பேச்சு:ஆல்பிரட் நோபிள் பரிசு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Noble நோபிள் என்றவாறு உச்சரிக்கப்பட வேண்டும்.--Kanags \உரையாடுக 13:50, 16 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

ஆம், இக்கட்டுரையின் தலைப்பு ஆல்ஃபிரட் நோபிள் என்று இருக்க வேண்டும். கூகிள், கேபிள், டேபிள், ஆப்பிள், என்பது போல இதன் பெயர்ப்பு தமிழில் நோபிள் என்பதாகும். நோபல் (NoBEL) வேறு. --செல்வா 19:06, 16 அக்டோபர் 2010 (UTC) (ஆப்பிள் சேர்ப்பு --செல்வா 21:42, 16 அக்டோபர் 2010 (UTC) )[பதிலளி]
மாற்றி விடலாம் சிறீதரன், செல்வா.--அராபத்* عرفات 19:55, 16 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
நன்றி அராபத்; கட்டுரை உருவாக்கிய பயனர் கருத்துக்காக ஒரு நாள் பொறுப்போமா?.--செல்வா 21:42, 16 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

நண்பர்களே, NoBEL Prize (The Royal Swedish Academy of Sciences) பலரால் இப்போது 'நோபெல்' என வழங்கப்படுகிறது, பொதுவான ஒலிப்பின் அடிப்படையில் அதுவே பொருத்தமானது, என்று நான் முன்வைத்த கருத்தை புறந்தள்ள NoBLE என்பதை 'நோபிள்' என எழுதவும் உச்சரிக்கவும் வேண்டும் - அதனால் குழப்பம் வர வாய்ப்பில்லை என்கிறீர்கள். உங்கள் அனைவரின் கருத்துக்கும் மதிப்பளித்து NoBLE = நோபிள் என்பதை நான் ஏற்றுக்கொண்டாலும், NoBEL = நோபெல், என்னும் பயன்பாடு வந்துவிட்டது, அதுதான் இனி நிலைபெறும் என்னும் என் கருத்தை வலியுறுத்தி - என் கடமையைச் செய்துவிட்ட மனநிறைவோடு விடைபெறுகிறேன். இந்த விவாதத்திற்குக் காலம் பதில் சொல்லட்டும். வணக்கம். --Nalluraj 04:26, 17 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

ஆம் காலம் விடை சொல்லட்டும். நோபெல் என்பதை யாரும் தவறு என்று சொல்லவில்லை. பல பகுதி ஆங்கிலேயர்களின் ஒலிப்பு நொபேல் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டுகிறேன் (சிறீதரன் கனகு இதனைக் குறிப்பிட்டிருந்தார்). அதாவது, "சரியான" ஒலிப்பு என்று ஏதும் இல்லை. ஒவ்வொரு மொழியாளரும் அவரவர் மொழியில் உகந்தவாறு ஏற்றுக்கொள்வர். சில சொற்கள் இரண்டு விதமாகக்கூட இருக்ககூடும். சீர்மை கருதியும், பெருவழக்கு கருதியும் நோபல் என்றே இருக்கட்டும் என்று கூறினேன் (மற்றவர்களும் கூறினார்கள்). உங்கள் கருத்துக்கு நன்றி.--செல்வா 14:42, 18 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

மகிழ்ச்சி. ஆனால், எனக்கு இங்கு ஒலிப்பு 'நோபெல்' என்றுதான் தோன்றுகிறது.நீங்களும் கேட்டுப் பாருங்கள் - http://www.merriam-webster.com/dictionary/nobel+prize.

நொபேல் - சாமானியர்கள் இதைப் பெரும்பாலும் நொ-Bale என்றுதான் உச்சரிப்பார்கள்.

'நோபெல்' என்று இருக்கட்டும் என்பதில் ஐயா சி. ஜெயபாரதன் அவர்களும் என் கட்சிதான் என்ற திருப்தியுடனும் http://jayabarathan.wordpress.com/2010/03/06/lise-meitner/ நட்புடனும் விடைபெறும் :) --Nalluraj 00:25, 19 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

கலந்துரையாடலில் பங்குபெற்ற பெரும்பாலோரின் கருத்துக்கிணங்க இக்கட்டுரையின் தலைப்பைத் தாராளமாக ஆல்ஃபிரட் நோபிள் என்று மாற்றிக் கொள்ளுங்கள். எனக்கு அதைச் செய்யத் தெரியவில்லை. நன்றி!--Nalluraj 03:22, 20 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

தலைப்பைப் பற்றி - Alfred = ஆல்ஃபிரட் அல்லது ஆல்ஃப்ரெட் என்று எழுதுவதுதானே வழக்கம் - அதாவது F ஒலியைக் குறிக்க 'ஃப்' பயன்படுத்துவதைக் குறிப்பிடுகிறேன். --Nalluraj 15:17, 20 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]