பேச்சு:இக்சிதிகர்பர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இக்சிதிகர்பர் பௌத்த மதம் தொடர்பான கருத்துகளை கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் பௌத்தம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


கட்டுரையைத் தமிழில் பெயரிடுக[தொகு]

இந்தக் கட்டுரைத் தலைப்பில் உள்ள கிரந்த (?) எழுத்து தமிழில் இல்லாதது மட்டுமல்ல ஈழத்து இளந் தலைமுறையினருக்கு அறிமுகமாகாதது. இதனை எவ்வாறு வாசிப்பதென்பதே எனக்குத் தெரியாது இதனை மாற்றி அனைவரும் வாசிக்கக் கூடிய தலைப்பாக்கப் பரிந்துரைக்கிறேன். கோபி 01:24, 28 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]


யூனிகோடில் க்+ஷ் --> க்ஷ் என தானாக மாறினால் என்ன செய்வது? என் தேர்வு நிறைவாகும் வரை தயவு செய்து பொறுக்கவும். பிறகு ஒரு பொருத்தமான தலைப்பை மாற்றுகிறேன். வினோத் 03:50, 28 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]

க்சிதி புத்தர் எனலாம்,. மெய்யெழுத்தில் தொடங்க வேண்டாம் எனில் சிதி புத்தர் எனலாம். அல்லது நிலப் புத்தர் என்றே சொல்லலாம். சீன, சப்பானிய மொழிகளில் அவர்தம் மொழிகளில் பெயர்த்து எழுதும் பொழுது தமிழில் மட்டும் ஏன் மொழி பெயர்த்து எழுதலாகாது? பொருத்தமாக மொழிபெயர்த்து எழுதுவதால் பொருளும் புரியும், இயல்பாக ஏற்றுக்கொள்ளவும் வழி வகுக்கும். --செல்வா 05:35, 28 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]

வினோத், உங்கள் மேல் குற்றம் சொல்லவில்லை. இது ஒருங்குறி வழு என்று தெளிவாகவே குறிப்பிட்டுள்ளேன். இது நாள் வரை இந்தத் தலைப்பு எதைக் குறித்து என்றே பார்க்கத் தோன்றாத அளவுக்கு தலைப்பு அந்நியமாகத் தோன்றியது. அதையே, நிலப் புத்தர் என்று செல்வா தெளிவுபடுத்திய போது, ஒரு ஆர்வத்துடன் கட்டுரைகள் புகுந்து பார்க்கத் தோன்றியது. பௌத்தம் அதிகம் பின்பற்றப்படும் சீன, சப்பானிய நாடுகளில் மொழிபெயர்த்தே பயன்படுத்தும் போது நாம் ஏன் அதைச் செய்யக்கூடாது? இடுகுறிப் பெயர்ச்சொற்களை மொழிபெயர்ப்பது பொது நியதியில்லை என்பதை ஒத்துக் கொள்வேன். எனினும், மக்களுக்கு நெருங்கிய தொடர்பு உண்டாக்கும் பொருட்டு காரணப் பெயர்களை மொழிபெயர்த்தல் தவறில்லை என்று நினைக்கிறேன். கிறித்தவத்தில் அருளப்பர், சின்னப்பர் என்று புனிதர்கள் பெயர்களை மொழிபெயர்ப்பதைக் கவனிக்கலாம். இல்லை, மூலப்பெயர் தான் வேண்டுமானால் இட்சிதிகர்ப்பர் என்று எழுதலாம். க்சிதிகர்ப்பர் என்று எழுதுவதும் உச்சரிக்க அவ்வளவு எளிதல்ல. தமிழில் மீனாட்சி, தட்சிணாமூர்த்தி என்று எழுதுவது வட மொழியில் மீனாக்ஷி, தக்ஷிணாமூர்த்தி என்று எழுதப்படுவதைக் கவனிக்கலாம். நீங்கள் உடனடித் திருத்தங்கள் செய்ய அவசரமில்லை. தேர்வுகள் முடிந்து வாருங்கள். நாங்கள் எங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து வைக்கிறோம். --ரவி 12:05, 28 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]

இக்சிதிகர்பர் என்று கூறலாம். இவருடைய மந்திரவித்தாகக் கருதுவதில் ககரம் வலியுறுத்தப்படுகின்றது. எனவே இக்சிதிகர்பர் என்பது பொருத்தமாக இருக்கலாம். நிப்பானிய மொழியில் இவருடைய மந்திரத்தை On kakaka bisanmaei sowaka (Japanese) என எழுதுகின்றனர். இது சமசுகிருத மொழி மூலமாகிய Om ha-ha-ha vismaye svaha (Sanskrit) என்பதின் (நிப்பானிய மொழி இயல்புவழியான) ஒலிபெயர்ப்பு..இங்கே ககர அடிப்படையிலான வித்து மந்திரத்தின் குறியுருவைக் கொடுத்துள்ளார்கள். --செல்வா 14:47, 28 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]

க்ஷி - ஷியாக மாற்றப்பட்டது வினோத் 16:28, 29 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இக்சிதிகர்பர்&oldid=1597579" இலிருந்து மீள்விக்கப்பட்டது