு முதலிய பொருள் வழி பெற்றதாகவும் இருக்குமோ என அறியேன். மஞ்சு --> மஞ்சை --> மச்சை ?? இது எவ்வாறாகிலும், தமிழில் என்பு ஊன், சூப்பி, வெண்ணஞ்சு, உட்கூழ், உட்சுரம் என்னும் சொற்கள் இருப்பதால் இவற்றில் ஏதேனும் ஒன்றை முன்னிலைப் படுத்தலாம்.--செல்வா 17:32, 9 ஜூலை 2007 (UTC)
நன்றி செல்வா. மச்சை தமிழிலிருந்து சென்றிருக்க வாய்ப்புள்ளது. இருப்பினும் இதுபோன்ற பல சொற்கள் போதிய ஆய்வர்களின்மையால் வடமொழியென்று கருதப்பட்டு வருவது கவலையளிக்கிறது.
திராவிட மொழிகள் இந்திய ஐரோப்பிய மொழிக்குடும்பத்தின் உறுப்பினர்கள் அல்ல என்று கூறவே கேல்டுவெல் என்ற ஆங்கிலேயர் வர வேண்டியதாயிற்று. [1] :-( -- Sundar \பேச்சு 10:47, 10 ஜூலை 2007 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:எலும்பு_மச்சை&oldid=2518264" இலிருந்து மீள்விக்கப்பட்டது