பேச்சு:ஆய்லரின் வாய்ப்பாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆய்லரின் வாய்ப்பாடு எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

இக்கட்டுரையில் "போலார்", "போலார் ஆயதொலைவு" என்றெல்லாம் பயன்படுத்தப்படுகின்றதே, இதனை வாள்முனை ஆள்கூற்று என்று முன்னர் பயன்படுத்தியுள்ளோமே. இது மாறிவிட்டதா? போல் என்னும் தமிழ்ச்சொல்லுடன் முரண்படுகின்றதே இச்சொல். கோல்முனை ஆள்கூற்று என்றும்கூடச் சொல்லலாமே. பள்ளிகளில் என்ன சொல்லைப் பயன்படுத்துகின்றார்கள்? பள்ளிகளில் பயன்படுத்தும் சொற்கள் மிகப்பலநேரங்களிலும் சரியானதாக இல்லாததாக உணர்ந்தாலும், அதற்கான தீர்வுகளை வேறுவழியில்தான் காணவேண்டும்!! போலார் என்னும் சொல்லுக்கு மாறாக ஏதேனும் தமிழில் பொருள் புரியுமாறு ஒரு சொல் இருப்பது நல்லது.--செல்வா (பேச்சு) 13:52, 5 ஏப்ரல் 2014 (UTC)

தமிழ்நாட்டு மேல்நிலை வகுப்பு (11, 12) பாடநூல்களில் ’போலார் ஆயதொலைவு’ என்றுதான் பயன்படுத்தப்படுகிறது. நான் தொகுக்கும் கட்டுரைகளில் ’போலார் ஆயதொலைவு’ என்பதற்கு ’வாள்முனை ஆள்கூற்று’ என்ற கட்டுரையைத்தான் உள்ளிணைப்பாகத் தருகிறேன். பயன்படுத்திப் பழக்கமில்லாததால் என்னால் ’வாள்முனை ஆள்கூற்று’ என்ற சொல்லைக் கையாள முடியவில்லை. சரியான தமிழாக்கத்தைப் பயனர்கள் பரிந்துரைக்கும் பட்சத்தில் அதனைப் பயன்படுத்த முயற்சிக்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 14:20, 5 ஏப்ரல் 2014 (UTC)

நன்றி. "போலார்" முறை என்பது ஒரு வகையில் கோல்முனை அல்லது வாள்முனை சுழலும் முறைதான். தமிழக, இலங்கை, மலேசிய சிங்கப்பூர் அரசுகளும், தமிழ்ப்புல அறிஞர்களும் ஒன்றுபடாமல், இப்படியான அடிப்படையான கலைச்சொற்களில் கூட சீர்மை காணாமல் இருப்பது வருத்தம் அளிக்கின்றது. உங்கள் கட்டுரை அருமையாக உள்ளது Booradleyp! --செல்வா (பேச்சு) 14:51, 5 ஏப்ரல் 2014 (UTC)

👍 விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 15:23, 5 ஏப்ரல் 2014 (UTC)