பேச்சு:இட ஒதுக்கீடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எனக்கு இலங்கை ஒதுக்கீடு வரலாறு பற்றி அவ்வளவாக தெரியாது. தெரிந்தவர்கள் அதைப் பற்றி எழுதுவீர்.--விஜயராகவன் 17:16, 8 பெப்ரவரி 2007 (UTC)

விஜயராகவன், எனக்கு விளங்காத இடங்களில் (??) என்னும் குறியிட்டுக் காட்டியுள்ளேன். திறமைமய, உத்தரிப்பு என்று நீங்கள் ஆண்ட பல சொற்கள் விளங்கவில்லை. ஹீனமுற்றோர் என்பதை ஊனமுற்றோர் என மாற்றியுள்ளேன். நீங்கள் நல்ல தலைப்புகளைத் தேர்ந்து எடுத்து எழுத முன்வந்துள்ளதை (அடிமை முறை முதலியன), நான் பாராட்டுகிறேன். ஆனால் அருள்கூர்ந்து, கலைக்களஞ்சியத்திற்கு ஏற்ற நடையிலும், செறிவான ஆணித்தரமான குறிப்புகள் இருக்குமாறும் எழுத வேண்டுகிறேன். இட ஒதிக்கீடு பற்றி எழுதும் பொழுது, அது இந்தியாவிலோ, தமிழ்நாட்டிலோ, எப்பொழுது கொண்டுவரப்பட்டது முதலான குறிப்புகள் இருத்தல் நலம். இது ஒரு தொடக்கமே, எனவே நாளாக நாளாக வளர வாய்ப்புள்ளது. --செல்வா 20:20, 8 பெப்ரவரி 2007 (UTC).
செல்வா, meritocratic என்பதை திறமைமயம் என்று கூறியுள்ளேன். meritocratic society என்பதை திறமைமய சமுதாயம் என்று சொல்கிறேன். Discrimination என்பதை உத்தரிப்பு என்று சொல்லியிருக்கிறேன். Discrimination என்பதற்க்கு நேர் தமிழ் சொல் இல்லை அகராதிகளில். அந்த சொல்லிற்க்கு அருகில் வருவது persecution. அதற்க்கு உத்தரித்தல் என்று அகராதியில் பார்த்தேன்.
meritocratic society என்பதை திறமையடிப்படைச் சமுதாயம் அல்லது திறமையடிப்படைக் குமுகம் எனலாம். discrimination என்பதைப் பிரிவினை காட்டுதல், வேற்றுமை, வேற்றுமைப்படுத்தல் முதலியன ஆளலாம். உத்தரிப்பு என்பது தமிழர்களுக்கு ஏதொன்றையும் உணர்த்தாது. அதனை விலக்குமாறு பரிந்துரைக்கிறேன்.--செல்வா 17:31, 9 பெப்ரவரி 2007 (UTC)

அடுத்த வார்த்தை சமர்த்திப்பு. சமர்த்தனம் என்றால் Justification அகராதிப்படி. http://dsal.uchicago.edu/cgi-bin/romadict.pl?query=justification&display=utf8&table=tamil-lex அதை சமர்த்திப்பு என்று சுருக்கியுள்ளேன். அது தவறென்ரால் 'சமர்த்தனம்' என்று மாற்றலாம்.

Justification என்று எதனை நீங்கள் குறிப்பிடுகிறீர்கள் என விளங்கவில்லை. ஆனால் இணக்கம், நல்லிணக்கம், மீள் இணக்கம் (மீளிணக்கம்) முதலியவற்றைக் குறிப்பிட முடியும்.--செல்வா 17:31, 9 பெப்ரவரி 2007 (UTC)

இந்த கட்டுரை இட ஒதுக்கீடு பற்றி பொதுவாக பேசுகிறது. அமெரிக்கா, இந்தியா, மலேசியா போன்ற நாடுகளீல் நடப்பது உள்ளக இணைப்பு கொண்ட தனி கட்டுரைகள்.அதை எழுத வேண்டும்.--விஜயராகவன் 01:27, 9 பெப்ரவரி 2007 (UTC)

Justification என்பது 'end justifies means' என்ற பொருளில் வருவது. இப்பொழுது அவ்வளவாக பயன் ஆகவில்லையென்றாலும், செ.ப.அ. வில் அதற்கு சரியாகவே பதம் உள்ளது - அதாவது சமர்த்தனம். மேல் உதாரணத்தில் 'இணக்கம்' பொருந்தாது. அகராதிபடி

இணக்கம் (p. 0289) [ iṇakkam ] n iṇakkam . < இணங்கு-. [M. iṇakkam.] 1. Fitting well together, as two planks; இசைப்பு. 2. Fitness, suitability; பொருத்தம். 3. Friendship, congeniality, com patibility; சிநேகம். நல்லிணக்க மல்ல தல்லற் படுத் தும் (கொன்றைவே.) 4. Agreement, acquiescence; சம்மதம். 5. Exactness; திருத்தம். இதனை யிணக்க மாய்ச்செய். (J.)--விஜயராகவன் 22:32, 9 பெப்ரவரி 2007 (UTC).

