பேச்சு:எர்ணஸ்ட் மாயர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கார்த்திக் இவருடைய பெயர் எர்ணஸ்ட் மாயர் என்று இருப்பது நல்லது. இவர் Ernst Mayr (முழுப்பெயர் Ernst Walter Mayr) என்று இருந்தாலும், தமிழில் இரண்டிற்கு மேல் மெய்யெழுத்துக்கள் வருவது நம் ஒலிப்புக்கு இடையூறு தருவது. மேலும் டாய்ட்சு மொழியில் மாய்ர் என்று ஆகார நெடிலாகத்தான் அவருடைய கடைசிப் பெயரை (குடும்பப் பெயரை)ப் பலுக்குவார்கள். இதனை சற்றே எளிமைப்படித்தி நாம் மாயர் எனலாம். அடுத்ததாக படிமலர்ச்சி அல்லது படிவளர்ச்சி என்னும் சொற்களையே ஆளுங்கள். ஓரிடத்தில் படிமலர்ச்சி என்றும் இன்னொரு இடத்தில் பரிணாம வளர்ச்சி என்று ஆண்டிருக்கின்றீர்கள். நீங்கள் இக் கட்டுரை தொடங்கியது கண்டு மகிழ்கிறேன். நன்றாக விரித்து எழுதுவீர்கள் என்று நினைக்கிறேன். --செல்வா 12:09, 2 ஜூன் 2008 (UTC)

கருத்துக்களுக்கு நன்றி செல்வா. "எர்ணஸ்ட் மாயர்" என்றே வைத்துக்கொள்ளலாம். தயவுசெய்து இந்த கட்டுரையை "எர்ணஸ்ட் மாயர்" என்ற பெயருக்கு மாற்றிவிடவும் [எனக்கு மாற்றத்தெரியாது!:-(] இக்கட்டுரையை இன்னுமும் எழுதி வருகிறேன். இனிவரும் பகுதிகளில் படிமலர்ச்சி என்ற சொல்லையே ஆளுகிறேன். தவறுகளுக்கு மன்னிக்கவும்.--கார்த்திக் 19:02, 2 ஜூன் 2008 (UTC)

செல்வா கட்டுரையில் பெயரை மாற்றிவிட்டேன். கோப்பிலும் பெயரை மாற்றவும் (மன்னிக்கவும்- எனக்கு தெரியவில்லை)--கார்த்திக் 19:08, 2 ஜூன் 2008 (UTC)

செல்வா - பக்கத்தை மற்றிவிட்டேன் :-)--கார்த்திக் 19:18, 2 ஜூன் 2008 (UTC)

கார்த்திக், தமிழ் விக்கிப்பீடியாவில் "மன்னிக்கவும்" என்பது தடை செய்யப்பட்ட சொல் :) நீங்கள் மாற்றம் செய்ததற்கு நன்றி. எத்தனையோ பேருக்கு எர்ணஸ்டு மாயர் என்பவர் யார் என்று தெரியாமல் இருக்கும். நீங்கள் எழுதும் கட்டுரை அவர் யார், என்னென்ன அருஞ்செயல்கள் செய்தார் என்று படிப்போர் உணர வழி வகுக்கின்றீர்கள். தமிழில் எர்ணஸ்டு மாயரரைப் பற்றி எழுதியவர், அல்லது விரிவாக எழுதியவர் நீங்களே முதலாகக் கூட இருக்கலாம். எனவே வரலாற்று பதிவாகவும் அமையக்கூடும். நன்றாக பயனுடைய வழிகளில் விளக்கி எழுதுங்கள், கார்த்தி. உண்மையான ஆக்கப் பணிகள் இவை.--செல்வா 19:38, 2 ஜூன் 2008 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:எர்ணஸ்ட்_மாயர்&oldid=248824" இலிருந்து மீள்விக்கப்பட்டது