பேச்சு:அருளாளர் பட்டம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொருத்தமான கலைச் சொற்கள் படைத்தல்[தொகு]

நேற்று (மே 1, 2011) திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலுக்கு "முத்திப்பேறு பெற்ற பட்டம்" வழங்கப்பட்டது. கத்தோலிக்க திருச்சபையில் ஒருவர் சிறப்பான விதத்தில் கடவுள் நம்பிக்கை உடையவராகவும் பிறரன்புப் பணியில் உயர்ந்தவராகவும் வாழ்ந்து இறக்கும்போது பிறரும் அவருடைய வாழ்க்கைப் பாணியைக் கடைப்பிடிக்கும் விதத்தில் தூண்டுதல் அளிக்கும் வகையில் அவருக்குச் சிறப்புப் பட்டங்கள் அளிப்பது மரபு. இப்பட்டங்கள் அளிக்கும் சடங்குகள் இரண்டு:

  • Canonization
  • Beatification

இவற்றுள் "Canonization" என்பதன் நேரடிப் பொருள் "அதிகாரப்பூர்வமான பட்டியலில் சேர்த்தல்" என்பதாகும். அதாவது, "புனிதர்" ("தூயவர்") என்னும் பட்டியலில் சேர்த்தல். இதைத் தமிழ்க் கத்தோலிக்கர் "புனிதர் பட்டம் வழங்கும் சடங்கு" என்பர். இவ்வாறு பட்டியலில் சேர்க்கப்பட்டவர் "புனிதர்" ("தூயவர்") (Saint) என்று அழைக்கப்படுவார். பெயருக்கு முன்னால் இது "புனித" ("தூய") என்றாகும்.

"Beatification" என்னும் சொல் ஒருவர் "விண்ணகப் பேற்றினை அடைந்துள்ளார்" என்று அறிவிக்கும் சடங்கு ஆகும். இதைத் தமிழ்க் கத்தோலிக்கர் "முத்திப்பேறு பெற்ற பட்டம் வழங்கும் சடங்கு" என்பர். இப்பட்டம் பெற்றவரின் பெயர் முன் "Blessed" என்னும் அடைச்சொல் இடப்படும். தமிழில் "முத்திப்பேறு பெற்ற" என வரும். Blessed என்னும் சொல் "பேறுபெற்ற" என்னும் பொதுப்பொருள் தரும் சொல்லே.

எனவே, 2011, மே முதல் நாள் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலுக்கு முத்திப்பேறு பெற்ற பட்டம் வழங்கப்பட்டது. இனிமேல் அவரைத் திருச்சபை "முத்திப்பேறு பெற்ற (திருத்தந்தை) இரண்டாம் யோவான் பவுல்" (அருளப்பர் சின்னப்பர் - அருள் சின்னப்பர்) என்று அழைக்கும்.

  • "அருளாளர்" என்னும் சொல் "அருள்" பெற்றவர், "இறையருள் கொண்டவர்" என்னும் பொதுப் பொருளைத் தரும். தமிழகத்தில் கிறித்தவ மறைசார்ந்த குருவை "அருள்திரு" என்று அழைப்பது வழக்கம். இது Reverend என்று ஆங்கிலத்தில் வரும் மரியாதைச் சொல்லுக்கு இணையாகக் கொள்ளப்படுகிறது. Very Reverend, Most Reverend போன்றவை "பேரருள்திரு" என்று வழங்கப்படுகின்றன. அதுபோலவே கிறித்தவப் பெண் துறவி "அருள்சகோதரி" என அழைக்கப்படுகிறார்.

இவ்வாறு "அருள்" என்னும் சொல் "மறைசார்ந்த" என்னும் பொதுப் பொருளில் வழங்கப்படுகிறது. ஆனால், ஆங்கிலத்தில் உள்ள "Saint" மற்றும் "Blessed" என்னும் சொற்களுக்குத் துல்லியமான தமிழ்ச் சொல் வழக்கு தேவை. எனவே,

  • Saint Peter, Saint Paul - தமிழில் "புனித பேதுரு", "புனித பவுல்"
  • Blessed John Paul II - தமிழில் "முத்திப்பேறு பெற்ற இரண்டாம் யோவான் பவுல்"

என்று வருவதே பொருத்தமாகும்.

மேலும், பெயருக்குப் பின்னால் "II", "III" "IV" என வருகின்ற எண்கள் தமிழில் "இரண்டாம்", "மூன்றாம்", "நான்காம்" என வருவதே முறை. எ.டு: "மூன்றாம் குலோத்துங்க சோழன்", "இரண்டாம் உலகப் போர்" என்பதே தமிழ் முறை. "குலோத்துங்க சோழன் III" என்பதும் "உலகப் போர் II" என்பதும் பிறமொழி வழக்கம். --பவுல்-Paul 16:38, 2 மே 2011 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அருளாளர்_பட்டம்&oldid=756033" இலிருந்து மீள்விக்கப்பட்டது