திறமைமயம் பற்றி; செல்வா நீங்கள் அது தமிழர்களுக்கு புரியாது என்கிறீர்கள். அப்படிப் பார்த்தால் 'உலகமயம்' என்ற சொல்லும் புதிது; இப்பொழுது சாதாரண படிப்பாளிகளுக்கு புரியும். 'மயம்' என்ற சேர்க்கை எல்லொருக்கும் புரியும் - அது பல புது வார்த்தைகளை பெற பெயற்சொற்களுக்கு பின்கூட்டப் படுகிறது. உத்தரிப்பு பற்றி இன்னும் கொஞ்சம் யோசிக்கிறேன். தமிழ் கூகிளில் தேடினால் சில் பக்கங்களிருக்க்கிறன.--விஜயராகவன் 22:59, 9 பெப்ரவரி 2007 (UTC)

தகவல் பிழைகள் !![தொகு]

  • இலங்கை: பெரும்பான்மை சிங்களத்தவரும் தங்களுக்கு சாதகமாக இட ஒதுக்கீடு செய்துள்ளனர்.

ஒரு காலகட்டத்தில் இது மிகவும் உண்மை. இப்பொழுது இது தமிழ் மாணவர்களுக்கும் சாதகமாக அமைவதுண்டு!!!--Natkeeran 20:33, 8 பெப்ரவரி 2007 (UTC)

நட்கீரன், இலங்கை நிலவரம் தவறென்ரால், அதை திறுத்தி, தற்கால நிலை பற்றி உள்ளக இணைப்பு கொடுத்து தனி கட்டுரை எழுதி விடுங்கள். அல்லது இலங்கை பத்தியை எடுத்து விடலாம்.--விஜயராகவன் 01:27, 9 பெப்ரவரி 2007 (UTC)
இலங்கையில் மொழிவாரி அல்லது பிரதேசவாரியான இட ஒதுக்கீடே இருந்து வருகின்றது.ஆரம்பத்தில் சிங்களவருக்கு சாதகமானபொதினும் பின்னர் பிந்தங்கிய மலையக இந்தியவம்சாவளியினர்,முசுலீம்கள் பல்கழைக்கழக அனுமதிபெறவும் வாழ்க்கைத்தரம் உயரவும் காரணமாய் இருந்தது உண்மையே,இதனால் இக்கூற்று செம்மையாக்கப்படச்வேண்டும்மென விரும்புகின்றேன்--கலாநிதி 16:51, 9 பெப்ரவரி 2007 (UTC)
கலாநிதி, நீங்கள் சொல்வதில் ஓரளவு உண்மையிருந்தாலும் இலங்கையில் அநேகமாக நான் அவதானித்தது என்னவென்றால் இலங்கையில் பல்கலைக் கழகம் கிடைக்கும் வரை பின்தங்கிய மாவட்டம் என்று கூறுக்கொண்டு பல்கலைக் கழகம் செல்வதும் பின்னர் பட்டம் பெற்றதும் வெளிநாட்டிற்கோ அல்லது கொழும்பிலோ பணியாற்றுவதே. இதை முக்கியமாக மருத்துவத்துறையில் (Medicine) தெளிவாகக் காணலாம். இன்றும் வடக்குக் கிழக்கில் பல மருத்துவர்கள் பற்றாக்குறையாகவே இருக்கின்றனர் மலையகத்திலும் அவ்வாறே இருக்கும் என்றே நினைக்கின்றேன். மேலைத்தேய நாடுகளில் செய்வது போன்று ஒருவருட தொழில் பயிற்சிக்குப் பின்னரே பட்டம் வழங்கினால் நல்லது. அவர்கள் எந்த மாவட்டத்தில் இருந்து வந்தார்களோ அந்த மாவட்டத்தில் ஒரு வருட தொழில் பயிற்சி வழங்கினால் ஆகக்குறைந்தது ஒருவருடமாவது அவர்களின் பணி கிடைக்கும். எனக்கும் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக அனுமதி கிடைத்தது ஆயினும் எனது சித்தப்பாவின் மகன் (யாழ்பல்கலைக் கழக மாணவன்) யாழ்ப்பாணத்தில் அசம்பாவிதம் காரணமாக அகால மரணம் அடைந்தால் வீட்டில் சம்மதிக்கவில்லை. குரும்பசிட்டியில் இருந்த அம்மாவின் வீடு் Bull Dozer மூலமாக 1986 இல் மேற்கொள்ளபட்ட ஆப்ரேஷன் லிபரேஷன் நடவடிக்கையில் வேண்டும் என்றே அப்பாவிப் பொதுமக்களின் வீடுகள் இடித்து அழிக்கப்பட்டது. 2000 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நான் தங்கியிருந்த அப்பாவின் அரியாலை வீடும் சேதங்களுக்கு உள்ளானது. ஏற்கனவே நிலமை பாதகமாக இருந்ததால் பெங்களூரில் மேற்படிப்பை மேற்கொண்டேன். இப்போது நாடோடிகள் மாதிரி ஒவ்வொரு மாவட்டமாக வேலையில் இருக்கின்றேன்.--Umapathy 00:40, 10 பெப்ரவரி 2007 (UTC)

