பேச்சு:இராவணன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராவணன் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
இராவணன் என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
இராவணன் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
இராவணன் என்னும் கட்டுரை வைணவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் வைணவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


கருத்து[தொகு]

இராவணின் சிறப்பு இயல்புகளை இராமாயணம் தானே சொல்கிறது. தீய கதாபாத்திரம் என்று குறிப்பிட்டு குறிப்பிடவில்லை என்பதே எமது எண்ணம். சாம கானம் பாடி சிவனை மகிழ்வித்தவனாகவும், இமாலயத்தையே அசைத்த மாபெரும் வீரனாகவும் இராமாயணம் இராவணனைச் சுட்டுகிறது. இலங்கை பொன்னாலான நகரமாக இருந்தது எனவும் குறிப்பிடப் பட்டுள்ளதாக நினைவு. முதல் இராமாயணமாக வால்மீகி இராமாயணத்தை உரைக் கல்லாக கொள்வது சிறப்பான அணுகுமுறையைத் தரும். மற்றவை இத்னைத் தழுவி இயற்றியவர்களின் தாங்கள் உள்வாங்கிக் கொண்ட விதமாக தங்கள் கற்பனையையும் சேர்த்துக் கொடுத்தவை.

Amachu 09:32, 29 ஆகஸ்ட் 2007 (UTC)

உலகிலே இராமாயணம் பல நாடுகளில் (கிழக்காசிய நாடுகளில்) பல விதமாக கூறப்பட்டுள்ளது. இவ்வேறுபாடுகள் பற்றியும் கூறுவதும் பொருந்தும். புலவர் குழந்தை அவர்களின் இராவண காவியம் பற்றியும் கூறுதல் பொருந்தும். ஆனால் இவை அனைத்தும், நடு நிலையோடு கலைகளஞ்சிய நடையில் பதிவு செய்தல் வேண்டும். 2006 ஆம் ஆண்டு புலவர் குழந்தையின் 100ஆவது ஆண்டு.--செல்வா 05:15, 9 ஜனவரி 2007 (UTC)

முதல் வசன மாற்றம் - பரிந்துரை[தொகு]

தற்போது[தொகு]

இராவணன் (கி,மு 6000?) ஆண்டு இலங்கையினை ஆட்சி செய்த இராமாயணத்தில் தீயகதாபாத்திரமாக கூறப்படும் இலங்கையின் மன்னன் ஆவார்.

ராமாயணம் என்பது ஹிந்து மதத்தை சார்ந்த புனைக்கதை (mythological story). அது வரலாறு, அல்லது வரலாறு தழுவியது என்பதற்கு எந்த ஆதாரமும் இது வரை இல்லை. இலங்கைக்கு போகும் வழியில் பேசும் குரங்குகள் இருந்தன என்று கதையில் வருவது நூற்றாண்டுகளுக்கு முன்பு நம்பத் தகுனந்ததாக இருந்திருக்கலாம். இன்று அது சிறுவரின் கதைகளின் மட்டத்தில் உள்ளதாகத் தான் கருதப்படும். ஆகவே, "இராவணன் என்ற கதாபாத்திரம் எப்போது உலகில் இருந்தார்?" என்ற விவாதம் பொருளற்ற வீண் முயற்சி ஆகும். "இராவணன் என்ற வைத்தியர் இருந்ததற்கு ஆதாரம் உள்ளதா?" என்று தேடுவது நல்ல முயற்சி ஆகும். ___ R. Kit Kittappa, rk_kittappa@yahoo.com

பரிந்துரை[தொகு]

இராவணன் இலங்கையை ஆட்சி செய்த அரசனாகவும், சிவ பக்தனாகவும், இராமனுக்கு நேர் எதிராகவும் இராமாயணத்தில் சித்தரிக்கப்பட்ட தீயகதாபாத்திரம் ஆவான்.

