பேச்சு:ஈலியம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கீலியம் --Natkeeran 23:28, 3 ஜனவரி 2009 (UTC)

தமிழ் முறைப்படி எழுதுவதென்றால், ஈலியம் என்று எழுதுதல்வேண்டும். மற்றுமொரு முறை இஃகீலியம் என்பதாகும். இவை இரண்டும் எனக்கு ஒப்புதலே, ஆனால் ஒரே சீராக எங்கும் இப்படி ஆளல் வேண்டும். பயனர்களிடையே கருத்தொருமை இருந்தால்செய்யலாம். என் பரிந்துரை (1) ஈலியம், (2) இஃகீலியம். முதல் எழுத்தாக ஆய்த எழுதலாம் என்றால் ஃஈலியம் என்று ஒலித்திரிபு இல்லாமல் கூறலாம். இகரம், உகரம் முதலியன் சேர்த்து எழுதும் தமிழ் முறையைக் கையாண்டால் பல இடங்களில் எளிதாக எழுதவும் பேசவும் உதவியாக இருக்கும். தமிழ் முறையைப் புறக்கணிப்பதாலேயே பல குறைபாடுகள் எழுகின்றன. எடுத்துகாட்டாக Strontium என்னும் தனிமத்தைத் தமிழில் எழுதுவதைப் பற்றிக் சிலர் கிரந்த எழுத்தின் அவசியத்தைக் கூறுகின்றனர். இத் தனிமத்தை எசுப்பானியர் Estroncio என்கிறார்கள். நாம் எசுட்ரான்சியம் என்றோ திரான்சியம் என்றோ, எசுத்திரான்சியம் என்றோ கூறினால் என்ன தவறு? இத்தாலியன் Stronzio என்கிறான் (Strontium என்று அவன் சொல்லவில்லை) ஆகவே தனிமங்களின் பெயரை அவரவர்கள் தங்கள் மொழியில் பொருத்தமான முறையில் வழங்குவர். எனவே இங்கு Helium என்பதை ஈலியம் எனலாம்.--செல்வா 23:50, 3 ஜனவரி 2009 (UTC)

இத்தாலியர் Elio என்கிறார்கள். பார்க்கவும் --செல்வா 05:43, 11 ஜனவரி 2009 (UTC)

இணையத்தில் பரிதியம் எல்லியம் ஆகிய இரண்டு தூய தமிழ் சொற்கள் ஆங்கில பெயரான Helium என்பதற்கு நிகராக பயன்படுத்தப்படுகிறது. --தொழில்நுட்பம் (பேச்சு) 11:28, 4 மே 2020 (UTC)[பதிலளி]

தமிழ் பேச்சு விக்கிபீடியா திட்டத்தின் ஆங்கில பேச்சுக் கட்டுரை நீக்க[தொகு]

@கோபி @Kanags இந்த கட்டுரையில் வெளி இணைப்புகள் பகுதியில் Spoken Wikipedia என்னும் வார்ப்புருவில் உள்ள ஆங்கில ஒலிகோப்பு நீக்க வேண்டும் இது எனது வேண்டுகோள். இன்னும் சில கட்டுரைகளில் ஆங்கில ஒலிக்கோப்பு உள்ளது.ஸ்ரீவேங்கடகிருஷ்ணண் (பேச்சு) 05:50, 3 ஏப்ரல் 2023 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஈலியம்&oldid=3688535" இலிருந்து மீள்விக்கப்பட்டது