சொற்களை ஆளும் முறை[தொகு]

விஜயராகவன், பொதுவாக ஒன்று சொல்ல விரும்புகிறேன். நேரடியாக அகராதியில் இருந்து புழக்கத்தில் இல்லாத தமிழா என்று உறுதிப்படுத்திக்கொள்ள இயலாத சொற்களை ஆள்வதை விடுத்து இது குறித்து ஏற்கனவே தமிழில் எழுதப்பட்ட கட்டுரைகள், நூல்கள் உங்களிடம் இருந்தால் அதில் இருந்து சொற்களை எடுத்தாளுங்கள். குறைந்தபட்சம், புதிய சொற்கள் அருகில் ஆங்கிலத்தில் அடைப்புக்குறி விளக்கம் தாருங்கள். --Ravidreams 17:54, 9 பெப்ரவரி 2007 (UTC).

ரவி, நான் எந்த பொருளுக்கும் எல்லொருக்கும் புழக்கத்திலிருந்த சொல்லை உபயோகிப்பேன்; ஆனால் , அதே சமயம் என் கருத்து வெளியேட்டை எவ்வளவு துல்லியமாக சொல்லமுடியுமோ, அந்த துல்லியத்திற்க்க்குறிய சொல்லை பரவலான புழக்கத்தில் இல்லாவிட்டாலும் எழுதித்தான் ஆகவேண்டும். பரவலான புழக்கம் என்னும் பீடத்தில் துல்லியத்தை பலி கொடுக்கமுடியாது. அதற்க்குதான் செ.ப.அ. இருக்கிறது. ஒன்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். தற்காலத்திய பொது ஜன தமிழ் மீடியா தரமானது அல்ல. அதனால் அது நல்ல புது சொற்க்களை உற்பத்தி செய்வதில்லை. உங்கள் கருத்து அதாவது புது சொற்க்களுக்ககொரு ஆங்கில விளக்கம் வேண்டும் என்பது சரியே ; அதோடு ஏன் அந்த சொல் சரி என்றும் சமர்த்தனம் செய்யவேண்டும்.--விஜயராகவன் 23:17, 9 பெப்ரவரி 2007 (UTC)

பொது ஊடகங்களில் நல்ல துல்லியமான சொற்கள் பெரிதும் காணக் கிடைப்பதில்லை என்று ஒத்துக் கொள்கிறேன். ஆனால், அதே நேரம் நீங்கள் பயன்படுத்தக்கூடிய பழைய அகராதிகள் மணிப்பிரவாள நடை அதிகம் இருந்த காலத்தில் எழுதப்பட்டதாக இருக்கலாம். ஒரு சொல் தமிழா என்று தெரியாமல் துல்லியம் கருதி அகராதியில் இருந்து எடுத்தாண்டால், புழக்கத்தில் இல்லாத மணிப்பிரவாள நடை சொற்களை திரும்பக் கொண்டு வருவதில் போய் முடியலாம். எடுத்துக்காட்டுக்கு, சமர்த்தனம் என்றால் என்ன? நீங்கள் புகுத்தும் பல சொற்கள் பல மணிப்பிரவாள நடை சொற்களோ என்று எனக்கு ஐயப்பாடும் அச்சமும் உண்டு. --Ravidreams 06:54, 10 பெப்ரவரி 2007 (UTC)

