பேச்சு:அம்பிகா சோனி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கூகுள் தமிழாக்கக் கட்டுரைகளிலேயே ஓரளவு படித்துப் புரிந்து கொள்ளக் கூடியதாக இது அமைந்துள்ளது. மொழிபெயர்ப்பாளருக்கு பாராட்டுகள். ஒருவேளை நுட்ப அல்லது அறிவியல் கட்டுரைகளைக் காட்டிலும் இது போன்ற பொதுத் தலைப்புகளில் தமிழாக்கம் பரவாயில்லையோ என்று எண்ணுகிறேன்.

இருந்தும் இந்தக் கட்டுரையிலும் பல திருத்தங்கள் செய்ய வேண்டியிருந்தது. மொழிபெயர்ப்பாளரும் ஒருங்கிணைப்பாளரும் தயவு செய்து நான் செய்த மாற்றங்களை கண்டு உள்வாங்கிட வேண்டுகிறேன். இவற்றில் சில சிக்கல்கள் (தகவல் சட்டம் மொழிபெயர்க்கப்படாதது, இணைப்புகள் தலைப்புகளுக்கல்லாமல் உருபு ஒட்டுக்களோடு அமைந்துள்ளது போன்றவை) மென்பொருள் வழுக்களினால் ஏற்பட்டவை. எழுத்து, இலக்கண, மொழிபெயர்ப்பு, சொல்வரிசை (en:Parasitic gap) போன்றவற்றை மொழிபெயர்ப்பாளர் கவனத்தில் கொள்ள வேண்டும். -- சுந்தர் \பேச்சு 07:28, 7 ஏப்ரல் 2010 (UTC)

நன்றி சுந்தர். தாங்கள் பரிந்துரைத்த மாற்றங்களை ஏற்றுக்கொள்கிறோம். நன்றி -- சாந்த குமார்
நன்றி, சாந்த குமார். -- சுந்தர் \பேச்சு 12:27, 9 ஏப்ரல் 2010 (UTC)

ஒருங்கிணைந்த இந்தியா[தொகு]

சுந்தர் .வார்ப்புருவில் ஒருங்கிணைந்த இந்திய என்று குறிப்பிட்டு இருப்பதை கவனிக்கவும் . --இராஜ்குமார் 13:10, 9 ஏப்ரல் 2010 (UTC)

பார்த்தேன், இராஜ்குமார். அது undivided India, அதாவது பாக்கித்தான் பிரிவதற்கு முன்பானது. நான் மாற்றியது incredible India, இந்திய சுற்றுலாத்துறையின் விளம்பர வாசகமல்லவா? அதன்பொருள் வியப்பூட்டும் இந்தியா எனலாமா? -- சுந்தர் \பேச்சு 13:15, 9 ஏப்ரல் 2010 (UTC)
nandru . நான் சரியாக கவனிக்க வில்லை. --இராஜ்குமார் 13:18, 9 ஏப்ரல் 2010 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அம்பிகா_சோனி&oldid=1525115" இலிருந்து மீள்விக்கப்பட்டது