பேச்சு:உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விக்கி கட்டுரையில் மாண்புமிகு, திரு போன்ற பதங்கள் தேவைதானா??--Arafat 05:49, 23 பெப்ரவரி 2010 (UTC)

விக்கி வழக்கப்படி இல்லை என்று நினைக்கிறேன். ஆங்கில விக்கியில் கனடியத் தலைமை அமைச்சர் இசுட்டீபன் ஆர்ப்பர் பக்கத்தைப் பார்க்கலாம் கட்டுரையில் இல்லை ஆனால் வலப்புறம் உள்ள தகவல்பட்டியில் Right Honourable என்று உள்ளது. இடாய்ச்சு மொழி விக்கி போன்ற பிற விக்கிகளில் இப்படி குறிக்கப்பெறவில்லை. --செல்வா 06:09, 23 பெப்ரவரி 2010 (UTC)
ஆமாம். தனி நபர் பக்கங்களின் வலது பக்க வார்ப்புருவில் மட்டும் இவ்வாறு மாண்புமிகு, புனிதர் போன்ற அடைமொழிகள் உள்ளன. மற்ற கட்டுரைகளில் அதே நபர்களை பற்றி குறிப்பிடும்பொழுது வெறும் பெயர் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது. இந்த கட்டுரையில் உள்ள மாண்புமிகுக்களை நீக்கலாமா? ஏதேனும் எதிர்ப்புகள் உள்ளனவா??--Arafat 06:33, 23 பெப்ரவரி 2010 (UTC)
  • திரு என்பது போன்று குறிப்பிடப்பட்ட மரியாதைக்கான அடையாளச் சொற்கள் அனைத்தும் நீக்கப்பட்டிருக்கின்றன. வேறு ஏதும் தென்பட்டால் நீக்கிவிடலாம். எனக்கு எவ்வித ஆட்சேபணையுமில்லை.--Theni.M.Subramani 07:26, 23 பெப்ரவரி 2010 (UTC)
இந்தக் கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் விமர்சனங்கள் பகுதி தேவையா? நீக்கப்பட்டால் நன்றாக இருக்கும் --Theni.M.Subramani 08:03, 23 பெப்ரவரி 2010 (UTC)
விமரிசனம் பகுதியில் தரப்பட்டுள்ள தினமணி மேற்கோள் இணைப்பில் எவ்வித விமரிசனமும் தரப்படவில்லை. எனவே அதனை நீக்கியுள்ளேன்.--Kanags \உரையாடு 10:26, 12 மார்ச் 2010 (UTC)

விரிவாக்க வேண்டுகோள்[தொகு]

இந்தக் கட்டுரையில் படங்கள், தகவல் சேர்த்து விரிவாக்கி மேம்படுத்த இயலுமானால் நன்று. நன்றி--ரவி 06:27, 12 மார்ச் 2010 (UTC)

டாக்டர் தமிழா, மருத்துவர்களா?[தொகு]

இந்த முழுப் பட்டியலையும் இங்கு இடுவது அவசியமா?, பல இடங்களில் டாக்டர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர்க்கப்படலாமே? முனைவர், மருத்துவர் என்று கூறலாமே. --Natkeeran 00:36, 13 மார்ச் 2010 (UTC)

முழு அமைப்புக் குழு பட்டியல் தேவை இல்லை. இத்தகவல்கள் இணையத்தில் வேறுஎங்காவது இருந்தால் அதற்குத் தொடுப்பு மட்டும் கொடுக்கலாம்.--ரவி 12:03, 13 மார்ச் 2010 (UTC)

டாக்டர் என்றிருக்கும் இடங்களில் அவர்கள் முனைவர் பட்டம் பெற்றவர்களா? அல்லது மருத்துவர் பட்டம் பெற்றவர்களா என்கிற சந்தேகத்தின் அடிப்படையில் டாக்டர் என்று பதிவு செய்யப்பட்டிருந்தது. எனக்குத் தெரிந்தவரையில் முனைவர் மற்றும் மருத்துவர் என்று திருத்தம் செய்யப்பட்டு விட்டது. சந்தேகத்திற்குரியதாக இருந்த இடத்தில் நீக்கப்பட்டு விட்டது. --Theni.M.Subramani 13:28, 13 மார்ச் 2010 (UTC)

பெயர்ப் பொருத்தம்[தொகு]

இதற்கு முன்பு நடந்த பிற உலகத் தமிழ் மாநாடுகள் பற்றிய கட்டுரைகள் விக்கியில் உள்ளனவா? எனில் இந்தக் கட்டுரையின் தலைப்பை கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2010 என மாற்றலாமே.. --ஏர்னஸ்டோ பாலாஜி 14:32, 19 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

பாலாஜி, இதற்கு முன் நடைபெற்றவை உலகத் தமிழ்மாநாடுகள் என்று பொதுவாக அறியப்பட்டாலும் அவை உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகள்.காலங்காலமாய் அவற்றை நடத்தியது உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். கோவை மாநாட்டை நடத்தியதோ தமிழக அரசு. எனவே தான் வேறுபடுத்திக் காட்டும் பொருட்டு செம்மொழியை இணைத்துப் பெயரிட்டனர். தலைப்பை மாற்றும் அவசியம் இந்த ஐந்தாண்டுகளுக்கு இருக்காது என நினைக்கிறேன். இனியொரு உலகத் தமிழ்ச்செம்மொழி மாநாடு நடந்தால் தலைப்பை மாற்ற வேண்டிவரும். :-) பார்க்க - உலகத்_தமிழாராய்ச்சி_மாநாடு--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 14:43, 19 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]