சொற்தெரிவில் விக்கிப்பீடியர்கள் அவதானமாக இருக்க வேண்டும். பயன்படுத்துபவர்களுக்கு விளங்க வேண்டும் என்பது எவ்வளவுக்கு முக்கியமோ அதேயளவு முக்கியம் புழக்கத்திலில்லாவிட்டாலும் பொருத்தமானவையான சொற்களைப் பயன்படுத்துதல். அவ்வகையில் விஜய் புதிய சொற்களை அறிமுகம் செய்வது வரவேற்கத் தக்கதே. ஆனால் அறிமுகமாகும் சொற்கள் தூயதமிழ்ச் சொற்களாக இருக்க வேண்டும் என்பதும் முக்கியமானதே. நாமெல்லோரும் இதில் கவனம் செலுத்திப் பொருத்தமான மாற்றங்களைச் செய்துவந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி. --கோபி 07:40, 10 பெப்ரவரி 2007 (UTC).
ஒரு சொல்லின் தேர்வையின் முதல் அளவுகோல், துல்லியமும், நுணுக்கமும். இதற்கு அகராதிகள் முக்கியம். செ.ப.பே அல்லது கிரியா தற்கால அகராதி, பால்ஸ் அகராதி போன்றவை முக்கியம். அடுத்த அளவுகோல் பரவலான புழக்கத்தில் இருப்பது. இது பொதுவாக டெலிவிஷன், செய்திதாள்கள், ரேடியோ, இலக்கியம், இலக்கிய மேடைகள், அரசியல் சொற்பொழிவுகள், சினிமா, நாடகங்கள் இவற்றில் பயன்படுத்துவது. இதற்க்கு தமிழ் கூகிளும், இணைத்தளங்களும் ரொம்ப உபயோகம். இதற்கு மேல் "தூயதமிழா இல்லையா" என்பது தீர்ப்பது கஷ்டம். நாம் 2000 வருட தமிழிலக்கியங்களையும், தமிழர்களுக்கு நன்றாக புரியும் சொற்களையும் எந்த காரணம் கொண்டும் ஒதுக்கக் கூடாது. நாம் சொல்ல நினைப்பது தற்கால தமிழில் இல்லையென்றால், செ.ப.பே. பார்த்து பழம் தமிழிலகியத்திலிருந்து பிடிக்க வேண்டும். நமக்கு வேண்டிய சொல், தொல்காபியத்தில் இருந்தாலும், கம்ப ராமாயணத்தில் இருந்தாலும் பிங்கள நிகண்டுவில் இருந்தாலும், மதுரைத்திட்ட அல்லது நூலக திட்ட நூல்களில் இருந்தால் அது உரைநடைக்கு சரியான தமிழ் சொல் என்றுதான் ஏற்க்க வேண்டும். தமிழின் பலமே பல சொற்கள் ஒரே பொருள் போல இருந்தாலும், ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு வித சாயல் - nuance - உண்டு. எந்த காரணத்தைக் கொண்டும் நடப்பு தமிழின் பலத்தை தூக்கி எரியக் கூடாது. உதாரணமாக கோபி 'அவதானம்' என்ற சொல்லை பயபடுத்துகிறார். இச்சொல் தினத்தந்தி அல்லது தினமணி வாசகனுக்கு நிச்சயமாக புரியாது. நான் வளர்ந்த சென்னையில் அது பயன்படுத்தப் படவில்லை. ஆனாலும் இப்படி புது சொல்லை (பல தமிழர்களுக்கு பொருத்தவரை) நான் வரவேற்கிரேன். 'அவதானம்' சமஸ்கிருதத்திலிருந்து வருவது என்றெல்லாம் நான் கவலைப் படுவதில்லை. கடந்த 10 வருடங்களாக 'தலித்' என்ற சொல், தமிழில் அடிபடுகிரது. அது மராட்டிய மொழியிலிருந்து, பார்க்கப் போனால் சமக்கிருதத்திலிருந்து வருகிறது. அச்சொல்லை இப்பொழுது யார் ஒதுக்க முடியும் விக்கியில்?--விஜயராகவன் 11:12, 13 பெப்ரவரி 2007 (UTC)

தெளிவின்மை[தொகு]

கடைசியாக, ஒருவரின் திறமைதான் அவர் தொழில்/கல்வி வெற்றிகளுக்கு அடிப்படையாக இருந்து திறமைமய ??) சமூகவாத்தின் பலமாக இருப்பதால், இட ஒதுக்கீடு அத்தகைய திறமைமய(??) சமூகத்தின் எதிரியாக தென்படுகிற்து என்று எதிர்ப்பாளர்கள் நினைக்கிறனர். --Natkeeran 15:22, 12 ஜூலை 2008 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இட_ஒதுக்கீடு&oldid=262371" இலிருந்து மீள்விக்கப்பட்டது