ஆட்சோபனை இல்லாவிடில், ஒரு கிழமைக்கு பின்னர் மாற்றிவிடுகிறேன். --Natkeeran 23:15, 26 ஜூலை 2007 (UTC)

ஆட்சேபனை[தொகு]

இந்தியாவை இரண்டாகப் பிரிக்கின்ற விந்திய மலைக்கு தெற்கே வராத, தற்போதைய இலங்கையை ஆட்சி செய்யாத ஒரு மன்னரை இலங்கையை ஆட்சி செய்த அரசனாகவும்,இராமாயணத்தில் சித்தரிக்கப்பட்ட தீயகதாபாத்திரமாக ஏற்க முடியவில்லை.--Yokishivam (பேச்சு) 06:09, 17 மே 2015 (UTC)[பதிலளி]

இராவணன் என்பவர் இலங்கையை ஆட்சி செய்த தமிழ் அரசரும்  ????[தொகு]

இது படு பிழையான தகவல். எந்தவித ஆதாரமும் இல்லை. --Natkeeran (பேச்சு) 13:45, 13 மே 2015 (UTC)[பதிலளி]

திரு நக்கீரன் அவர்களின் கூற்று மிகச்சரியே!! இராமாயணத்தின் ஆசிரியர் வால்மீகி தவிர்த்து ஏனையோர் எழுதிய இராமாயணங்களில் அவர்கள் வாழ்ந்த சமூக கட்டமைப்பு, வர்க்கபேதங்கள், கலாச்சாரங்கள், இவைகளை உட்புகுத்தியுள்ளனர். இதனை தொல்லியல் ஆய்வாளர் கோசாம்பி அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்.--Yokishivam (பேச்சு) 05:57, 17 மே 2015 (UTC)[பதிலளி]

இராவணன் இயற்றிய நூல்கள்[தொகு]

இராவணன் மருத்துவ துறை சம்மந்தமாக இருபத்து ஏழு(27) நூல்களை இயற்றியுள்ளார்.[1]

  1. உடற்கூறு நூல்
  2. மலை வாகடம்
  3. மாதர் மருத்துவம்
  4. இராவணன் – 12000
  5. நாடி, எண்வகை பரிசோதனை நூல்
  6. இராவணன் வைத்திய சிந்தாமணி
  7. இராவணன் மருந்துகள் - 12000
  8. இராவணன் நோய் நிதானம் - 72 000
  9. இராவணன் – கியாழங்கள் – 7000
  10. இராவணன் வாலை வாகடம் – 40000
  11. இராவணன் வர்ம ஆதி நூல்
  12. வர்ம திறவுகோல் நூல்கள்
  13. யாழ்பாணம் – மூலிகை அகராதி
  14. யாழ்பாணன் – பொது அகராதி
  15. பெரிய மாட்டு வாகடம்
  16. நச்சு மருத்துவம்
  17. அகால மரண நூல்
  18. உடல் தொழில் நூல்
  19. தத்துவ விளக்க நூல்
  20. இராவணன் பொது மருத்துவம்
  21. இராவணன் சுகாதார மருத்துவம்
  22. இராவணன் திராவக தீநீர் நூல் – அர்க்க பிரகாசம்
  23. இராவணன் அறுவை மருத்துவம் – 6000
  24. இராவணன் பொருட்பண்பு நூல்
  25. பாண்ட புதையல் முறைகள் – 600
  26. இராவணன் வில்லை வாகடம்
  27. இராவணன் மெழுகு வாகடம்
தொன்மப் கதாபாத்திரம் எப்படி நூல்கள் இயற்ற முடியும். கதையில் கூட அவன் இந்த நூல்களை இயற்றியதாக குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. --Natkeeran (பேச்சு) 17:23, 14 மே 2015 (UTC)[பதிலளி]
உண்மை இராவணன் என்ற ஓர் மருத்துவராக இருக்கலாம், இராமாயண சிற்பி வால்மீகி இராமாயணத்தில் இராவணன் பற்றிய எவ்வித வர்ணனையும் செய்துள்ளதாக படிக்கவில்லை.--Yokishivam (பேச்சு) 06:18, 17 மே 2015 (UTC)[பதிலளி]
  1. http://ta.wikisource.org/s/j1 விக்கி மூலம்- தமிழ் மருத்துவம் – தொ.மு – தொ.பி.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இராவணன்&oldid=3782915" இலிருந்து மீள்விக்கப்பட்டது