பேச்சு:அலெக்சாண்டர் கிரகாம் பெல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பை அலெக்சாண்டர் கிரகாம் பெல் என்றே வைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். தமிழில் அப்படியே எழுதப்பட்டு வந்துள்ளது. மற்றும், Graham என்பது ஆங்கிலேயர்கள் பலரும் பல விதமாக உச்சரிப்பார்கள். கிறயம், கிரேயம், கிராம் என்பார்கள். க்ரஹாம் என்பார்கள். ஆங்கிலேயர்கள் ஒரு விதமாகவும், அமெரிக்கர்கள் ஒரு விதமாகவும் உச்சரிப்பார்கள். அவுஸ்திரேலியர்கள் க்ராஹாம் (ஹா மெலிதாக, ஆனால் ஓரளவு கேட்கக் கூடியதாக இருக்கும்) என உச்சரிப்பார்கள். எது எப்படியிருப்பினும் கிரகாம் அல்லது கிரஹாம் எனவே தமிழில் எழுதப்படுதல் நல்லது.--Kanags \பேச்சு 09:51, 22 மே 2008 (UTC)[பதிலளி]

அலெக்சாண்டர் கிரகாம் பெல் என்ற தலைப்புக்கு நகர்த்தலாம்--ரவி 11:35, 22 மே 2008 (UTC)[பதிலளி]
Graham என்பதற்கு 'கிராம் என்பது நெருக்கமான ஒலிப்பு. கிரகாம் என்று நாம் கூறுவது தவறு (இங்கே கனடா, வட அமெரிக்காவில் கேட்ட அளவில்). கிராம் என்றே இருக்கலாம் என்பது என் நினைப்பு. தமிழர்கள் ˘சாடர் (solder) என்பதை ˘சோல்டர் என்றும், sew (தைப்பது, ˘சோ அல்லது ஸோ) என்பதை ˘சியூ என்றும் தவறுதலாக ஒலிப்பது போல இந்த கிரகாம் என்பது ஒரு தவறுதலான ஒலிப்பு (கனடா, வட அமெரிக்கா ஒலிப்போடு ஒப்பிட்டுப்பார்க்கும் பொழுது). --செல்வா 15:41, 22 மே 2008 (UTC)[பதிலளி]
பார்க்க/கேட்க: Graham. நன்றி.--Kanags \பேச்சு 21:04, 22 மே 2008 (UTC)[பதிலளி]
என் காதுகளுக்கு 'கிரா(ய்)ம் என்றுதான் கேட்கின்றது. அவர்கள் கொடுத்துள்ள ஒலிப்புக் குறிப்பும்: /ˈgreɪəm, græm/ Show Spelled Pronunciation[grey-uhm, gram] தெளிவாக gram என்றே குறித்தும் உள்ளனர். grey-uhm என்பதும் மிகமிக நெருக்கமாக 'கிரா(ய்)ம் என்பதுதான். பலரும் கிரகாம் என்று இருக்க வேண்டும் என்றால், எனக்கும் ஒப்புதல்தான்,. ஆனால் 'கிராம் என்று இருப்பதே சரியானதாகவும், நல்லதாகவும் இருக்கும் என்று நினைக்கிறேன். நான் படிக்கும் பொழுதும் கிரகாம் பெல் என்ருதான் படித்தேன், ஆனால் அது தவறு என்று இங்கு (கனடாவுக்கு) வந்தபின்தான் தெரியும். ஒரு துணுக்குச் செய்தி. அலெக்˘சாண்டர் 'கிராம் 'பெல் அவர்கள் முதன்முதல் தொலைபேசியது ஒன்ட்டாரியோ வில் உள்ள பாரிசு என்னும் நகரில்தான். இதுவே உலகின் முதல் நெடுந்தொலைவு தொலைபேச்சு. இந்த பாரிசில் இருந்துதான் நாங்கள் வாழும் கிட்சனர்-வாட்டர்லூ பகுதிக்குத் தொலைபேசி சேவைகள் வழங்கும் அலைபரப்பகம் உள்ளது. அலெக்˘சாண்டர் 'கிராம் 'பெல் வாழ்ந்த வீடும், அங்கு அவர் செய்த கருவிகளும் இங்குள்ளன. இன்னும் ஒன்ட்டாரியோவுக்கோ, பார்சு, ஒன்ட்டாரியோவுக்கோ கட்டுரைகள் தமிழ் விக்கியில் இல்லை!! எழுதவேண்டும்!--செல்வா 21:25, 22 மே 2008 (UTC)[பதிலளி]

"Graham" is a pretty common name in America (probably in Canada and UK too)... I've never heard the "h" pronounced to this point, that's why I changed it. At least here in the southern US it is normally pronounced "gram" or sometimes "gra-yem". Werklorum 21:50, 22 மே 2008 (UTC)[பதிலளி]

இப்பொழுது இருக்கும் பெயரை மாற்ற வேண்டும் என்பதற்காகக் கூறவில்லை, ஆனால் இவருடைய பெயரை அலெக்ஃசாண்டர் கிராம் பெ'ல் என்றால் ஒலிப்புத்துல்லியத்துடன் இருக்கும். ஒலிப்புத்துல்லியம் நம் மொழியில் இயன்றவாறுதான் பார்க்க வேண்டும். ஒலிப்புத்துல்லியத்தை அளவுக்கு அதிகமாக வலியுறுத்தவில்லை. நாம் Alexander Graham Bell என்று உரோமன் எழுத்துகளிலேயே எழுதி ஒலித்தாலும் நாம் கூறுவது ஆங்கிலத்தைத் தாய்மொழியாய்க் கொண்டவர்கள் காதுகளுக்கு வேறாகக் கேட்கும். நாம் எழுதுவது நமக்கு, நம் பயன்பாட்டுக்கு என்னும் அடிப்படை உணர்வு முதலில் வலுவாக சிலருக்கு இருப்பதில்லை. --செல்வா 14:27, 17 ஜூலை 2009 (UTC)