பேச்சு:ஈ. வெ. இராமசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பேச்சு:ஈ. வெ. ராமசாமி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பொருளடக்கம்

[தொகு] வர்ணாஸ்ரமம் , நிறப்பிரிகை

வர்ணாஸ்ரம தர்மம் என்பதை வர்ணாஸ்ரம விழுமியம் (Value) என்ற அளவில் தான் தமிழ்படுத்த என்னால் முடிந்தது. வர்ணாஸ்ரமம் என்பதை நிறப்பிரிகை என்று தமிழில் எழுதலாமா ?? - Santhoshguru 14:20, 23 ஆகஸ்ட் 2005 (UTC)

நிறப்பிரிகை ஏற்கெனவே diffraction of light (prism) என்ற பொருளில் ஒளி கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. வேண்டுமானால் இனப்பாகுபாட்டு விழுமியம் என்று கொள்ளலாமா? -- Sundar \பேச்சு 17:52, 23 ஆகஸ்ட் 2005 (UTC)
ஓ ! நிறப்பிரிகை என்பது diffractionக்கான தமிழாக்கமா !!! அப்பதத்தினை எங்கோ படித்த ஞாபகம் இருந்தது ஆனால் என்ன அர்த்தம் என்பதை மறந்துவிட்டேன். இனப்பாகுபாட்டு விழுமியம் என்பது எவ்வளவு சரியானது (accurate) என்று தெரியவில்லை. வர்ணாஸ்ரமத்திற்கு நல்ல தமிழ் பெயரினை S.V.ராஜதுரையின் புத்தகத்தில் படித்த ஞாபகம். அதை தேடிப் பார்க்கிறேன். - Santhoshguru 08:20, 24 ஆகஸ்ட் 2005 (UTC)
ஓ. அப்படியானால் நன்று. -- Sundar \பேச்சு 09:14, 24 ஆகஸ்ட் 2005 (UTC)

[தொகு] பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்

தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!

--TrengarasuBOT 01:01, 14 மே 2007 (UTC)

[தொகு] பெரியாரைப் புரிந்து கொள்ள

                  பெரியாரைப் புரிந்து கொள்ள -1


பெரியார் அவர்களைப் பற்றிப் பலர் பல விதமானக் கருத்துக்களைச் சொல்லி,எழுதி வருகின்றனர்.அவர் அவருடையக் கருத்துக்களையே மாற்றிக் கொண்டு"நான் என்ன கல்லா? மாறாமல் இருக்க?காலம் மாறும் போது கருத்துக்கள் அதற்கேற்றால் போல மாறவேண்டும்." என்று கூறித் தான் மாறியுள்ள காரணங்களை எடுத்துச் சொல்லியுள்ளார்,விளக்கமாக.

பெரியார்மேல் அவதூறு சொல்பவர்கள் இதைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் விமர்சிப்பது கருத்து நாணயம் ஆகாது.அதே போல பெரியார் சொன்னார் என்று எதையாவது சொல்வது.அதை ஏன் சொன்னார்,எதற்காகச் சொன்னார் என்றெல்லாம் அவரது கருத்துக்களை சொல்லாமல் சொல்வது.இது மிகவும் கேவலாமான எழுத்துக்க்ள் ஆகும்.

தமிழ் வலைப் பதிவுகள் நிறைய வந்து கொண்டிருக்கின்றன்.பலதரப் பட்டவர்களும் எழுதுகின்றார்கள்.அவர்கள் நேர்மையைக் கடைப் பிடிப்பது அனைவர்க்கும் நல்லது.

இந்தக் கட்டுரைகளிலே பெரியார் கருத்துக்களையும்,அதற்கு அவர் சொன்ன காரணங்களையும் அனைவரும் புரிந்து கொள்ள எடுத்துவைப்போஒம்.

பெரியார் "தமிழ் காட்டுமிராண்டி மொழி" என்றார் என்பது அனைவருங் கேள்விப் பட்டதுதான். ஏன் சொன்னார் என்பதைப் பல முறை விள்க்கிச் சொல்லியுள்ளார். உலகம் வேகமாக அரிவு வளர்சிசியில் முன்னேறி வரும் போது தமிழ் இன்னும் பழைய காலத்திலேயே இருப்பதையும்,பழைய இலக்கியங்களைப் பற்றியே நேரம்,உழைப்பைச் செலவு செய்வதையும் வன்மையாகக் கண்டித்தார். பள்ளியிலே சந்திர கிரஹணத்தைப் பற்றி சொல்லித் தரும் அறிவியல் ஆசிரியர் பள்ளிக்கு வெளியில் சென்றதும் என்ன செய்கின்றார். அறிவியல் மூலமாகச் சிந்தித்தது மட்டுமன்றி பல உலக அறிஞர்களின் கண்டு பிடிப்புக்களை,வெளியீட்டுக்களை தமிழில் மொழி பெயர்த்துக் குறைந்த விலையில் விற்றுத் தமிழர்கட்கு வெளியுலகத்தை அறிமுகப் படுத்தி வைத்தார். புலவர்களிடமே ஒளிந்து கொண்டிருந்த திருக்குறளை திருக்குறள் மாநாடுகள் நடத்தி மக்களிடம் கொண்டு வந்தார்.தனித் தமிழ் இயக்கத்தை ஆதரித்துத் தமிழ் வளர்த்தார். பயனர்:பெரியார்தமிழன்

தலைப்புகளில் ஒரே மாதிரியான பின்பற்றல் கடைபிடிக்கபடுகின்றதா? ஆங்கில விக்கிக்கும் நமக்கும் பேறுபாடு உண்டா? பல இடங்களில் பட்டங்கள் போடப்பட்டுள்ளது. இது குறித்து விக்கிப் பட்டறையில் அலசப்பட்டது. ஒரே மாதிரியான பின்பற்றல் கடைப்பிடித்தால் சர்ச்சைகள் எழ வாய்ப்பில்லை. ஆங்கிலத்தில் நீக்கியிருக்கின்றார்கள் தமிழில் இருக்கின்றது தமிழில் நீக்கியிருக்கின்றார்கள் ஆங்கிலத்தில் இருக்கின்றது. இங்கும் அதே மாதிரி தான் உள்ளது.--செல்வம் தமிழ் 11:45, 25 ஜூன் 2009 (UTC)


[தொகு] தனிப்பக்கம்

எச்சரிக்கை: இந்தப் பக்கம் 73 கிலோபைட்ஸ் நீளமானது; 32 kb யை அண்மிக்கும் அல்லது அதிலும் கூடிய அளவுள்ள பக்கங்களைத் தொகுப்பதில் சில உலாவிகளுக்கு பிரச்சினை உண்டு. தயவுசெய்து பக்கங்களைச் சிறிய பகுதிகளாகப் பிரிப்பது பற்றிக் கவனத்தில் எடுக்கவும்.

மிகுதியான தகவல்கள் என்பதால் தனிப்பக்கங்களை பிரித்து செயல்படுத்தலாம்.

32க்கும் 73க்கும் உள்ள வேறுபாட்டை விக்கயன்பர்கள் கண்டு கொண்டார்களா.

அறிமுகத்திற்கே தனிப்பக்கம் அமைக்கும் அளவிற்கு எழுதப்பட்டுள்ளது. கவணத்தில் கொள்ளவும்,.

நன்றி!.

- சகோதரன் ஜெகதீஸ்வரன் \பேச்சு

"http://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஈ._வெ._இராமசாமி&oldid=1077844" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி