பேச்சு:இந்தியக் கட்டிடக்கலை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியக் கட்டிடக்கலை என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


சொல்[தொகு]

கட்டடம் கட்டிடம் ஆகிய இரு சொற்களும் வேற்பட்ட பொருள்கள் கொண்டதென்று நினைக்கிறேன். கட்டிடம் என்பது கட்டடம் இருக்கும் நிலத்தையும் சூழ்ந்த புறத்தையும், கட்டடம் என்பது கல்லாலும் மரத்தாலும் பிற பொருட்களாலும் எழுப்பபட்ட கட்டமைப்பைக் குறிக்கும். கட்டடம் என்பது கெட்டியான அட்டை முதலிவற்றால், புத்தககங்களின் தாள்கள் பிரிந்துசெல்லாமல், சேர்த்து கோர்த்து பாதுகாப்பு செய்யும் அமைப்புக்கும் பயன்படும். கட்டடம் என்பதே சரியான சொல் என்று நினைக்கிறேன். கனகு, மயூரநாதன் புதிய பயனர் Subbusos ஆகியோர் எண்ணிப்பார்க்க வேண்டுகிறேன்.--செல்வா 13:56, 6 ஏப்ரல் 2007 (UTC)

இவ்வளவு விஷயம் இருக்கா:). பயனர் Subbusos கட்டுரையில் உள்ள கட்டிடங்கள்' எல்லாவற்றையும் கட்டடங்களுக்கு மாற்றியிருந்ந்தார். இதனால் பல உள்ளிணைப்புகள் விடுபட்டுப் போயிருந்தன. அதனாலேயே மீண்டும் அவற்றைக் கட்டிடங்களுக்கு மாற்றியிருந்தேன். மயூரநாதனின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.--Kanags 14:09, 6 ஏப்ரல் 2007 (UTC)

இது தொடர்பான உரையாடல் பேச்சு:கட்டிடக்கலை பக்கத்திலும் சுமார் ஒரு வருடத்துக்கு முன்னர் இடம்பெற்றது. இந்தக் கட்டிடம், கட்டடம் தொடர்பான பிரச்சினை பற்றி முதன் முதலில் நான் தெரிந்து கொண்டது ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு முன். அக்காலத்தில் இலங்கையில் வெளிவந்துகொண்டிருந்த தினபதி என்னும் நாளேட்டில் இது தொடர்பான விவாதம் ஒன்று நடைபெற்றதாக ஞாபகம். ஆனால் அங்கே முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் பற்றி எனக்கு இப்பொழுது நினைவில் இல்லை. நான் பொதுவாகக் கட்டிடம் என்றுதான் எழுதுவது வழக்கம். அண்மையில் இராம.கி அவர்களுடைய "வளவு" BLOG இல் நான் எழுதிய கருத்து ஒன்று தொடர்பில் இராம.கி பின்வருமாறு எழுதியிருந்தார்.

"அன்பிற்குரிய மயூரநாதன், கட்டடம் என்பது தொழிற்பெயர்; கட்டிடம் என்பது இடப்பெயர்; பொருளை மாறிப் பயன்படுத்தக் கூடாது. கட்டிடத்தின் மேல் கட்டடம் நிற்கிறது. அடம் என்பது அடுக்குதல் என்ற வினையில் கிளர்ந்த ஓர் ஈறு. கட்டுதல் என்பது சேர்த்தல்; கட்டி அடுக்குவது கட்டடம். குடில், குடிசை, மாளிகை, கோயில், அரண்மனை என எல்லாமே கட்டி அடுக்குவது தான்."

இது தொடர்பில் வலுவான நிலைப்பாடொன்று இப்போது என்னிடம் இல்லை என்றுதான் கூறவேண்டும். கட்டிடம் என்பது கட்டப்படுவதற்கான இடத்தைக் குறிக்கும் என்பதற்குப் போதிய சான்றுகள் இல்லை. இத்தகைய சொற்பயன்பாட்டை இதுவரை நான் கண்டதில்லை. மதராஸ் பல்கலைக் கழக அகராதியிலும், இவ்விரு சொற்களும் ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்பட்டிருக்கிறனவேயன்றி இரண்டுக்கும் வெவ்வேறு பொருள்கள் இருப்பதாகக் குறிப்பிடப்படவில்லை. அடுக்கிக் கட்டுதல் என்றுதான் சொல்வது வழக்கம். கட்டி அடுக்குதல் என்று சொல்வதில்லை. கட்டி அடுக்குவதிலிருந்துதான் கட்டடம் என்ற சொல் பெறப்படுகின்றதெனில் அது சரியாகப் படவில்லை. Building என்பது ஒரு இடம். வாழ்வதற்கு, வேலை செய்வதற்கு, இளைப்பாறுவதற்கு மற்றும் இன்னோரன்ன தேவைகளுக்குப் பயன்படும் இடம். அத்துடன் இது உருவாக்கப்பட்ட, அதாவது கட்டப்பட்ட இடம் (built place). அதனால் அதைக் கட்டிடம் என்று சொல்வதும் பொருத்தமாகவேபடுகிறது. Mayooranathan 19:29, 6 ஏப்ரல் 2007 (UTC)

இக்கட்டுரை ஒரு நூலில் உள்ளதைக் கொண்டு எழுதப்பட்டுள்ளது இந்த கட்டுரையில் நேரடி பதிப்புரிமை உள்ளது 2001இல் வெளிவந்த முகைதீன் பாதுஷாவின் இந்தியக் கட்டிடக்கலை வரலாறு என்ற,புத்தகத்தை மையமாக கொண்டு எழுதப்பட்டுள்ளது.-- mohamed ijazz(பேச்சு) 04:31, 8 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

கட்டிடமும் கட்டடமும் தொடர்பான பல விளக்கங்களை நானும் பல முறை படித்திருக்கிறேன். ஆயினும் கட்டிடம் என்றால் கட்டப்பட்ட நிலம் என்றும் கட்டடம் என்றால் கட்டப்பட்டது என்றும் பலர் கூறுவதற்கு எந்த அடிப்படையுமில்லை. இவற்றுக்கு வெறுமனே மனம் போன போக்கில் பொருள் கூறப்படுகிறது. இரண்டும் ஒன்று என்பதே எனது கருத்து.--பாஹிம் (பேச்சு) 12:09, 2 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]