பேச்சு:இசுலாமியச் சட்ட முறைமை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது மிகவும் முக்கியமான ஒரு கட்டுரை. இதனை தக்க முறையில் சிறப்பாகவும் நடுநிலையோடும் எழுதுமாறு வேண்டிக்கொள்கின்றேன். இப்பொழுது இருக்கும் நிலை கலைக்களஞ்சியத்துக்கு ஏற்றவாறானதாக இல்லை. முதல் வரியில் இசுலாமியச் சட்ட முறை என்பது என்ன, எதன் அடிப்படையில் வரையறை செய்யப்படுகின்றது என்று சுருக்கமாக கூறுதல் வேண்டும். பரப்புரை போல அல்லாஹ் கூறினார் என்பது போல தொடங்குதல் சரியல்ல என்பது என் கருத்து. இந்த முக்கியமான கட்டுரையை நல்ல தமிழ் நடையில், யாரும் படித்து என்ன ஏது என்று தெரிந்துகொள்ளுமாறு. நடுநிலையாளர் நோக்கில் நின்று எழுதித்தருமாறு கேட்டுக்கொள்கிறேன். --செல்வா 20:14, 27 ஏப்ரல் 2010 (UTC)

ஆங்கில விக்கியில், "Sharia (Arabic: '‎شريعة Šarīʿa; [ʃɑˈriːɑ], "way" or "path") refers to the "way" Muslims should live or the "path" they must follow. Sharia is derived from the sacred text of Islam (the Qur'an), and Traditions (Hadith) gathered from the life of the Islamic Prophet, Muhammad. " என்று எழுதப்பட்டுள்ளது. சரியா (Arabic: '‎شريعة Šarīʿa; [ʃɑˈriːɑ]) என்பதனையும், இது இசுலாமியரின் வாழ்முறை அல்லது இசுலாமிய வழக்கம் அல்லது சட்டப்படியான வாழ்முறை எனத் தெளிவாக எழுதுவது நல்லது. இப்பொழுது கட்டுரையில் இருக்கும் தொடக்கம் சரியாக அமையவில்லை என்பது என் கருத்து. மேலும் இக்கட்டுரையின் நடையும் கருத்துப் போக்கும் சீராக அமையவில்லை. போதிய மாற்றம் இல்லாமல் அறிவிப்புப் பட்டியை நீக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கின்றேன். --செல்வா 00:15, 29 ஏப்ரல் 2010 (UTC)

சில பகுதிகள் நீக்கம்[தொகு]

முதல் சில பத்திகளில் இருந்த சில பகுதிகளை நீக்கியுள்ளேன். அவை பரப்புரை போல் இருந்ததாலும், கட்டுரையின் தலைப்புக்கு நெருங்கிய தொடர்பு இல்லாமல் இருந்ததாகத் தோன்றியதாலும் நீக்கியுள்ளேன். கட்டுரையில் அவை இருக்க வேண்டும் என்பதற்கு வலுவான காரணங்கள் இருந்தால் தெரிவிக்கவும். --செல்வா 00:39, 29 ஏப்ரல் 2010 (UTC)

வரலாற்றுத் தீர்ப்புகள்[தொகு]

ஒரு முஸ்லிம் இங்கிலாந்து சென்று ஆங்கிலேயே பெண்ணை கிறிஸ்துவச் சட்டப்படி மணந்து கொண்டார். சில ஆண்டுகளுக்குப் பின் கணவனை, மனைவி கைவிட்டுச் சென்று விட்டாள். இந்தியா திரும்பிய முஸ்லிம், மனைவி தம்முடன் வாழ்க்கை நடத்த வேண்டும் என் ஆணையிடக் கோரி வழக்குத் தொடர்ந்தரார். அவர் விரும்பியபடி தீர்ப்பும் கிடைத்தது. இங்கிலாந்தில் உள்ள மனைவிக்கு அதைத் தெரிவிக்கவும் செய்தார். பதில் இல்லை. அதனால் இஸ்லாமியச் சட்டப்படி தன்னிச்சையாக விவாகரத்து செய்து விட்டதாக அவளுக்கு தெரிவித்தார்.

மீண்டும் இங்கிலாந்து சென்று வேறொரு ஆங்கிலேயப் பெண்ணை மணந்து திருமணச் சான்றிதழுக்கு மனுச் செய்தார். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சான்றிதழ் வழங்க மறுத்துவிட்டார்கள். முதல் திருமணம் இங்கிலாந்து சட்டப்படி நடந்ததால், வழக்கு மன்றம் மூலம் விவாகரத்துப் பெறாமல், தன்னிச்சையாக திருமண முறிவு செய்தது செல்லாது. அதனால் திருமணச் சான்றிதழ் வழங்க மறுத்தது சரியானதே எனத் தீர்ப்பு வழங்கினர்.

ஆதாரம் இல்லாமல் இருந்ததாலும் சம்பவம் போன்றதாலும் அதனை இங்கே ஓட்டியிருக்கிறேன். மாஹிர் 02:52, 29 ஏப்ரல் 2010 (UTC)

பதிப்புரிமை[தொகு]

பல பகுதிகள் இங்கிருந்து எடுக்கபப்ட்டுள்ளது--சண்முகம்ப7 (பேச்சு) 12:43, 9 சூன் 2012 (UTC)[பதிலளி]