பேச்சு:எம். ஆர். ராதா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுந்தர், ஆங்கில விக்கி கட்டுரையில் இவரது பெயர் Mohan R. Radha என்று தலைப்பிடப்பட்டுள்ளதே?--Kanags 06:55, 3 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]

ஆம், நானும் கவனித்தேன். அவர்கள் எந்த ஆதாரத்தைப் பின்பற்றினர் என்று அறிய வேண்டும். நீங்கள் எங்கு இவ்விளக்கத்தைப் பார்த்தீர்கள்? -- Sundar \பேச்சு 07:36, 3 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]
சுந்தர், ஆதாரம் இணைத்துள்ளேன். திண்ணையில் உள்ள கட்டுரையில் ([1] இவர் திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் பிறந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்கள். ஆனாலும் வேறு சில முரண்பாடான தகவல்களும் உள்ளன. (எ-கா: முதல் திரைப்படம் சத்தியவாணி என்கிறார்கள் (1940).--Kanags 07:57, 3 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]
திருச்சி அவரது சொந்த ஊர் என்று சுதாங்கனின் புத்தகத்தில் படித்ததாக நினைவு. மற்ற தகவல்கள் அப்புத்தகத்தில் உள்ளனவா என்று பார்க்கிறேன். மேலும் முதல் படம் சந்தனத்தேவன் என்கிறது இந்து நாளிதழ்!

[1] -- Sundar \பேச்சு 08:04, 3 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]

எம். ஆர். ராதா பிறந்த நாள்[தொகு]

இன்றைய (21.02.2018) தினமலர் நாளிதழ் எம். ஆர். ராதா பிறந்த நாள் என தகவல் வெளியிட்டுள்ளது. இந்த இணைய தளக் கட்டுரையிலும் பெப். 21 என்றே குறிப்பிடப் பட்டுள்ளது. விக்கி கட்டுரையில் பெப்ரவரி 21 என இருந்த பிறந்த நாளை நீங்கள் நேற்று (20.02.2018) ஏப்ரல் 14 என மாற்றியுள்ளீர்கள். இதற்கு மேற்கோள் கொடுக்கப்படவுமில்லை. என்ன ஆதாரத்தைக் கொண்டு தேதியை மாற்றினீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா? --UKSharma3 உரையாடல் 14:15, 21 பெப்ரவரி 2018 (UTC)

அவருடைய சரித்திரங்கள் பற்றி பல நூல்கள் வந்துள்ளன . அவ்வளவு தூரம் போவானேன் .விக்கி -ஆங்கிலத்தில் அவருடைய பிறந்த தேதி சரியாக உள்ளது.--−முன்நிற்கும் கருத்து Nakarajank (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

விக்கி ஆங்கிலக் கட்டுரையில் மேற்கோள் எதுவும் தரப்படவில்லை. ஆகவே அதை வைத்து மாற்றம் செய்வது சரியாகத் தெரியவில்லை.--UKSharma3 உரையாடல் 02:29, 23 பெப்ரவரி 2018 (UTC)
நாகராஜன், தி இந்து மேற்கோள் தவிர இன்னும் ஓரிரண்டு நம்பத்தகுந்த மேற்கோள்கள் இருந்தால் தாருங்கள். @Uksharma3: antrukandamugam கட்டுரை விக்கிக் கட்டுரையை எழுதியுள்ளது. அதனை மேற்கோளாகத் தர முடியாது. வேறு மேற்கோள்கள் நிச்சயம் அச்சு நூல்களில் இருக்கும். தேடிப் பார்க்க வேண்டும்.--Kanags (பேச்சு) 09:35, 22 பெப்ரவரி 2018 (UTC)
தமிழ் விக்கியில் முதலில் பெப். 21 என்றே இருந்தது. அந்தத் தகவல் எங்கிருந்து பெறப்பட்டது என்று தெரியவில்லை. தினமலர் செய்தி அதன் அடிப்படையில் அமைந்திருக்கலாம். ஏனெனில் தமிழ் விக்கி கட்டுரையில் தேதி மாற்றம் பெப் 20 இல் தான் செய்யப்பட்டுள்ளது. ஆதாரம் இல்லாதபடியால் இந்த மாற்றத்தை revert செய்வது நல்லது என்று நினைக்கிறேன். பெப். 21 என முன்னர் ஏதோ ஒரு அடிப்படையிலேயே எழுதப் பட்டிருக்க வேண்டும்.--UKSharma3 உரையாடல் 02:29, 23 பெப்ரவரி 2018 (UTC)
@Kanags: தி இந்து கட்டுரை, திருமதி ராதிகா சரத்குமார் ஆட்சேபித்த காரணத்தால் பத்திரிகையிலிருந்து நீக்கப்பட்டு விட்டது. இதைப் பார்க்கவும். ஆங்கிலக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள மேற்கோள் pressreader தளத்தால் மறுபிரசுரம் செய்யப்பட்டதே. மூலப் பத்திரிக்கை அதை நீக்கி விட்டதால் அதை மேற்கோளாக எடுப்பது தவறு என்று நினைக்கிறேன். --UKSharma3 உரையாடல் 02:57, 23 பெப்ரவரி 2018 (UTC)

முகில் எழுதிய எம் ஆர் ராதாவின் சுய சரிதம் , போன்ற புத்தகங்கள் ஏற்றுக்கொள்ள கூடியதா ?--−முன்நிற்கும் கருத்து Nakarajank (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

@Nakarajank: நூலின் விபரங்களுடன், தகவல் உள்ள பக்கத்தையும் தாருங்கள்.--Kanags (பேச்சு) 13:37, 23 பெப்ரவரி 2018 (UTC)

@Uksharma3: ஆங்கில விக்கியில் ஆரம்பத்தில் பெப் 21 என இருந்ததைப் பின்னர் ஏப் 14 என இந்து கட்டுரையை ஆதாரம் காட்டி மாற்றியிருக்கிறார்கள். பெப் 21 என்பதற்கும் இணையத்தில் ஒரு சில ஆதாரங்கள் உள்ளன. இப்போதைக்கு ஏப் 14 என்றே இருக்கட்டும். மேலும் நம்பத்தகுந்த ஆதாரங்களைத் தேடி எடுக்கலாம்.--Kanags (பேச்சு) 22:27, 23 பெப்ரவரி 2018 (UTC)

  1. hinduonnet.com/thehindu/thscrip/print.pl?file=2005072216350800.htm&date=2005/07/22/&prd=th&
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:எம்._ஆர்._ராதா&oldid=2489969" இலிருந்து மீள்விக்கப்பட்டது