பேச்சு:அரசியல் விடுதலை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Political Freedom என்பதைப் பொதுவாக அரசியல் உரிமை என்றே தமிழாக்கம் செய்வதுண்டு. When political freedom is suppressed..போன்ற வரிகள் அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் என்றே மொழிபெயர்க்கப்படுகின்றன. --மணியன் (பேச்சு) 14:38, 2 சூலை 2012 (UTC)[பதிலளி]

மணியன், விடுதலை என்பது பல்வேறு உரிமைகளை உள்ளடக்கியது என்று புரிந்து கொண்டுள்ளேன். கட்டுரையின் வார்ப்புருவில் பல்வேறு உரிமைகள் குறிப்பிடப்பட்டுள்ளதையும் காணலாம். உரிமை ஒருவருக்கு உரித்தானதைக் குறிக்கிறது. அது மறுக்கவும் படலாம். ஆனால், விடுதலை என்பது விடுபட்ட நிலையைக் குறிக்கிறது என்று கருதுகிறேன். விடுதலையின் மற்ற வகைப்பாடுகளைக் காணும் போது பொருளாதார விடுதலை போன்ற சொற்கள் நன்கு பொருந்துகின்றன. சுதந்திரம் என்ற (வட) சொல்லும் பொருந்தி வரும். --இரவி (பேச்சு) 15:24, 2 சூலை 2012 (UTC)[பதிலளி]
கட்டுரைத் தலைப்பை விடுதலை (அரசியல்) என மாற்றலாமா? விடுதலை பக்கவழியையும் பாருங்கள்.--Kanags \உரையாடுக 22:53, 2 சூலை 2012 (UTC)[பதிலளி]
அடைப்புக்குறி இட வேண்டாம். இதே தலைப்பை ஒத்த குடிசார் விடுதலை, பொருதாளாதார விடுதலை முதலியவை முழுமையாக எழுதப்படும்போது நிறைவான பொருளைத் தரும்--இரவி (பேச்சு) 07:34, 3 சூலை 2012 (UTC)[பதிலளி]
சிறீதரன், விடுதலை (அரசியல்) என தலைப்பை மாற்றலாம். மணியன், நீங்கள் சொல்வது புரிகின்றது. ஆங்கிலத்தில் பயன்படும் பல தொடர்பான சொற்களுக்கு ஈடான மரபு தமிழில் இனிமேல்தான் உருவாக்க வேண்டும். முழு நிறைவும் கிட்டுவது கடினம் (மொழியின் தன்மையால் அன்று, கல்விசார் புழங்கும் மரபு இல்லாமையால்). இங்கே Liberty, freedom, independence முதலான சொற்கள் ஒன்றுடன் ஒன்று முரண்படும் வாய்ப்புள்ளது. ஆங்கிலத்திலும் அவர்கள் இவற்றுக்கான பொருள்கோள் (பொருள் கொள்ளும்) மரபுகளை அண்மையில்தான் பெற்றனர். உரிமை என்பது ஆங்கிலத்தில் rights என்பதோடு நாம் தொடர்பு படுத்திப் பயன்படுத்துகின்றோம். அனார்க்கிசம் (anarchism) என்னும் ஆங்கிலச்சொல்லும் அவற்றின் பல்வேறு வகைகளும் குழப்பத்தை உண்டுபண்ணுவன. எ.கா. இங்கே பார்க்கவும். தொடர்பான தலைப்புகளில் கட்டுரை எழுதி ஒன்றுக்கு ஒன்று முரண்படாதவாறும், நமக்குப் பொருள் தெளிவாக இருக்குமாறும் அமைக்க முற்படுவோம். வேன்டியவாறு திருத்திக்கொள்வோம். இன்னும் நாடு, "state" ("nation state"), country, nation, soverign state போன்ற பற்பல சொற்களுக்கு மரபான (கல்விசார் மரபான) சொற்கள் இருப்பதாகத் தெரியவில்லை. பழக்கப்பட்டதாகக் அக்ருதப்படும் ஆங்கிலச்சொல்லாகிய democracy முதலான சொற்களுக்கும் கூட ஆங்கிலத்தில் விளக்கங்கள் பலவாறு கூறப்படுகின்றன. இவற்றை எல்லாம் தக்கவாறு புரிந்துகொன்டு கருத்தாடும் மரபு தமிழர்களிடையே (கல்விக் கழகங்களிலாவது) தோன்றும் வரை குழப்பம் அதிகமாகவே இருக்கும். ஆங்கிலத்திலும் இக்குழப்பம் உண்டு, கருத்து மாறுபாடுகள் உண்டு. ஆங்கிலம் அறிந்தவர்கள் அனைவரும் ஒரே மாதிரி புரிந்துகொள்வதும் இல்லை. எனவே இயன்றவாறு முரண்படாத வகையிலும், பொருள் புரியுமாறும் எழுத முற்படுவோம்.--செல்வா (பேச்சு) 00:24, 3 சூலை 2012 (UTC)[பதிலளி]
ஒரு மொழியில் உள்ள கருத்தை இன்னொரு மொழியில் சொல்லும்பொழுது ஒரே சொல் பல்வேறு கருத்துகளையும் எதிரொலிக்ககூடும். இடாய்ச்சு மொழியில் Gesellschaft என்னும் சொல் society, corporation, incorporation, party [social event], organization, association (social or economical, commerce), company (commerce), body [society, organization], circle [of persons], society (social), troupe (drama, theatre) (இங்கே பார்க்கவும்). ஆகிய அனைத்தையும் குறிக்கும். இங்கே விடுதலை அல்லது உரிமை அல்லது தன்னுரிமை, தன்னாட்சி, முற்றுரிமை முதலான சொற்களும் அப்படி பலவாறு பொருள் சுட்டும் நிலையில் உள்ளன. இரவி சொன்னது போல சூழல்களில் பொருத்திப் பார்த்து பொருள் வரையறை செய்யலாம். --செல்வா (பேச்சு) 00:41, 3 சூலை 2012 (UTC)[பதிலளி]
இரவி,செல்வா,கனகு:உங்கள் விரிவான விளக்கங்களுக்கு நன்றி. ஆங்கில freedom சில நேரங்களில் விடுதலை என்றும் சில நேரங்களில் உரிமை என்றும் மொழிபெயர்க்கப்படுவதைக் கவனத்தில் கொள்ள வேண்டினேன்.freedom of speech கூட பேச்சுரிமை எனப்படுகிறது;பேச்சு விடுதலையும் பொருந்துமாக இருக்கும்.வழக்கில் பேச்சு சுதந்திரம் உள்ளது. இருப்பினும் இரவி கூறுவதுபோல விடுபட்ட நிலைக்கு விடுதலை என்றும் தன்மைக்கு உரிமை என்றும் சீராகப் பேணலாம்.--மணியன் (பேச்சு) 11:20, 3 சூலை 2012 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அரசியல்_விடுதலை&oldid=2828442" இலிருந்து மீள்விக்கப்பட்டது