பேச்சு:இலங்கை ஆப்பிரிக்கர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காப்பிரி என்றுதான் இவர்கள் அழைக்கப்படுகின்றனர்.--பாஹிம் 01:33, 19 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

காப்பிரி பின்னர் பேச்சு வழக்கில் காப்பிலி என மருவியிருக்கிறது. ஆப்பிரிக்கர்கள் அனைவரையுமே காப்பிலி என அழைக்கும் வழக்கம் இப்போது உள்ளது. கட்டுரைத் தலைப்பைக் இலங்கைக் காப்பிரி என மாற்றலாம்.--Kanags \உரையாடுக 01:58, 19 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

நன்றி! தயவு செய்து மாற்றிவிடுங்கள் --Anton 05:19, 19 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

காப்பிலி என்பது ஒரு derogatory சொல். காப்பிலி என்ற சொல் காட்டுமிராண்டி என்ற பொருளைச் சுட்டுகிறது என்று நினைக்கிறேன். பேச்சு வழக்கின் இழிவான பொருளுடனே பெரும்பாலும் பயன்படுத்துவர். இதனைப் பயன்படுத்துவது ஒரு கலைக்களஞ்சியத்தில் தகாது. இலங்கைக் கறுப்பர்கள் அல்லது இலங்கை ஆப்பிரிக்கர்கள் எனலாம். --Natkeeran (பேச்சு) 03:24, 5 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]
காப்பிலி என்னும் சொல் இகழ்ச்சிப் பெயராக அன்றி கருநிறமுடையோரைக் (காப்பிரி தவிர்ந்தோர்) குறிக்கும் சொல்லாகவே, பறையர் போன்ற சொற்களும் அவ்வினத்தவர் அல்லாதவர்களுக்கும் கையாளப்படுவது போன்று இலங்கையில் (தமிழிலும் சிங்களத்திலும்) பாவிக்கப்படுகின்றது. இலங்கை ஆப்பிரிக்கர்கள் என்பது காப்பிரி மற்றும் நிட்டாவு ஆகிய இனங்களைக் குறிக்கப்பயன்படுகின்றது. --Anton (பேச்சு) 07:19, 5 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]


பொது வழக்கில் காப்பிலி இகழ்ச்சிப் பெயராக பாவிக்கப்படுகின்றது - en:Kaffir (racial term). இதற்குப் பெயர் மாற்றம் தேவையென்றால், பல இனக்குழுக்களைக் குறிப்பிடும் பெயர்களையும் மாற்ற வேண்டுமோ என்ற ஐயம் எழுகின்றது. இங்குள்ள பல பெயர்கள் (பகுப்பு:சாதிகள் வாரியாகத் தமிழ்ச் சமூகம், யாழ்ப்பாணத்து சாதிப்பிரிவுகளின் பட்டியல், தமிழ்நாடு சாதிகள் பட்டியல், தமிழ்ச் சூழலில் சாதிப் பிரிவுகள் பட்டியல்) இகழ்ச்சிப் பெயராகவும் (derogatory) பயன்படுத்துவதை மறுப்பதற்கில்லை. --Anton (பேச்சு) 07:41, 5 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]