பேச்சு:இடையமெரிக்கப் பண்பாட்டுப் பகுதி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நடு அமெரிக்கா என்ற தலைப்பில் வேறொரு கட்டுரை உள்ளது. Meso என்பதற்கு இடை அல்லது இடைநிலை என விக்சனரி சொல் தருகிறது. அல்லது நடு அமெரிக்காவை மத்திய அமெரிக்கா என மாற்ற வேண்டும்.--

இடை அமெரிக்கா அல்லது மொழிபெயர்க்காமல் “மெசோ அமெரிக்கா” என்றே சொல்லலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 04:19, 23 சூலை 2011 (UTC)[பதிலளி]

சிக்கல் தான். மற்றப் பயனர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம். Meso என்பது Middle எனப் பொருள் தரும் கிரேக்கச் சொல் என்று கட்டுரையில் உள்ளது. Middle என்பதற்கு "நடு" பொருந்தும், Central America என்பதற்கு "மைய அமெரிக்கா" என்பது பொருந்துமோ? Mesoamerica என்பதை சோடாபாட்டில் கூறுவதுபோல் "இடை அமெரிக்கா'" அல்லது "இடையமெரிக்கா" என்றும் சொல்லலாம். -- மயூரநாதன் 13:17, 23 சூலை 2011 (UTC)[பதிலளி]

இடை அமெரிக்கா என்பது எனக்கும் ஏற்புடையதே. (உடலின் இடைப்பகுதி போன்று)--சிவக்குமார் \பேச்சு 17:40, 23 சூலை 2011 (UTC)[பதிலளி]

நடு அமெரிக்கா என்பதும் இதுவே. நடு அமெரிக்கா என்பது அங்குள்ள நாடுகளைக் குறிக்கும் நிலப்பகுதிப்பெயர். ஆனால் இங்கு கலை, கட்டிடக்கலை, பண்பாடு முதலியன வலியுறுத்தப்பெறுகின்றன. மேசோ என்பது நடு என்பதே. நடுவமெரிக்கப் பண்பாடு என்று வேண்டுமானால் பெயர் மாற்றாலாம். --செல்வா 19:53, 23 சூலை 2011 (UTC)[பதிலளி]

Mesoamerica, Central America என்னும் இரண்டு சொற்களும் குறிக்கும் நிலப்பரப்பிலும் சிறிய வேறுபாடு உள்ளது. மெசோ அமெரிக்கப் பண்பாட்டுப் பகுதி, இன்றைய நாடுகளின் அடிப்படையிலான நடு அமெரிக்காவுடன் அச்சொட்டாகப் பொருந்தாது என்பதனால், மெசோ அமெரிக்கா என்பதற்குத் தனியான பெயர் தேவை என்று கருதியதனாலும், செல்வா சுட்டிக்காட்டியது போல் கட்டுரை, அப்பகுதியில் நிலவிய பண்பாட்டு அம்சங்களுக்கு முதன்மை கொடுப்பதனாலும், கட்டுரையின் பெயரை 'இடையமெரிக்ககப் பண்பாட்டுப் பகுதி என மாற்றியுள்ளேன். -- மயூரநாதன் 08:35, 29 சூலை 2011 (UTC)[பதிலளி]