பேச்சு:இழ்சாக் கார்ட்டியே

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இழ்சாக் கார்ட்டியே என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

தமிழ்ச்சொல்[தொகு]

Explorer என்னும் சொல்லுக்கு இணையாக புதுப்புலம் ஆய்வர், புதுப்புலம் ஏகுநர், புதிப்புலம் தேடுவர், புதுப்புலம் காண்பர் என்பது போன்ற சொற்கள் ஆக்கலாம். புதுநிலம் நாட்டுவர் என்றும் கூரலாம், ஆனால் கடல்வழியாகவும் விண்வழியாகவும் புதுப்புலங்களைக் கண்டு ஆய்வர் என்பது பொதுப்பொருல் போல தோன்றுகின்றது. புதுநாடி என்றும் கூறலாமோ என்று தோன்றுகின்றது. இக்கட்டுரையில் புதுப்புலம் ஏகுநர் என்று ஆண்டுள்ளேன். வேறு பொருத்தமான சொற்கள் கிடைத்தால் மாற்றிக்கொள்ளலாம். அதே போல navigator என்பதற்கு கலவர் என்று ஒரு சொல் உள்ளது. அதனைப் பயன்படுத்தி உள்ளேன்.--செல்வா 21:43, 1 டிசம்பர் 2008 (UTC)

மொழியில் Jacques Cartier என்னும் சொல் ழ்சாக் கார்ட்டியே என்று ஒலிக்கும். இதனை இழ்சாக் கார்ட்டியே என்று எழுதலாம். இப்படி ழகர ஒற்றுக்கு அடுத்து சகரம் வருவது தமிழில் கிடையாது. ஆனால் ஒலிப்பு நெருக்கம் கருதி இப்படி இட்டுள்ளேன்.--செல்வா 21:58, 1 டிசம்பர் 2008 (UTC)