பேச்சு:இயேசுவின் இறுதி இராவுணவு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அருமையான கட்டுரை! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:10, 22 பெப்ரவரி 2014 (UTC)

👍 விருப்பம்--aho;- பேச்சு 08:43, 22 பெப்ரவரி 2014 (UTC)

இராவுணவு அல்ல. இரவு + உணவு = இரவுணவு என்றிருக்க வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 16:54, 22 பெப்ரவரி 2014 (UTC)

இராவுணவு என்பது சரியே[தொகு]

பாகிம், நீங்கள் எந்த அகரமுதலியைப் பார்த்தீர்களோ எனக்குத் தெரியாது. ஆனால் "இராவுணவு" சரியல்ல என்று தாங்கள் கூறுவது ஏற்க முடியாதது. தமிழ் இலக்கியத்தில் "இரா" என்பதற்கு இரவு என்று பொருள் உண்டு. சென்னைத் தமிழகராதியில் இரா என்று உள்ளீடு செய்து பாருங்கள். எடுத்துக்காட்டுகள் பல காணலாம்.

மேலும் வான்புகழ் வள்ளுவரின் காமத்துப்பால், கற்பியலில் வருகின்ற ஒரு குறளையும் எடுத்துக்காட்டாகத் தருகிறேன். காண்க: குறள் 1329:

ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப
நீடுக மன்னோ இரா.

மு.வ விளக்கம்: காதலி இன்னும் ஊடுவாளாக, அந்த ஊடலைத் தணிக்கும் பொருட்டு யாம் இரந்து நிற்குமாறு இராக்காலம் இன்னும் நீட்டிப்பதாக.

சாலமன் பாப்பையா விளக்கம்: ஒளிமிகும் அணிகளை அணிந்த இவள் இன்னும் என்னோடு ஊடட்டும், அப்போது அதிக நேரம் இருக்கும்படி நான் வேண்டிக்கொள்ள, இந்த இரவு விடியாது நீளட்டும்.

மேலதிகமாக, எல்லாக் கிறித்தவ சபைகளாலும் ஏற்கப்பட்ட விவிலிய பொது மொழிபெயர்ப்பு (1995) இராவுணவு என்று கூறுவதையும் நினைவூட்டுகிறேன். வணக்கம்!--பவுல்-Paul (பேச்சு) 05:58, 23 பெப்ரவரி 2014 (UTC)