பேச்சு:இலங்கையின் மத்திய மலைப்பகுதிகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரைத் தலைப்பை வழக்கத்தில் உள்ளவாறு இலங்கையின் மத்திய மலைநாடு என்று மாற்றலாமா?--பாஹிம் (பேச்சு) 04:23, 5 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

இலங்கையின் மத்திய மலைப்பகுதிகள் எனலாமா? மலைநாடு என்பதில் உள்ள நாடு என்பது ஒரு நாட்டுக்குள் பொருந்தவில்லை (ஈழம் விதிவிலக்கு:).--Kanags \உரையாடுக 08:33, 5 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

ஈழம் என்பது மட்டும் விதிவிலக்கன்று. நாடு என்பதற்கு வேறு பொருள் உள்ளமையை நீங்கள் அறிந்திருக்கக் கூடும். எடுத்துக் காட்டாக நாட்டுக் கோழி, நாட்டு மருத்துவம், நாட்டான் போன்ற சொற்களிற் தொனிக்கும் பொருள் வெறுமனே நாடு என்பதிலிருந்து வேறுபடுகிறது. அவ்வாறே சோழ நாடு எத்தனையோ வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அங்கும் நாடு என்ற சொல்லையே கையாண்டுள்ளனர். அது தவிர இன்றும் இந்தியாவில் வடநாடு, தென்னாடு என்று பிரித்துக் குறிக்கும் வழக்கம் உள்ளது. அவ்வாறே இலங்கையிலும் மலைநாடு என்ற சொல் மத்திய மலைப் பகுதிகளைக் குறிக்கப் பயன்படுகிறது. பாடநூல்களும் அவ்வாறே குறிக்கின்றன.--பாஹிம் (பேச்சு) 09:58, 5 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

தலைப்பை மாற்றத்தான் வேண்டுமா? அப்படியானால், இலங்கையின் மத்திய மலைப்பகுதிகள் என்றோ அல்லது இலங்கையின் மத்திய மேட்டுநிலங்கள் என்றோ மாற்றலாம். ஏனென்றால், Highlands அதற்குப் பொருத்தமாகவுள்ளது. மற்றும் மலைநாடு என்பது hill country என்பதற்குப் பொருத்தமென நினைக்கிறேன். --Anton (பேச்சு) 15:19, 6 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]