பேச்சு:ஆஃபினியம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இதனை ஆஃப்னியம் எனத் தலைப்பிடுவது மூலச் சொல்லுக்குக் கிட்டவாக இருக்கும்.--Kanags \உரையாடுக 06:39, 13 பெப்ரவரி 2012 (UTC)

ஆம். இப்படித்தான் நான் இந்த வார்ப்புருவில் இட்டுள்ளேன். எனவே, இதனைத் தலைப்பு மாற்றுவதே சிறப்பு. -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 17:54, 14 பெப்ரவரி 2012 (UTC)

──────────────────────────────────────────────────────────────────────────────────────────────────── இல்லை. ஆராயாமல் இக்கருத்தைப் போட்டுவிட்டேன். ஏற்கனவே, ஆஃப்னியம் என்ற வழிமாற்று உள்ளது. அதனை முதன்மைத் தலைப்பாக வைத்துவிட்டு இந்த ஒலிப்பு முறைச் சொல்லை வழிமாற்றாக வைக்கிறேன். -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 18:02, 14 பெப்ரவரி 2012 (UTC)

உரையாடல் நடந்துகொண்டிருக்கும்பொழுதே சூர்யா மாற்றிவிட்டார்! நான் பேச்சு:ஃகாவ்னியம் என்னும் பக்கத்தில் இட்டக் கருத்தை இங்கும் இடுகின்றேன். --செல்வா 18:39, 14 பெப்ரவரி 2012 (UTC)
தலைப்பை ஆஃபினியம் என்றோ, ஆஃவினியம் என்றோ மாற்றுவதில் எனக்கு உடன்பாடு உண்டு. இல்லை ஆஃப்னியம் அல்லது ஆஃவ்னியம் என்றுதான் இருக்கவேண்டும் என்றாலும் எனக்கு உடன்பாடே. எது சிறந்தது என்று கூறுங்கள் அப்படியே இங்கும் பிற இடத்திலும் மாற்றிவிடுகின்றேன். ஆஃவினியம் என்பது என் முதல் தேர்வு (pha = ஃப என்றும் fa = ஃவ என்றும் கொள்ளலாம். தமிழ் ஒலிப்பைப் பொருத்துத்தான் எழுத்துக்கூட்டல் இருக்கும் என்பதை அறிவேன் (எனவே pha, fa ஆகிய இரண்டும் ஒரே ஒலிப்புதான்). ஆனால் நுட்பமாய் இப்படியும் ஆங்கிலத்தோடு தொடர்பு ஏற்படுத்திப் பயன்படுத்தலாம். Helen என்று ஆங்கிலத்தில் எழுதுவது ஒரு கிரேக்கப் பெயர், அதன் கிரேக்க வடிவம் Ἑλένη எலென், ; Hippaarchus என்னும் கிரேக்க அறிஞர் பெயரை கிரேக்க மொழியில் Ἵππαρχος, Hipparkhos என்று எழுதுகிறார்கள். இத்தாலியர் Ipparco di Nicea என்று எழுதுகிறார்கள். நாம் இப்பார்க்கசு என்று எழுதினால் ஒரு பிழையும் இல்லை. Hippocrates என்னும் கிரேக்க அறிஞரின் பெயர் கிரேக்க மொழியில் Ἱπποκράτης (Hippokrátēs), இத்தாலிய மொழியில் Ippocrate di Coo, கிரேக்க மொழிக் கட்டுரையைப் பாருங்கள் (Ιπποκράτης), நாம் இப்போக்கிரட்டீசு என்று எழுதினால் ஒரு பிழையும் இல்லை). தமிழில் H என்னும் எழுத்துக்கு அடுத்து வரும் உயிர் எழுத்தைக் கொண்டு எழுதினால் பிழை இல்லை. இதுவே தமிழ் முறையும் (அனுமன், அரி, அரன், இரணியகர்பன், இதோளம், இந்து, இந்தி, இமையமலை, இதம்....). இதுவே எளிதானது அனைவரும் இயல்பாய் ஆளக்கூடியது. எனவே, யாருக்கும் மறுப்பு இல்லை எனில் ஆஃவினியம் என மாற்றுகின்றேன். இல்லை வேறு விதமாக எழுதவேண்டும் எனில் தெரிவியுங்கள். --செல்வா 18:31, 14 பெப்ரவரி 2012 (UTC)
ஆவினியம், ஆபினியம் என்று எழுதுவதிலும் எனக்கு மறுப்பு இல்லை.--செல்வா 18:34, 14 பெப்ரவரி 2012 (UTC)

தலைப்பை மாற்றும்பொழுது[தொகு]

சூர்யா, அருள்கூர்ந்து தலைப்பை மாற்றும்பொழுது, உரையாடல் நடந்துகொண்டிருந்தால், அதனைக் கவனித்து அங்கு உருவாகும் கருத்துக்கு ஏற்ப மாற்றுங்கள். த்லைப்பை மாற்ற வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அண்மையில் ஃகாவ்னியம் என்னும் கட்டுரையை நான் உருவாக்கிக்கொண்டிருக்கும் பொழுதே (அதை நான் இன்னும் முடிக்கக்கூட இல்லை :) ), அதன் தலைப்புப் பற்றிய உரையாடல் நடந்துகொண்டிருக்கும்பொழுதே, மறுமொழிகள் ஏதும் தரும் முன்னரே ஏன் இத்தனை நெருக்கடியுடன் மாற்றியுள்ளீர்கள் என்று தெரியவில்லை!--செல்வா 18:52, 14 பெப்ரவரி 2012 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஆஃபினியம்&oldid=1531767" இலிருந்து மீள்விக்கப்பட்டது