பேச்சு:அவெஸ்தான் மொழி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இம்மொழியைத் தமிழில் அவெத்தான் மொழி என்று குறிப்பது பொருந்தும். Zoroaster என்பதைத் தமிழில் சோராசித்தர் அல்லது சராசித்தர் எனலாம். அவெத்தான் மொழியில் இவருடைய பெயரை Zarathustra (/ˌzærəˈθuːstrə/ ZARR-ə-THOOS-trə) என்கிறார்களாம். சரத்தூஃச்ட்ரா அல்லது சரத்தூழ்'ச்ட்ரா என்பதாகும். (ஃச = Sa). ஆங்கிலத்தில் Zoroaster (pronounced /ˌzoʊrɵˈæstər/ ZORE-oh-AS-tər) என்கின்றனர். தற்காலப் பாரசீக மொழியில் Zartosht (Urdu and Persian: زرتشت) என்கின்றனராம். எனவே நாம் தமிழில் சராத்தர், சராத்தூரா, சோராத்தர், சோராசித்தர், சராசித்தர் என்று தமிழுக்கு உகந்தவாறு ஒரு பெயரால் குறித்தால் போதும். அவெத்தா என்னும் நூலும், அவர்கள் மொழியாக அவெத்தா மொழியும் அப்படியே. அவெசித்தா, அவெசுத்தா என்றும் எழுதலாம். ஆனால் அவெத்தா என்பதே எளிமையானது. சாத்திரம் என்னும் சொல்லைப்போலவே இதனையும் குறிக்கலாம். --செல்வா 19:04, 18 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அவெஸ்தான்_மொழி&oldid=633302" இலிருந்து மீள்விக்கப்பட்டது