பேச்சு:உலகமயமாதல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குறிப்புகள்[தொகு]

உலகமயமாதல் நோக்கி விமர்சனங்கள்[தொகு]

  • "'genuinely' transnational companies are are relatively rare, most are national companies trading internationally."
  • "there is no shift of finance and capital...direct investment is highly concentrated amongst the countries of the developed world"
  • if EU, US, and Japan co-orinate they can "regulate global economic markets and forces."
  • UNEVEN IN ITS EFFECTS (ex: only fraction of the world is on www)
  • Western imperialism
  • LOSERS:
  • "evil" global forces: drug cartels, terrorists
  • multi national companies are NOT accountable
  • does local matters more or global
  • illusion of spatial closeness

Source:

  • John Baylis and Steave Smith. (2001). The Globalization of World Politics. New York: Oxford press.

--Natkeeran 02:16, 21 செப்டெம்பர் 2006 (UTC)

மயூரநாதனின் கட்டுரையில் இருந்த தகவல்கள்[தொகு]

பல்வேறுபட்ட இடங்களில் இருக்கின்ற மக்கள் மற்றும் நிறுவனங்களிடையே, ஒன்றிலொன்று தங்கியிருத்தலையும், ஒருங்கிணைதலையும், ஊடுதொடர்புகளையும், அதிகரிக்கின்ற பொருளியல், சமூகம், தொழில்நுட்பம், பண்பாடு மற்றும் அரசியல் தொடர்பில் ஏற்படுகின்ற வரிசையான மாற்றங்களே உலகமயமாதல் (globalization) என்னும் சொல்லால் குறிக்கப்படுகின்றன. உலகமயமாதல் என்பதைப் பொருளாதாரம் தொடர்பில் பயன்படுத்தத் தொடங்கியது 1981 ஆம் ஆண்டிலேயேயாகும். தியோடோர் லெவிட் (Theodore Levitt) என்பவர் எழுதிய சந்தைகளின் உலகமயமாதல் (Globalization of Markets) என்னும் நூலில் உலகமயமாதல் என்பது பொருளாதாரம் தொடர்பில் பயன்படுத்தப்பட்டது. உலகம் தழுவிய சமூகவியல் ஆய்வுகளிலும், இது ஒரு பரந்த, அனைத்தும் தழுவிய தோற்றப்பாடாக (phenomenon) உணரப்பட்டது.

உலகமயமாதல் என்பது பல கோணங்களில் இருந்து நோக்கப்படுகின்றது:

  • வளர்ந்து வரும் நாடுகளுக்கு, அதிகரித்த வாழ்க்கைத் தரத்தையும், வளத்தையும் கொண்டுவருகின்றது என்பதும், முதலாம் உலக நாடுகளினதும், மூன்றாம் உலக நாடுகளினதும் நிதி வளத்தைப் பெருக்க உதவுகிறது என்பதும் ஒரு வகையான நோக்கு. இது உலகமயமாதலைப் பொருளியல் மற்றும் சமூக அடிப்படையில் ஒரு விரும்பத்தக்க விடயமாகக் கருதுகின்றது.
  • இன்னொரு நோக்கு, பொருளியல், சமூக மற்றும் சூழலியல் அடிப்படையில் உலகமயமாதலை எதிர்மறையான, விரும்பத்தகாத ஒரு விடயமாகக் கருதுகின்றது. இதன்படி, உலகமயமாதல், வளர்ந்து வருகின்ற சமுதாயங்களின் மனித உரிமைகளை நசுக்குகிறது என்றும், வளத்தைக் கொண்டுவருவதாகக் கூறிக்கொண்டு கொள்ளை இலாபமீட்டுவதை அனுமதிக்கிறது என்றும் சுட்டிக் காட்டப்படுகின்றது. இவை தவிரப் பண்பாட்டுப் பேரரசுவாத (cultural imperialism) நடவடிக்கைகளினூடாகப் பண்பாட்டுக் கலப்புக்கு வழி வகுப்பதும், செயற்கைத் தேவைகளை ஏற்றுமது செய்வதும், பல சிறிய சமுதாயங்கள், சூழல்கள் மற்றும் பண்பாடுகளைச் சிதைத்து விடுவதும் இதன் எதிர்மறை விளைவுகளாக எடுத்துக் காட்டப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:உலகமயமாதல்&oldid=75808" இலிருந்து மீள்விக்கப்பட்டது